உடல் சூட்டை குறைக்க வழிகள்

Udal Soodu Kuraiya Tips

பெண்கள் ஆண்கள் என இருபாலரும் இன்றைய காலப்பகுதியில் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த பதிவில் உடல் சூட்டை குறைக்க வழிகள் என்னவென்று பார்க்கலாம்.

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகள்

  • சிறுநீர் தொற்று அடிக்கடி ஏற்படுதல்.
  • தீராத பொடுகு தொல்லை.
  • வலிகளுடன் கூடிய முகப்பரு.
  • அதிகமான கண் எரிச்சல்.
  • தூக்கம் இன்மை.
  • உடல் எரிச்சல்.
  • அடிக்கடி வாய்ப்புண் வருதல்.
  • முடி உதிர்வு பிரச்சனை.

உடல் சூடு குறைய எளிய வழிகள் (Udal Soodu Kuraiya Tips)

நம் வாழ்வியலில் நடவடிக்கைளை சரியாக பின்பற்றுவதன் மூலம் உடல் சூட்டை இலகுவாக குறைக்க முடியும்.

இரவு தூங்கி எழுந்த பின்பு தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் உடல் சூட்டை தணிக்க முடியும்.

வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் ஊற வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது இன்னும் சிறந்தது.

இரவில் சாதரணமாக பித்தம் அதிகரிக்கும் தூங்காமல் இருந்தால் பித்தம் இன்னும் அதிகரிக்கும். இரவில் சரியான தூக்கம் அவசியம். பித்தம் அதிகரித்தால் உடல் சூடு அதிகரிக்கும்.

உடல் சூட்டை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்

வெந்தயம்

காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயம் விழுங்கி வந்தால் உடல் சூட்டை எளிதாக தணிக்கலாம்.

வெந்தயம் உடல் சூட்டை தணிப்பதுடன் மலசிக்கல் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகின்றது.

தர்ப்பூசணி

அதிக நீர்சத்துக்களை கொண்ட உணவுகளில் முதன்மையானது தர்ப்பூசணி. உடலில் நீர் வறட்சியை போக்க அதிக நீர்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும்.

உடல் வறட்சியை போக்கவும் உடல் உஷ்ணத்தை போக்கவும் தர்ப்பூசணி அற்புதமான பழம்.

முலாம் பழம்

தர்பூசணிக்கு அடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கக்கூடிய பலம் முலாம் பழம் தான். இது அதிக குளிர்ச்சியான பழம் என்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளரிப்பழம்

வெயில் காலங்களில் அதிகம் கிடைக்க கூடிய வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளரி உடல் சூட்டை குறைப்பதுடன் இதில் அதிகம் உள்ள நார்சத்துக்கள் செரிமானத்தையும் எளிதாக்கும்.

இளநீர்

எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் பானம் இளநீர். உடல் சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கியமானது.

சிலருக்கு உடல் இயற்கையாகவே உஷ்ணமாக இருக்கும் அவர்கள் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் புத்துணர்சியாகவும் இருக்கும்.

நொங்கு

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அற்புதமான உணவு நொங்கு. இதில் நீர்சத்துக்கள் மட்டுமல்லாமல் கனிம சத்துக்களும் நிறைந்துள்ளன.

நொங்கு உடல் சூட்டை தணிப்பதுடன் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.

பதநீர்

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் இன்னொரு அற்புதமான உணவு பதனீர்.

பதனீர் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றது.

கம்பங்கூழ்

உடல் சூட்டை தணிக்க நம் முன்னோர்கள் அதிகம் எடுத்துக்கொண்ட உணவு கம்பங்கூழ்.

கம்பங்கூழ் உடல் சூட்டை தனிப்பதுடன் உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.

தவிர்க வேண்டியவை.

மிகவும் காரமான உணவுகள் அதிகம் எடுத்துக் கொண்டாலும் உடல் சூடு இன்னும் அதிகமாகும்.

மிகவும் குளிரான நீராகங்கள் மற்றும் உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கும்.

மது மற்றும் புகைப்பிடித்தல் உடல் சூட்டை அதிகரிக்கும். பழக்கம் உள்ளவர்கள் அதனை நிறுத்துவது உடல் சூட்டை குறைக்க மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

மேலே கூறப்பட்ட உடல் சூட்டை குறைக்க வழிகள் உங்களுக்கு உடல் சூட்டை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்