ஆணவம் வேறு சொல்

ஆணவம் வேறு பெயர்கள்

ஆணவம் வேறு சொல்

மானிடர்க்கு காணப்படும் உணர்வுகளில் ஆணவமும் ஒன்றாகும். ஆணவம் என்பது “நான்”, “எனது (என்னுடையது)” என்னும் அகந்தை ஆகும்.

எடுத்துக்காட்டாக, நான்தான் இந்நாட்டிலேயே மிகுந்த செல்வம் உடையவன். அல்லது நான் தான் மிகவும் படித்தவன் என்பது போன்ற மனநிலை ஆகும்.

இந்த ஆணவம் என்ற உணர்வு வந்துவிட்டால் ஒருவனுக்கு தானே எல்லா விடயங்களிலும் பெரியவன் என்று உணர்வு ஏற்பட்டு விடும்.

இருள் தன்னினுள் இருக்கும் பொருட்களை மறைப்பது போல ஆணவம் தன்னையும் தன்னில் இருக்கும் பொருள்களையும் மறைக்கும். இருள் தன்னையாவது காட்டும் ஆனால் ஆணவம் தன்னையும் காட்டாது தன்னில் உள்ள பொருளையும் காட்டாது. எனவே ஆணவம் இருளை விடக் கொடியது.

ஆணவம் உள்ளவன் என்றும் முத்தி அடைய முடியாது என்று சைவ சமயம் கூறுகின்றது. இவ்வாறான ஆணவத்திற்கு வேறு பெயர்களும் காணப்படுகின்றன.

ஆணவம் வேறு சொல்

  • இறுமாப்பு
  • வீம்பு
  • மமதை
  • கர்வம்
  • செருக்கு
  • தலைக்கணம்
  • திமிர்
  • வீராப்பு
  • தெனாவட்டு
  • பகட்டு
  • மிடுக்கு
  • பெருமிதம்
  • அகந்தை
  • அதைப்பு
  • ஆடோபம்
  • ஆவலிப்பு

ஆணவம் பற்றிய மேற்கோள்கள்

“அகம்பாவம் வந்தால் அழிவு வரும். ஆணவம் வந்தால் அடிசறுக்கும்.”

“ஆணவமான இதயம் இருந்தால் அழிவு வரும். மனத்தாழ்மை இருந்தால் மகிமை வரும்.”

“கர்வம்-அதுதான் முட்டாள்களை விட்டு ஒரு பொழுதும் நீங்காத துர்க்குணம்.”

“செருக்கு. உலகிலே வெறுக்கத்தக்கவைகளுள் மிகவும் இழிவானது.

“எந்த மனிதனும் தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்வதைக் காட்டிலும், மற்றவர்களால் ஏமாற்றப்பெறுவதில்லை.”

Read more: அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி