மற்போர் என்றால் என்ன

marpor in tamil

மற்போரானது உலகில் பல்வேறு சமூகங்கள் இடையே உள்ள ஒரு கலை வடிவம் ஆகும். இந்திய மரபிலும் தமிழர் மரபிலும் மற்போர் என்பது தனித்துவமாக உள்ளது. இது ஓர் வீர விளையாட்டாகும்.

இது மற்போர், குஸ்தி, மல்யுத்தம், மல்லாடல் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இந்த வீர விளையாட்டானது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடப்பட்டதாகும்.

இதற்குப் பழமையான சான்றுகள் எகிப்தில் சுவரில் எழுதப்பட்ட சான்றுகளில் உள்ளது. இதற்கு பின்னர் கிரேக்க கால நாணயங்கள் அவர்கள் செய்த பானைகள், சிலைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2,500 ஆண்டுகள் பழமையானதாகும்.

மற்போர் சான்றுகள் தமிழ் சங்கத் தமிழ் நூல்களில் பல இடங்களில் உள்ளன. புறநானூற்றின் பாடல் 80-ல் ஆமூர் மல்லனுக்கும் கிள்ளிக்கும் நடந்த மற்போரை சாத்தந்தையார் வருணிக்கிறார்.

பரணர் என்னும் பெரும்புலவர் மிக மிக விரிவாக நமக்கு மற்போர் செய்திகளைப் பல பாடல்கள் வழியே தருகிறார். பரிபாடல் 12-72, சிலப்பதிகாரம் (16-198, 16-73), பெருங்கதை (52—3115) ஆகிய இடங்களில் முறையாகப் பறை அறிவித்து மற்போர் நிகழ்த்தப்பட்டமைக்கான சான்றாக உள்ளன.

இன்றைய சூழலில் பல கிராமப்புறங்களில் மல்யுத்தமானது இயல்பாகவே வன்முறையின் மூலமாக ஏற்படுகின்றது. இதனை பேச்சுவழக்கில் மல்லுக்கட்டு என்று கூறுவர். எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு ஒன்று எட்டப்படவில்லை என்றால் அதற்கு “மல்லுக்கட்டிக் கொள்ளுதல்” என்ற மல்யுத்த முறை நிகழ்கின்றது.

தமிழினத்தின் போர் கொடிகள் இந்த மல்யுத்தத்தில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். கண்மூடித்தனமாக கோபம் வரும் போது நம்மை எதிர்ப்பவர்களை இயற்கையாகவே மல்லுக்கட்ட முற்படுவோம்.

ஆதியில் நாம் கடைப்பிடித்த மல்யுத்த முறை இன்றும் நம் இரத்தத்தில் உள்ளது. இதன் முறையாகத் தெரிந்து கொண்டு தமிழர்கள் வலிமையாக இருக்க வேண்டும்.

மற்போர் என்றால் என்ன

மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் முறை அல்லது தற்காப்பு கலை ஆகும்.

மல் என்பதற்கு வலிமை எனப் பொருள் உள்ளது. மற்போர் தமிழ் இலக்கியங்களில் மல்லாடல் என வழங்கப்படுகின்றது. மற் போராளிகளை மையில்வான் என்று கூறுவர்.

மற்போர் விளையாட்டு தமிழர்களின் மரபினால் வந்தது. இன்று இதை மல்யுத்தம் என்ற பெயரில் வெளிநாட்டவர்கள் விளையாடி எதிரிகளை வீழ்த்துகின்றனர்.

மகாபலிபுரம் எவ்வாறு உருவானது என்று பலருக்குத் தெரிந்திருக்காது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் மன்னன் மற் போரில் சிறந்தவனாக இருந்தான். அவனுக்கு சிறப்புப் பெயராக மாமனிதன் என்று பெயர் ஏற்பட்டது. அவன் பெயரிலேயே மாமல்லபுரம் என்று பெயர் பெற காரணமாக இருந்தது.

மற்போர்க்களம் அமைக்கும் முறை

மற் போர்க்களத்திற்கு “கோதா” என்று பெயராகும். இந்த கோதாவானது செம்மன் கொண்டு வந்து கொட்டி அதில் ஒரு பருக்கைக்கள் கூட இல்லாமல் சுத்தமாக மென்மையாக்கி

அதன்மீது நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய், தயிர், பால் போன்றவற்றை ஊற்றி அந்த மண்ணை ஒரு பட்டி கொண்டு நன்றாக அரைத்து, கட்டியாக்கி வெயிலில் உலர விட்டு ஒரு கிழமை கழித்து

அதை நன்கு கட்டாந்தரை ஆன பின்னர் தரையை நன்றாக மறுபடியும் இடித்து மண்ணை தூள் தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிதலுக்கு மென்மையாக இருக்கும்.

Read more: கல்வெட்டு என்றால் என்ன

செப்பேடுகள் என்றால் என்ன