மக்ரோனி செய்வது எப்படி

Macaroni Seivathu Eppadi

இந்த பதிவில் மிகவும் சுவையான மக்ரோனி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மக்ரோனி குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு தான் மக்ரோனி. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ சாப்பிடலாம்.

பள்ளிவிட்டு வீடு வந்ததும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நெக்ஸா கூட விரைவில் செய்து கொடுக்கலாம்.

குழந்தைகள் உடல் எடை இல்லாமல் மெலிந்து காணப்படுகின்றார்கள் என்ற கவலை வேண்டாம். மக்ரோனி செய்து கொடுத்தாலே போதும் இந்தக் கவலை தீர்ந்துவிடும். இதை சாப்பிட்டால் குண்டாகி விடுவார்கள்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்ளுவதை தவிர்ப்பது சிறந்ததாகும். இப்போது மக்ரோனி செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க!

மக்ரோனி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

எண்ணெய்1 கப்
உப்புதேவையான அளவு
பெரிய வெங்காயம்1
பச்சை மிளகாய் 1
தக்காளி1
குடமிளகாய்1
கேரட்1
பட்டாணி1/4 கப்
பீன்ஸ் 1/4 கப்
சில்லி சாஸ்தேவையான அளவு
சோயா சாஸ்தேவையான அளவு
டொமேட்டோ சாஸ்தேவையான அளவு
கொத்தமல்லிதேவையான அளவு
கரம் மசாலாதேவையான அளவு
கடுகு 1/4 டீஸ்பூன்

மக்ரோனி செய்யும் முறை

முதலில் மக்ரோனியை வேக வைக்க வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும்⸴ அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் மக்ரோனிக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் மக்ரோனியைப் போட்டு வேக வைக்கவேண்டும். (5-7 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளலாம்) முக்கால் பதத்திற்கு வேக வைத்தால் போதுமானது.

வேகியதும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும். அப்போதுதான் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.

பின்பு ஒரு கடாயில் 3டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு மீடியம் சைஸ் வெட்டிய வெங்காயத்தை கண்ணாடி பதத்தில் வதக்கி அதனோடு ஒரு பச்சைமிளகாய் வேகவைத்த பட்டாணி 1/4 கப்⸴ கேரட் 1/4 கப்⸴ பீன்ஸ் 1/4 கப் சேர்த்து வதக்கி விட்டு 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து ஒரு தடவை கலந்து விடவும்.

பின்னர் கரம் மசாலா 1 டீஸ்பூன் கலக்கவும்.

அடுத்து வெட்டிய தக்காளி சேர்த்து அதனோடு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் 1/4 கப் குடமிளகாய்⸴ கொத்தமல்லி சேர்த்து கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி வைக்கவும். (அடுப்பு மிதமான சூட்டில்)

5நிமிடம் வேக வைத்த பின்னர்⸴ முன்பு வேகவைத்து வைத்திருந்த மக்ரோனியையும் சேர்த்து கலக்கவும்.

மேலும் சுவைக்காக அதனோடு சில்லி சாஸ் ஒரு டீஸ்பூன்⸴ கடுகு கால் டீஸ்பூன்⸴ சோயா சாஸ் அரை டீஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து பரிமாறவும்.

இப்போது சுவையான மக்ரோனி ரெடி!

You May Also Like:

திருவாதிரை களி செய்வது எப்படி

புதினா துவையல் செய்வது எப்படி