பல்லி சொல்லும் பலன்

இந்த பதிவில் திசைகளை வைத்து பொதுவாக குறிப்பிடப்படும் பல்லி சொல்லும் பலன் பதிவை பார்க்கலாம்.

ஒரு வீட்டில் பல்லி இருந்தால் நல்லது என்று கூறப்படுகின்றது. ஒரு சிலர் பல்லி இல்லாத வீட்டில் குடியிருக்கவே மறுப்பார்கள்.

பல்லி எழுப்பும் ஒலியின் திசையை வைத்து சில பலன்களும் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

  • Palli Sollum Palangal In Tamil
  • Palli Sollum Palan
கண்டக சனி என்றால் என்ன

பல்லி சொல்லும் பலன்

தெற்கு திசை

வீட்டின் தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் வந்தடையும் அல்லது சுப நிகழ்ச்சிகள் அந்த வீட்டில் நடைபெறும் என்று கூறப்படுகின்றது.

தென்மேற்கு திசை

வீட்டின் தென்மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் நண்பர்கள் மூலம் அல்லது உறவினர்கள் மூலம் எதிர்பாராத நன்மை வந்தடையும்என்று கூறப்படுகின்றது.

வடக்கு திசை

ஒரு வீட்டின் வடக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி ஒன்று வந்து சேரும் என்று கூறப்படுகின்றது.

தென்கிழக்கு திசை

ஒரு வீட்டின் தென்கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் விரைவில் சண்டை அல்லது கலக்கம் வரப்போகின்றது என்பதை எச்சரிக்கையாக குறிப்பிடுகிறது என்று கூறப்படுகின்றது.

இந்த மாதிரியான நேரங்களில் அயலாருடனும் வீட்டில் உள்ளவர்களுடனும் பொறுமையாக கோபத்தை கட்டுப்படுத்தி விட்டுக்கொடுத்து போவது சிறந்தது.

கிழக்கு திசை

ஒரு வீட்டின் கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பய உணர்வு மனதில் ஏற்படும். அதாவது ஏன் எதற்கு என்று தெரியாமல் மனதில் ஒரு நெருடல் இருக்கும்.

பக்கத்துக்கு வீடு

பக்கத்துக்கு மனையில் அல்லது பக்கத்து வீட்டில் இருந்து பல்லி கிழக்கு திசையில் இருந்து சத்தமிட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது. வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நல குறைவு போன்றவை ஏற்படும்.

உங்கள் பக்கத்துக்கு மனையில் அல்லது பக்கத்துக்கு வீட்டில் தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் நம்ம வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத தோல்வி உண்டாகும் என்று கூறப்படுகின்றது. தேவையற்ற செலவுகள், தொழிலில் நஷ்டம் போன்றவை ஏற்படும்.

You May Also Like :

வீடு குடி போக உகந்த மாதங்கள்