ஆரம்ப காலங்களில் தலைவன் அல்லது அரசன் இறந்த பின்னர் பாடப்படுவதற்காக தோற்றம் பெற்ற ஒன்றாகவே காணப்படுவது கையறு நிலை பாடல்களாகும்.
இப்பாடல்களின் ஊடாக ஒருவருடைய இழப்பினை பற்றி விளங்கி கொள்ள கூடியதாகவே காணப்படுகின்றது. இந்த கையறு நிலையானது புறநானூறு பாடல்களில் இடம் பெறுவதனையும் காணலாம்.
Table of Contents
கையறு நிலை என்றால் என்ன
கையறு நிலை என்பது தலைவனோ அல்லது தலைவியோ இறந்த பின்னர் அவர்களை சார்ந்தோர் எதுவும் செய்வதறியாமல் திகைத்து வருந்தியதை கூறுகின்ற ஓர் முறைமையே கையறு நிலை எனலாம்.
இது பெரும்பாலும் புறநானூற்று பாடல்களில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கையறு நிலை என்பது துயரப்பட்ட ஒரு நிலை அல்லது கைவிடப்பட்ட ஒரு நிலை என்பதனையும் குறிப்பிடலாம்.
கையறு நிலையும் அதன் முக்கியத்துவமும்
கையறு நிலையானது மன்னனின் வீரம் மற்றும் கொடை போன்றவற்றை பாடுவதற்கு துணைபுரிகின்றது. இதனூடாக சிறந்த முறையில் அம் மன்னனை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
மேலும் தலைவன் மற்றும் தலைவி இறந்ததன் பின்னர் அவர்களின் பிரிவினை ஏற்றுக் கொள்ளாமல் தனது துயரத்தினை வெளிப்படுத்துவதற்காக கையறு நிலையானது துணை புரிகின்றது.
கையறு நிலையினூடாக ஒரு புலவனானவன் மன்னன் மீது வைத்துள்ள பாசத்தினை எடுத்துக் கூறுவதற்கு மிக முக்கியமானதொன்றாக இது காணப்படுகின்றது.
அதாவது மன்னன் இறந்ததன் பிற்பாடு அவர் மீது வைத்துள்ள பாசத்தினை வெளிப்படுத்துவதற்காக கையறு நிலையில் பாடல்களை பாடியுள்ளமை கையறு நிலையின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வாறானவற்றின் ஊடாக சங்ககாலம் மற்றும் சங்கமருவிய கால பாடல்களில் பல்வேறு கையறு நிலையில் பாடல்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நந்திக் கலம்பகமும் கையறு நிலையும்
நந்திக் கலம்பகம் நூலில் கையறு நிலை என்ற பாடலானது சிறந்த முறையில் கையறு நிலையினை வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதனை குறிப்பிடலாம்.
அதாவது மூன்றாம் நந்தி வர்மனுடைய கொடை, வீரம் போன்றவற்றை பற்றியும், ஒரு தலைவனானவன் இறந்து போனால் எந்த அளவிற்கு துன்பத்தினை ஏற்படுத்தும் என்பது பற்றியும் இந்த கையறு நிலை பாடலானது தெளிவூட்டுகின்றது.
மேலும் தலைவன் இழப்பினை தாங்க முடியாமல் புலவர்களால் பாடப்படும் ஒரு பாடலாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் அப்பாடலடி வருமாறு:
கையறு நிலை
வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்.
இப் பாடலடியினூடாக கையறு நிலையானது வெளிப்பட்டு காணப்படுகின்றது. அதாவது தலைவனது இறப்பினை ஏற்றுக் கொள்ளாமல் கவலையுடன் பாடக்கூடிய பாடலாக இது அமைந்துள்ளது எனலாம்.
அனைவருக்கும் இம் மன்னனுடைய இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமேலேயே காணப்படுவதோடு மிகுந்த கவலையுடனே இப்பாடலை பாடியுள்ளார் என்பதை குறிப்பிடலாம்.
இப் பாடலடியினை பின்வருமாறு விளக்கிக் கூறலாம். அதாவது இவருடைய அழகினை நிலவிற்கு ஒப்பிட்டு கூறுவதோடு இவரது புகழ் இறந்ததன் பின்னர் கடலினை சென்றடைகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இம் மன்னனுடைய வீரமானது இவர் இறந்ததன் பின் காட்டிலுள்ள புலியினை சென்றடையும் என்றும் இறந்த பின் இவருடைய தேகத்தினை செந்தழல் ஆட் கொள்ளும் என்றும் குறிப்பிடுகின்றார்.
இதன் மூலமாக ஒரு புலவனானவன் தன்னுடைய துயரத்தினை வெளிப்படுத்தி ஆறுதல் பெற்றுக் கொள்ள முடியாத கையறு நிலையினை வெளிப்படுத்துகின்றார் எனலாம்.
Read more: விடுகதைகளும் விடைகளும்