இந்த பதிவில் வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள் பதிவை காணலாம்.
வாழ்க்கையில் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் அறிவையும், நீங்கள் பழகும் மனிதர்கள் அனுபவத்தையும் கற்றுத்தருகிறார்கள்.
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல.. விழுந்த போதெல்லாம் தன்னம்பிக்கையுடன் எழுந்தான் என்பதே பெருமை.
வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க.. அது நிலாவை போன்றது அதில் வளர்பிறை, தேய்பிறை என அனைத்தும் இருக்கும். ஒருநாள் மறைந்தும் போகும்.
- வாழ்க்கை கவிதை வரிகள்
- Valkai Thathuvam Kavithai In Tamil
தனிமை கவிதை வரிகள்
Table of Contents
வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்
வாழ்க்கை கவிதை வரிகள்
எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டும் என அலைந்து
எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து
உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து
உலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான்
வாழ்க்கை
வர்ணங்கள் நிறைந்த வானவிலாய்
பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்
பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாய் பல
அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை
பட்சிகளும் பூச்சிகளும்
புட்களும் பதர்களும் பெற்றிடாத
புனிதமான வாழ்க்கைதனை
பெருமாந்தர்கள் பெற்றிடுவார்
வாழ்க்கை எனும் பூந்தோப்பில்
பூக்களும் முட்களும் உண்டு
பல வலிகளைக் கடந்தாலே
பூக்களை கொய்ய முடியும்
மானிடராய் பிறப்பதற்கே நல்
மாதவம் செய்திடல் வேண்டும்
மனித வாழ்க்கை போல
மகத்தானது எதுவுமில்லை
ஒவ்வொரு நீண்ட இரவுகளும்
விடிகின்ற வேளையிலே
நமக்கொரு சேதி சொல்லிடும்
நலம் பெற்று நாம் வாழ
தொலைதூர பார்வையோடு
கண நேரத்தையும் வீணடிக்காது
குறிக்கோளுடன் வாழ்பவனே
வெற்றிக்கனியை சுவைத்திடுவான்
தவம் போன்ற வாழ்க்கையை
தன்னம்பிக்கையோடு போராடி
தான் எனும் அகந்தையின்றி
தனித்துவமாய் வாழ்ந்திடுவோம்
வாழ்க்கை எனும் புத்தகத்தில்
அனுபவங்கள் பல உண்டு
ஒவ்வொரு அனுபவங்களும்
ஒவ்வொரு பக்கங்களாய்
அரிது அரிது இவ்வுலகில்
மானிடராய் பிறத்தல் அரிது
மானிடாராய் பிறந்திட்டேல்
மனிதத் தன்மையோடு வாழ்தல் சிறப்பு
உதிரும் மரங்களும்
பின்பு துளிர்விட்டு தளைத்தெழும்
துன்பங்களை தொடமல் யாரும்
இன்பங்களை அடைய முடியாது
பட்டை தீட்ட தீட்ட
வைரம் பொலிவாகும்
தடைகளை தாண்ட தாண்ட
உன் வாழ்க்கை பலமாகும்
இரவுபோய் பகல் வருவதை போல்
பிறப்புண்டேல் இறப்புண்டு
இயன்றவரை உத்தமராய்
இறுதிவரை வாழ்ந்திடுவோம்
நாம் வாழ்ந்தாலும் ஏசிடும்
துவண்டு வாழ்ந்தாலும் ஏசிடும்
வையகம் இதுதானடா அன்று
பாடினான் ஓர் கவிஞன்
வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்
உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்
உறவுகளே நம்மைப் பழித்திட்ட போதிலும்
உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும்
சாவிலும் இவ்வுலகம் எமை
சான்றோராய் போற்றிட
நல் மனிதராய் வாழ்ந்து
நானிலத்தை வென்றிடுவோம்
வாழ்க்கை எனும் பெரும் போரில்
நாம் அனைவரும் போர் வீரர்கள்
பல காயங்களை அடைந்து
வெற்றியை சுவைத்திடுவோம்
பெரு வெள்ளம் வந்திட்ட போதும்
சிறு துளியென எண்ணி
சிந்தை கலங்காது எப்போதும்
சிறப்புடன் கடந்திட்டல் வேண்டும்
இன்பம் வரும் போது போற்றி
துன்பம் வரும் போது தூற்றாதே
இன்பத்தையும் துன்பத்தையும்
சரிசமமாய் கருதி வாழு
பணம் படைத்திட்ட போதும்
செல்வம் செழித்திட்ட போதும்
செருக்கோடு வாழாது உன்
சுற்றம் போற்ற வாழு
ஏழையாய் ஆனாலும் பெரும்
செல்வந்தனாய் ஆனாலும்
பிறருக்காக வாழ்ந்திடேல்
பெரு மனிதனாய் போற்றப்படுவாய்
அர்த்தமுள்ள வாழ்க்கைதனை
வாழ்ந்திட்ட ஒரு மனிதன்
மகானாய் போற்றப்படுவான்
இதுவே உலகத்தின் நியதி
கிடைத்தற்கரிய அருங் கொடையாய்
கண்டெடுத்த பெரும் புதையலாய்
அளிக்கப்பட்ட இவ் வாழ்க்கையை
ஆனந்தமாய் அனுபவித்திடுவோம்
You May Also Like: