கீரைகளின் ராணி என அழைக்கப்படும் கீரை கரிசலாங்கண்ணி கீரை ஆகும். இந்தச் செடியானது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. ஆனால் படரும் தன்மை கொண்டது. கரிசலாங்கண்ணி கீரையானது காயகற்ப மூலிகை எனப்படுகின்றது. இரும்புச்சத்து மற்றும் தங்கச்சத்து அதிக அளவில் இருப்பதினால் தங்கம் மூலிகை எனவும் இதனை அழைப்பர்.
சித்தர்களின் பிரியமான இராமலிங்க வள்ளலார் கரிசலாங்கண்ணி கற்பக மூலிகைகளில் ஒன்றாக குறிப்பிடுகின்றார். மேலும் இதனை தெய்வீக மூலிகை என்றும், ஞானபச்சிலை என்றும் கூறுகின்றார். கரிசலாங்கண்ணிக் கீரையின் சிறப்பை பற்றி அத்தி முனிவர், வள்ளலார், ஒளவையார் முதலியோரும் கூறியுள்ளனர்.
கரிசலாங்கண்ணியில் மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என இரண்டு வகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணியானது பொன்னிறத்தில் பூக்கும் தன்மை கொண்டது.
மஞ்சள் நிற பூவின் காரணமாக “பொற்றாலை”, “கையேந்தறை” என்றும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல. மூலிகையாக மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகையாகவும், கீரையாகவும் உணவில் பயன்படுத்தலாம்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அதிக அளவில் உள்ளது. இதன் மறுபெயர்களாகப் பல உள்ளன. வெண்கரிசாலை, கைகேசி, கரிக்கை, கரியசாலை, பிருங்காராஐம், தேகராஐம், பொற்றலைக்கையான் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள்
வாரம் ஒரு முறை கரிசலாங்கண்ணியைப் பயன்படுத்தினால் கூட உங்கள் உடலுக்கு பல அற்புதங்கள் நடக்கும்.
கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்றவற்றை பாதுகாக்கும்
இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்றவற்றினை தூய்மையாக்க வைத்திருக்க உதவும். உடலைப் பலப்படுத்தும், இரும்புச்சத்து தாது சத்து போன்றவை கரிசலாங்கண்ணி கீரையில் அதிகமாக உண்டு.
கண் குறைபாடு நீங்கும்
மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு கரிசலாங்கண்ணி கீழாநெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவில் எடுத்து. 50 மில்லி கிராம் பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் மஞ்சள் காமாலை நீங்கும். கண் வறட்சியையும் போக்கவும், பார்வை நரம்புகளைப் பலப்படுத்தவும் உதவும்.
முடி பிரச்சினைகளுக்கு தீர்வாகும்
நரை முடியைப் போக்கவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் உதவும். பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கும் இது சிறந்த மருந்தாகும்.
இரத்தச் சோகையை குணமாக்கும்
மஞ்சள் கரிசலாங்கண்ணி ரத்தசோகை குணப்படுத்தும். வாரத்தின் ஒரு முறை கூட்டு செய்து உண்டு வந்தால், ரத்தசோகை நீங்கும்.
சித்த மருத்துவத்தில் பயன்படுத்துவர்
சித்தர்கள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய கரிசலாங்கண்ணிக்கு என்றும் தனிச்சிறப்பு உண்டு. குறிப்பாக. பாச யோகம் போன்ற முறைகளைப் பயன்படுத்தும் போது அதிக உடல் சூடாகின்றது என்கின்ற போது, குளிர்ச்சி பண்ணக்கூடிய மூலிகைகளை அதிகம் பயன்படுத்துவர்.
அந்தவகையில் மஞ்சள் கரிசலாங்கண்ணியை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். மேலும் கபத்தை அகற்றவும் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
அழகுசார் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றது
அழகு சார் பொருட்களிலும் கரிசலாங்கண்ணி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கண்மை கூந்தல் தைலம் தயாரிக்க உதவுகின்றது.
இவைதவிர தொப்பையை குறைக்கும். வயது மூப்பைத் தடுக்க கூடியது. தோல் நோய்களை கட்டுப்படுத்தும். புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை வழங்குவதுடன் தேக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
Read More: வேப்பிலையின் பயன்கள்