அழகு வேறு பெயர்கள்

அழகு வேறு சொல்

அழகு என்பது ஒருவருக்கோ, இடத்திற்கோ, பொருளுக்கு இருக்கக்கூடிய ஓர் இயல்பு ஆகும். இவ்வியல்பு அவற்றை காண்போருக்கு மகிழ்ச்சி, திருப்தி என்பவற்றை கொடுக்கக் கூடிய காட்சி அனுபவத்தை வழங்கக் கூடியது.

இவ்வழகானது அழகியல், சமூக அறிவியல், சமூக உளவியல், பண்பாடு ஆகிய துறைகளில் ஒரு பகுதியாக ஆய்வு செய்யப்படுகின்றது.

டாக்டர் நவராஜ் செல்வராஜ் அவர்கள் ஆனந்தப்படுத்துகின்ற காட்சிக்குத்தான் அழகு என பெயர் என்கிறார்.

பொதுவாக கூறின் அழகு என்பது விலங்கு, பொருள், நபர், அல்லது இடம் இவற்றின் பண்பு சார்ந்த இன்பம் அல்லது திருப்தியை அளிக்கும் ஒரு புலன் உணர்வே அழகு எனப்படுகின்றது.

இவ்வாறான அழகு என்ற பெயர்ச்சொல்லானது தமிழில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது

அழகு வேறு பெயர்கள்.

  1. முருகு
  2. வடிவு
  3. வனப்பு
  4. வசீகரம்
  5. பொலிவு
  6. அணி
  7. சுகம்
  8. சிறப்பு
  9. எழில்
  10. வண்மை
  11. செழுமை

இவ்வாறான பெயர்கள் அழகுக்கு வழங்கப்படுகின்றன.

அழகு என்பது சமூகத்தில் ஏற்ற தாழ்வை ஏற்படுத்த கூடியது

ஒரு வகையில் அழகு என்பது போற்றத்தக்கதாக காணப்படினும் அழகு என்பது சமூகத்தில் ஏற்ற தாழ்வினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே காணப்படுகின்றது.

சமூகத்தில் அழகுடையவர்களுக்கு அதிக அந்தஸ்து வழங்கப்படுவதனால் இவ்வாறான ஏற்ற தாழ்வுகள் ஏற்படுகின்றன.

அழகற்றோர்கள் தாங்கள் அந்தஸ்து அற்றோர் என நினைத்து வருந்துகின்றனர். அழகு என்பது தோற்றத்தில் அல்ல மனதில் உள்ளது என்பதை அறிந்தால் இவ்வாறான ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் தடுக்க முடியும்.

Read more: நீரிழிவு நோய் என்றால் என்ன

பற்களில் மஞ்சள் கறை நீங்க