வயது வேறு பெயர்கள்

vayathu veru sol

ஆண்டோன்று போனால் வயதொன்று போகும் என்பது ஐதீகம். ஆண்டுகள் கூடக்கூட வயதும் கூடிக் கொண்டே செல்லும்.

வயம் என்ற சொல்லிலிருந்தே வயது என்ற சொல் தோற்றம் பெற்றது. வயம் என்றால் வயப்படுத்தல் அதாவது வசப்படுத்தல் அல்லது மாட்டிக் கொள்ளுதல், அகப்படுதல் எனப்படும்.

எனவே, காலத்தினால் வயப்படுத்துவது வயது எனலாம். வேறு வகையில் கூறுவதானால் காலம் நம்மை வயப்படுத்தும் அளவு வயது எனலாம்.

பிறப்பு முதல் காலத்தால் வயக்காட்டு இருக்கும் அளவினை கனிக்கும் வழி வயது ஆகும். நாம் வாழும் காலமே வயது என கணிப்பிடலாம். அக்காலம் தொட்டு இக்காலம் வரையும் வயது என்பது இன்றியமையாததாக காணப்படுகின்றது.

மனித வாழ்வில் வயதின் அடிப்படையில் அனைத்தும் நடைபெறுவதனால் வயது முக்கியமாகின்றது. அதாவது கல்வியானாலும் சரி திருமணமானாலும் சரி அனைத்து நிகழ்வுகளும் வயதின் அடிப்படையில் இடம்பெறுவதனால் வயதானது மிகவும் இன்றியமையாததாக காணப்படுகின்றது.

உதாரணமாக பெண்களின் வாழ்க்கை வட்டமானது வயது அடிப்படையில் பெண்களின் வாழ்க்கை எல்லை பாகுபடுத்தப்படுகின்றது.

  • 5 தொடக்கம் 7 வயது உடைய பெண்களை பேதை எனவும்
  • 8 தொடக்கம் 11 வயது வரையுள்ள பெண்களை பெதும்பை எனவும்
  • 11 தொடக்கம் 13 வயது வரை உள்ள பெண்களை மங்கை எனவும்
  • 14 தொடக்கம் 19 வயதில் பெண்களை மடந்தை எனவும்
  • 20 தொடக்கம் 25 வயது வரை உள்ள பெண்களை அறிவை எனவும்
  • 26 தொடக்கம் 32 வயது வரையுள்ள பெண்களை தெரிவை எனவும்
  • அதற்கு அப்பாற்பட்ட பெண்களை பேரிளம் பெண் எனவும் பாகுப்படுத்தி உள்ளனர்.

எனவே, வயதில் அடிப்படையில் வாழ்க்கை கட்டங்கள் கூட பாகுபடுத்தப்படுகின்றது. இதன் காரணமாக வயது என்பது இன்றியமையாததாக காணப்படுகின்றது. வயதுக்கு தமிழில் வேறு பெயரும் வழங்கப்படுகின்றது.

வயது வேறு பெயர்கள்

  • அகவை
  • ஆண்டு

வயதானது அகவை என அழைக்கப்படுவதற்கான காரணமும் உண்டு. அதாவது, நாம் காலத்தால் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். காலத்தின் அகத்தே அகப்பட்டு இருப்பதால் அகவை என வயது அழைக்கப்படுகின்றது.

அதாவது வையத்திலிருந்து விடுபட முடியாமல் வயப்பட்டு வாழும் காலமே அகவை. இந்த அகவை என்ற சொல்லானது இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வயது 12 என்பது “ஈர் ஆறு ஆண்டு அகவையாள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் வாழும் காலம் எல்லை வரை எம்முடன் பயணம் செய்யும் ஒன்றே வயதாகும்.

Read more: நார்ச்சத்து மிக்க உணவுகள்

உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்