மொழிபெயர்ப்பு என்றால் என்ன

mozhipeyarpu endral enna

உலகில் காணப்படும் அனைவராலும் அனைத்து மொழியிலும் தொடர்பாடலை மேற்கொள்வது என்பது சாத்தியமற்றதொன்றாகும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே மொழிபெயர்ப்பின் தேவை கட்டாயமாகின்றது. எமக்கு தெரியாத மொழியில் உள்ளவற்றை எமக்கு தெரிந்த மொழியில் புரிந்த கொள்வதற்கு மொழிபெயர்ப்பானது துணைபுரிகின்றது.

மொழிபெயர்ப்பு என்றால் என்ன

மொழிபெயர்ப்பு என்பது யாதெனில் மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை பொருள் மாறாது பிரிதொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் அறியத்தருவதாகும்.

அதாவது ஒரு மொழியில் காணப்படுகின்ற செய்திகள், கருத்துக்கள், இலக்கியங்கள், புத்தகங்கள் என பல் துறைசார்ந்த விடயங்களை பிறிதொரு மொழிக்கு மாற்றுவதே மொழிபெயர்ப்பாகும்.

மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம்

மொழிபெயர்ப்பானது பிற மொழியில் உள்ள ஒரு விடயத்தை தமது மொழியில் புரிந்து கொள்வதற்கு துணைபுரிகின்றது.

வணிக ரீதியான விடயங்களை அபிவிருத்தி செய்வதற்கு மொழிபெயர்ப்பானது உதவுகின்றது. அதாவது வணிகரீதியான விடயங்கள் எமக்கு பரிச்சயமல்லாத மொழியில் காணப்படினும் அதனை புரிந்து கொண்டு எமது வணிக விடயங்களை அபிவிருத்தி செய்ய மொழிபெயர்ப்பானது வழியமைத்து தருகின்றது.

மதங்கள் பற்றிய சரியான அறிவினை பெற்று கொள்வதற்கு மொழிபெயர்ப்பானது துணைபுரிகின்றது. உதாரணமாக இன்று கிறுஸ்தவ மத புனித நூலான பைபில் 531 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு காணப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மத பரவலானது இடம் பெறுகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

நிறுவனமானது தனது நோக்கங்களை விரிவுபடுத்தி அதிக இலாபத்தினை ஈட்டுவதற்கு மொழி பெயர்ப்பானது துணையாக அமைகின்றது. சர்வதேச ரீதியில் சிறந்த நடவடிக்கைகளை ஏற்படுத்தவும் துணைபுரிகின்றன.

மொழிபெயர்ப்பில் தருமொழி, பெறுமொழி, வழி மொழி போன்றவற்றின் பங்கு

மொழிபெயர்ப்பொன்றில் இடம் பெறும் மொழிகளை தருமொழி, பெறுமொழி, வழிமொழி என அழைக்கின்றனர்.

தருமொழி

மொழிபெயர்ப்பின் போது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு கருத்துக்களை மொழிபெயர்க்கும் போது அதனை முதல் மொழி என்று கூறமுடியும் இதனையே மூலமொழி அல்லது தருமொழி எனலாம். அதாவது எம்மொழியின் கருத்துக்களை வேறு மொழிக்கு மொழிபெயர்க்கின்றோமே அதுவே தருமொழி ஆகும்

பெறுமொழி

மொழிபெயர்ப்பின் போது தருமொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் போது அந்த மொழி மற்றொரு மொழி ஆகும். அதாவது இரண்டாம்மொழி என இதனை அழைக்கின்றோம்.

வழிமொழி

ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படும் போது அதில் முதல் மொழியான தருமொழியும் இரண்டாம் மொழியான பெறுமொழியும் இருப்பது இயல்பாகும். அதே மொழி சீனமாகவும் இரண்டாம் மொழி ஆங்கிலமாகவும் மூன்றாம் மொழி தமிழாகவும் இருந்தால் அப்போது இரண்டாம் மொழியாகிய ஆங்கில மொழியை வழி மொழி என கூற முடியும்.

மொழிபெயர்ப்பின் போது கவனத்திற் கொள்ள வேண்டியவை

மொழிபெயர்ப்பின்போது சில முக்கிய விடயங்களை கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும். அந்த வகையில் மொழிபெயர்ப்புக்களில் அடிகுறிப்புக்கள் கையாளப்படல் வேண்டும். அதாவது எது மிக மிக தேவையோ அதற்கு அடிகுறிப்பு பயன்படுத்த கூடாது. அடிக்கடி பயன்படுத்தினால் ஆராய்ச்சி கட்டுரையாக தோன்றும்.

மொழிபெயர்ப்பு கலைத்துறையினதா, அறிவியல் துறையினதா என்ற முடிவுக்கு பின் கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்.

ஓர் அறிவுத்தறையின் நோக்கம், பயன், விளைவு ஆகியவற்றிற்கு ஏற்ப அதனை உள்ளடக்கி தருவதாக தரும் மொழியின் இயல்பு வேறுபட்டு காணப்படல்.

மூல மொழியின் இயல்புக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு மொழியாகிய மறுமொழியின் இயல்பும் நடையும் அமைதல் வேண்டும்.

மொழிபெயர்ப்பின் போது ஒரு மொழியில் உள்ள விடயத்தின் பொருள் மாறுபடாது பிறிதொரு மொழியில் தருவதாக அமையுமாயின் அதுவே சிறந்த மொழிபெயர்ப்பாகும். இன்று மொழி பெயர்ப்பின் அவசியமானது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது.

Read More: நிலக்கிழார் என்றால் என்ன

சுற்றுச்சூழல் கூறுகள் என்ன