காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி

Kali Pulavar Kulambu Seimurai

இந்த பதிவில் மிகவும் சுவையான காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கறிக்குழம்பு சுவையில் காலிபிளவர் குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இதை இட்லி⸴ சப்பாத்தி⸴ தோசை⸴ சாதம் போன்றவற்றில் வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை இல்லாது செய்கிறது.

காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது சுவையான காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

காலிபிளவர்300g
சின்ன வெங்காயம் தேவையான அளவு
உருண்டை மல்லி4 டீஸ்பூன்
சோம்பு1 டீஸ்பூன்
மிளகு1/2 டீஸ்பூன்
வரமிளகாய்7
பட்டைசிறிதளவு
ஏலக்காய்1
கிராம்பு5
எண்ணெய்தேவையான அளவு
கடுகு1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலைசிறிதளவு
இஞ்சி1 டீஸ்பூன்
தக்காளி2

காலிபிளவர் குழம்பு செய்முறை

முதலில் காலிபிளவரை சிறிது சிறிதாக நறுக்கி கொதித்த சுடுதண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயில் 1/2 டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உருண்டை மல்லி போட்டு கருக விடாமல் வறுக்க வேண்டும். (மிதமான சூட்டில் அடுப்பை வைத்து)

இதனுடன் சீரகம் சோம்பு⸴ பட்டை⸴ மிளகு⸴ கிராம்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். ஓரளவு வறுபட்டதும் அதனுடன் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்க வேண்டும்.

அடுத்து கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸியில் வறுத்து எடுத்துவைத்த மசாலா பொருட்களுடன் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். மிருதுவாக அரைபட்டதும் அதனோடு வதக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு அரைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் அரை டீஸ்பூன் கடுகு சேர்த்து கடுகு வெடித்ததும்⸴ பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்த தக்காளியுடன் தக்காளி வழங்கும் அளவுக்கு உப்பையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி வதங்கிய பின்னர் காலிபிளவரை சேர்த்து வதக்கவேண்டும்.

பின்பு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொள்ள வேண்டும்.

காலிபிளவர் வெந்த பின்பு இறுதியாக அரை கப் தேங்காய் பால் அல்லது இரண்டு சில் தேங்காயை அரைத்து குழம்பில் விட்டு அதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து மல்லித்தழை போட்டு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறவும்.

இப்போது சுவையான காலிபிளவர் குழம்பு ரெடி!!!

You May Also Like:

சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி

புதினா துவையல் செய்வது எப்படி