ஐம்பொறிகள் யாவை – ஐம்புலன்கள்

imporigal tamil

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என்று ஐம்புலன்களைக் கொண்டு உலகை உணர்கிறோம். ஐம்பொறிகளையும் அவற்றால் உணரக்கூடிய ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன் இந்த உலகத்தை வெல்வான் என்பது சான்றோர் வாக்கு.

ஆகவேதான் ஐம்பொறிகள் என்பதும் ஐம்புலன்கள் என்பதும் மனிதனுக்கு முக்கியமாகின்றது.

ஐம்பொறிகள் எனப்படுவது நமது உடலின் இயக்கத்திற்கு தேவையான மிக முக்கியமான உறுப்புக்களாகும். ஐம்பொறிகளுக்குள் அடங்கும் கண், செவி, வாய், மூக்கு, மெய் ஆகியன நமது அறிவை இயக்கும் பொறிகள் ஆகும். இவற்றின் வழியாகவே மெஞ்ஞானத்தைக் கண்டுணர முடியும்.

ஐம்பொறிகள் யாவை

  1. கண்
  2. செவி
  3. வாய்
  4. மூக்கு
  5. மெய்

ஐம்புலன்கள்

நமது உடல் உறுப்புக்களின் மூலம் வெளிப்படும் உணர்வுகளே ஐம்புலன்கள் எனப்படுகிறது. அந்த வகையில்,

  1. பார்த்தல்
  2. கேட்டல்
  3. சுவைத்தல்
  4. மணத்தல்
  5. உணர்தல்

ஐம்பொறிகள் பயன்பாடுகள்

  1. கண் – பார்த்தல்
  2. காது- கேட்டல்
  3. மூக்கு- மணத்தல்
  4. வாய் – சுவைத்தல்
  5. மெய் – உணர்தல்

மெய் (உடல்)

மெய் என்பது நமது உடலை குறிக்கின்றது. பொதுவாக ஞான வீதியில் நடப்பவனுக்கு உடலை ஒடுக்கவும், புறக்கணிக்கவும், அதனின்று விலகி நிற்கவும் நிறைய சக்தி இருக்கிறது.

ஒவ்வொரு புலன்களும் ஒவ்வொரு சக்கரத்தோடு இணைக்கப்படுகின்றன. அவ்வகையில் மெய்யிற்குரிய சக்கரமாக அனாகதம் குறிப்பிடப்படுகின்றது. இச் சக்கரத்தின் ஆளுமையின் கீழ்த்தான் உடல் இயங்குகின்றது.

ஐம்புலன்களில் ஒன்றான உடல் மூலம் ஏழை எளியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் உதவுதல் வேண்டும்.

மூக்கு

மூக்கு மூலாதாரம் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மனித முகத்தை அழகாக்கி, முழுமைப்படுத்திக் காட்டுவது மூக்கு. மூக்கானது நாம் சுவாசிப்பதற்கு மட்டுமல்லாமல் மனத்தை நுகரவும் அவசியப்படுவதாக அமைகின்றது.

செவி

ஐம்புலனில் ஒன்றான செவியைக் காது என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறோம். இது விஷுத்தி சக்கரத்தின் கீழ் இயங்குகின்றது.

கேள்வி ஞானத்தை அடையாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் கேளாத தன்மையுடைய செவிகள்தான் என்கிறது வள்ளுவம். ஐம்புலன்களின் ஒன்றான செவி மூலம் பெரியோர்களின் நற்சொல் கேட்டல் வேண்டும்.

வாய்

ஐம்புலன்களில் ஒன்றாகிய வாயானது நாம் பேசுவதற்கு முக்கியத்துவப்படுவது போல சுவையை உணரவும் முக்கியமாகின்றது. தன்னை அனுப்பியவருக்குப் பழி நேராத வண்ணம் உறுதியோடு இருந்து சொல்லில் பழுது நேராமல் பேச வேண்டியது தூதுவனின் கடமை என்கிறது வள்ளுவம்.

இளங்கோ அடிகளோ நாவின் ஆற்றலுக்குப் புகழ்பெற்ற தூதுவனான கண்ணனை நாவாலேயே புகழச் சொல்கிறார். மேலும் வாய் அடக்கத்தைப் பேணும் போது வீண் விவாதங்கள் தவிர்க்கப்படும்.

கண்

ஐம்புலன்களில் கண்ணுக்குள்ள பெருமை தனிதான். கண்ணானது மணிப்பூரகம் சக்கரத்தின் கீழ் இயங்குகின்றது. சக்கரத்தில் பாதிப்பு, தடை அல்லது தேக்கம் உண்டானால் அதனோடு தொடர்புடைய புலன் தனது இயல்பு நிலையில் இருந்து மாறுபட்டு அழிவுப் பாதைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

கண்களை புலனடக்கம் செய்து கொண்டால் பார்வைத் தெளிவு ஏற்படும், காணும் காட்சிகளின் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும் எனக் கூறப்படுகின்றது.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.
எனும் குறட்பாவின் மூலம் கண்ணாலேயே பேசிக்கொள்ளும் காதலர்கள் வாயால் பேசத் தேவையில்லை என காதலில் கண்ணின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார்.

புராணங்களிலும் கண்கள் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நெற்றிக் கண் உடையவன் பரமசிவன், சிவபெருமானது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பின் மூலம் உதித்தவன்தான் கந்தக் கடவுள் என்பவற்றையெல்லாம் புராணங்கள் எமக்கு எடுத்தியம்புகின்றன.

You May Also Like :
ஆற்றுப்படை நூல்கள்
மூவகை மொழிகள் யாவை