நீதிமன்ற காவல் என்றால் என்ன

நீதிமன்ற கட்டுப்பட்டில் கைது செய்யப்பட்டவரை வைத்தலே நீதிமன்ற காவல் ஆகும். கைது செய்யப்பட்ட குற்றவாளியினை பாதுகாப்பு மற்றும் தடுப்பு முறைகள் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்படும் ஒரு முறைமை ஆகும்.

நீதிமன்ற காவல் என்றால் என்ன

நீதிமன்ற காவல் என்பது கைது செய்யப்பட்ட நபரை காவல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைப்பதே நீதிமன்ற காவல் எனப்படும். நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைத்தல் சிறைச்சாலையில் வைப்பதனையே சுட்டிக்காட்டுகின்றது.

நீதிமன்ற காவல் சட்டதிட்டங்கள்

நீதிமன்ற கட்டுப்பட்டில் உள்ள ஒருவரை நீதிமன்ற அனுமதியின்றி காவல் நிலையங்களில் உள்ள சிறைக்கூடங்களில் வைக்ககூடாது.

தடுப்பு காவல் சட்டத்திற்கு இது பொருத்தமற்றதாகும். அதாவது தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை காவல் நிலையத்தில் 24 மணி நேரத்தித்திற்கு மேல் வைக்க முடியும்.

நீதிமன்ற கட்டுப்பாட்டில் கைது செய்யப்பட்ட நபரை சிறையில் அடைப்பதற்கு 15 நாட்கள் வரை மட்டுமே நீதிமன்றம் உத்தரவு அளிக்க முடியும். வழக்கின் புலன் விசாரனை முடியவில்லை என காரணம் காட்டி நீதிமன்ற காவலை நீடிக்க அரசு தரப்பு கேட்டுக் கொண்டால் நீதிமன்ற காவல் நீடிப்பை ஒவ்வொரு 15 நாளுக்கு ஒரு முறை நீடிப்பு செய்ய உத்தரவிடப்படும்.

இவ்வாறாக காணப்படினும் 90 நாட்களுக்குள் விசாரனை முடியவில்லை எனின் காவல் நீடிப்பு செய்ய நீதிமன்றம் மறுத்து கைது செய்யப்பட்டவரை பிணையில் விடும். மேலும் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கக்கூடிய குற்றத்திற்கு 60 நாட்கள் அரசு தரப்பு புலன் விசாரனை செய்து முடித்தல் வேண்டும்.

நீதிமன்ற காவல் மற்றும் காவல் துறை காவல்களுக்கிடையிலான வேறுபாடு

காவல்துறை காவலில் காவல் அதிகாரி ஒருவர் எந்தவொரு குற்றவாளி அல்லது சந்தேகத்திற்குரிய நபரை அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக தனது காவலில் தடுத்து வைப்பதற்கு முடியும். ஆனால் நீதிமன்ற காவலில் குற்றம் சாட்டப்பட்ட நபர் சம்மந்தப்பட்ட மஜிஸ்திரேட்டின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படுவார்.

நீதிமன்ற காவலில் உள்ள நபரானவர் நீதிமன்றம் பிணை வழங்கும் வரை சிறையிலேயே அடைக்கப்பட்டு காணப்படுவர். ஆனால் காவல் துறை காவலில் உள்ள ஒருவர் 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட மஜிஸ்திரேட்டின் முன் ஆஜராக வேண்டும்.

காவல் துறை காவலில் உள்ள சந்தேக நபர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் நீதித்துறையினூடாக நீதிமன்றத்தில் ரத்துசெய்யப்படலாம். ஆனால் நீதிமன்ற காவலில் அவ்வாறு காணப்படுவதில்லை.

காவல் துறை காவலில் காவல் அதிகாரி மூலமாகவே சந்தேக நபரை கைது செய்கின்றனர். ஆனால் நீதிமன்ற காவலானது வழக்கறிஞரின் ஊடாகவே இடம் பெறுகின்றது.

காவல் துறை காவலில் காவல் பாதுகாப்பு காணப்படுகின்றது. அதே போன்று நீதிமன்ற காவலில் நீதிபதியினூடாக வழங்கப்படுகின்றது. இவ்வாறாக காவல் துறை காவல் மற்றும் நீதிமன்ற காவலுக்கிடையிலான வேறுபாட்டினை அவதானிக்க முடிகின்றது.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியை தண்டிப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் நீதிமன்ற காவலில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க மஜிஸ்திரேட்டிக்கே அதிகாரம் உள்ளது.

நீதிமன்ற காவலில் மஜிஸ்திரேட் அனுமதியின்றி அதிகாரிகளை விசாரிக்க முடியாது. ஆனால் காவல் துறை காவலில் யாருடைய அனுமதியும் இல்லாமல் அதாவது நீதிபதியாக இருந்தாலும் சரி குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறை அதிகாரியால் விசாரிக்க முடியும்.

எனவேதான் நீதிமன்ற காவலில் அல்லது காவல் துறை காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் சந்தேகத்திற்குரியவராக இல்லாவிடின் அவர் காவலில் வைக்கப்படுகின்றார்.

மேலும் அவர்மீது குற்றம் சாட்டப்படுமேயானால் அவர்களை கைது செய்து காவல் துறை மற்றும் நீதிமன்ற காவல்களில் வைக்கின்றனர். இந்த இரண்டு துறையும் குற்றங்களை தடுக்க அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளே ஆகும்.

Read more: அமலாக்கத்துறை என்றால் என்ன

ஊரக வளர்ச்சி துறை என்றால் என்ன