ஆல்பக்கோடா பழம் பயன்கள்

alpakoda palam benefits in tamil

இந்த பழம் கருநிறமாக இலந்தைப் பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச் சுவையைக் கொண்டது. பலவிதமான வண்ணங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கக் கூடியது.

கோடை முழுவதும் கிடைக்கக் கூடிய தனித்துவமான பழங்களில் ஆல்பக்கோடா பழமும் ஒன்றாகும். பொதுவாக இப் பழம் பிளம்ஸ், ஆல்பக்கோடா மற்றும் ஆலு புகாரா பழம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுன்கிறது.

எனினும் தமிழ் மற்றும் தெலுங்கில் அல்பக்கோடா என்றும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஆலுபுகாரா, பிளம்ஸ் என்றும் பெங்காலியில் சூக்னோ கூல் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆல்பக்கோடா பழம் பயன்கள்

  • இரத்த சோகையைத் தடுக்கின்றது – இரும்புச்சத்து இதில் அதிகமாகக் காணப்படும் காரணமாக இரத்த சோகையை எளிதில் குணமாக்கவல்லது. இரும்புச் சத்தை சரியாக உறிஞ்சுவதற்கு உடலுக்கு வைட்டமின் சி தேவைப்படுகிறது. ஆல்பக்கோடா பழத்திலுள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை நன்கு உறுஞ்சிக் கொள்ள உதவுகிறது.
  • மலச்சிக்கலை நீக்கும் – செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் மலச்சிக்கலையும் போக்குகின்றது. இதில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளதால் இதனை உணவின் பின் எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • காய்ச்சலின் போது ஏற்படும் வாய் குமட்டலைச் சரி செய்கின்றது – ஆல்பக்கோடா பழத்தில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை காணப்படுவதால் இதனை வாயில் போட்டு மென்றால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும் – உணவில் உள்ள இரும்பு சத்தானது உடலை வலிமை பெறச் செய்வதுடன் உடல் ஆரோக்கியத்தையும் பேணுகின்றது.
  • வயிற்று புண்களை ஆற்றும்.
  • இரத்த அழுத்தம் சீராகும் – பதப்படுத்தப்பட்ட பிளம்ஸ் பழங்களை உட்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பையும் சீராக்கும்.
  • உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது – அல்பக்கோடா பழம் பசியை அடக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை அதிகரிக்காது. மேலும் கொழுப்பு சத்தை குறைக்க கூடியதாக ஆல்பக்கோடா உள்ளதால் உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடை சீராகப் பேண உதவுகின்றது. உடல் எடை குறைபவர்கள் ஆல்பக்கோடா பழத்துடன் கொள்ளு சேர்த்து எடுத்துகொண்டால் உடல் எடை குறையும்.
  • உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்த கூடியது – சொறி சிரங்கு உள்ளவர்கள் ஆல்பக்கோடா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இவற்றை குணப்படுத்தலாம்.
  • தொண்டை வறட்சியைச் சீர்செய்கின்றது – காய்ச்சலினால் உடலில் நீர்ச்சத்து குறைவதால் தொண்டையில் வறட்சி உண்டாகும். தொண்டை வறட்சியை தடுத்து உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க இந்த ஆல்பக்கோடா உதவும். தொண்டை வறட்சி சட்டென்று குறைய இந்த ஆல்பக்கோடா பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
You May Also Like :
மருதாணி இலையின் பயன்கள்
ரணகள்ளி மருத்துவ பயன்கள்