பேச்சு மொழி என்றால் என்ன

நேரடி மொழி என்றால் என்ன

இந்த பதிவில் “பேச்சு மொழி என்றால் என்ன” என்பது பற்றி காணலாம்.

நேரடி மொழி என்றால் என்ன

பேச்சு மொழி என்பதே நேரடி மொழி ஆகும்.

பேச்சு மொழி என்றால் என்ன

பேச்சு வழக்கு அல்லது பேச்சு மொழி என்பது இயல்பாக உருவாகும் மொழி வடிவம் ஆகும். இது மொழியின் எழுத்து வழக்கில் இருந்து வேறுபட்டது. எந்த ஒரு சமுதாயத்திலும் பேச்சு மொழியே காலத்தால் முற்பட்டது.

பேச்சுமொழி, எழுத்து மொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கதாக உள்ளது. எனவேதான் இலக்கிய வழக்கைக் கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடன் கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.

எழுத்து மொழி அப்படியன்று. எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது. எழுத்து மொழியில் பேச்சைக் கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது. எழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால் தனக்குத்தானே பேசிக் கொள்கிற பேச்சு.

ஆனால் பேச்சு என்பது தன்னைத் திறந்து கொள்கின்ற சிந்திக்க செய்கின்ற ஒரு செயல்பாடு. உண்மையில் சொல்லப்போனால் பேச்சு என்பது மொழியில் நீந்துவது என்றும் கூறுவார்.

பேச்சுமொழியின் போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழியென்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன. இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல அமைக்கின்றனர். இதையே அவர்கள் நேரடி மொழி என்கின்றனர்.

You May Also Like:
புதுக்கவிதை என்றால் என்ன
சமத்துவம் என்றால் என்ன