ஐம்பூதங்களில் ஒன்றே நெருப்பாகும். உயிர் எவ்வாறு நிலையற்றதோ அதேபோல நெருப்பும் நிலையற்றது. ஒரு நாள் இருக்கும் மறுநாள் இருப்பதில்லை. நாள் கணக்கு மட்டும் அல்ல ஒரு நிமிடம் இருக்கும் அடுத்த நிமிடம் இருப்பதில்லை. எனவே, ஐம்பூதங்களில் நிலையற்றது நெருப்பாகும்.
நெருப்பு (Fire) என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயலான தகனத்தின்போது, பொருட்களில் விரைவான ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.
இவ்வாறான நெருப்பானது மனிதர்கள் மத்தியில் பல தேவைகளுக்கு பயன்படுகின்றது. இந்நெருப்பையே மனிதர்கள் அக்கின் தேவன் என வேத காலம் தொட்டு இன்று வரை வழிபடுகின்றனர்.
ஆலயங்களில் வழிபடப்படும் மிக முக்கியமான தெய்வமாக அக்கினி தேவன் போற்றப்படுகிறார். எனவே, இவ்வாறான பல காரணங்களினால் நெருப்பு என்பது சிறப்புடையதாகின்றது.
Table of Contents
நெருப்பு வேறு பெயர்கள்
- தீ
- தனல்
- அக்கினி
- அரி
- கனல்
- சுடர்
- தழல்
- அங்கி
- வன்னி
- அனல்
- கனலி
- ஆரல்
- எரி
இவ்வாறான பல பெயர்கள் நெருப்புக்கு வழங்கப்படுகின்றது.
நெருப்பு தோன்றிய வரலாறு
நெருப்பு பழைய கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால மனிதன் கற்களை உராய்வதனால் மூலம் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான், உணவு சமைத்தான்.
மேலும் நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் ஆக்சிசன் தேவைப்படுகிறது.
ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த இலைச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர்.
பின்னர் அறிவியல் வளர்ச்சியினால் கந்தகம் கொண்டு தீக்குச்சிகள் தயாரிக்கப்பட்டு, தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது.
இவ்வாறு அன்று கண்டுபிடிக்கப்பட்ட நெருப்பானது இன்னு பல பரிணாம வளர்ச்சியோடு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நெருப்பின் பயன்பாடுகள்
- சமைக்க பயன்படும்
- வெளிச்சத்திற்காக பயன்படும்
- நெருப்பு மருத்துவத்திற்கு பயன்படும்.
- உடலின் உள்ளே ஒரு சக்தியாக உடலை இயக்கவும் இறந்த பின்பு உடலை எரிக்கவும் நெருப்பு பயன்படுகின்றது.
- பல தொழில்நுட்பங்களின் செயற்பாடுகளின் போது நெருப்பு பயன்படுகின்றது.
இவ்வாறான எண்ணற்ற பயன்பாடுகள் நெருப்பின் மூலம் விளைவிக்கப்படுகின்றன.
Read more: செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை