மனிதனானவன் வயதாவதினால் உடலின் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும். இவ்வாறான மாற்றங்களுடனையே மனிதனானவன் காணப்படுகின்றான். வயதாகி செல்கின்றபோது உடலில் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு போன்ற நிலைகள் ஏற்படும்.
Table of Contents
நரை திரை மூப்பு பிணி சாக்காடு
வயதாவதினால் உடலின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு எனப்படும். இறப்பை நோக்கி செல்லும் சிலவகை மாறுதல்களே இந்த ஐந்து நிலைகளாகும். இவை ஒரு மனிதனுடைய வாழ்வின் மிக முக்கியமான ஐந்து நிலைகளாகும்.
நரை
வயதாகும் சந்தர்ப்பத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களில் ஒன்றாக நரை காணப்படுகின்றது. அதாவது கறுப்பாக காணப்படுகின்ற தலைமுடி வெண்மையாகும் நிலையே நரை எனப்படும். வயதாகும் போது இது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகவே காணப்படுகின்றது.
திரை
வயதாகும் போது ஒரு மனிதனிடையே ஏற்படும் சுருக்கத்தை குறிக்கின்றது. இது வயது முதிர்ச்சியால் தோல் சுருங்கி காணப்படும். மேலும் திரளுதல், மடிப்பு விழுந்து சுருங்கும் நிலை போன்றன தோல்களில் காணப்படும்.
மூப்பு
மனிதனானவன் ஆரம்ப காலப்பகுதியில் இருந்தது போன்றே இருக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் செல்கையில் வயதானது கூடிக் கொண்டே செல்லும் இவ்வாறாக வயதான நிலையினை அடைவதனையே மூப்பு என குறிப்பிடப்படுகின்றது. அதாவது முதுமை எய்துவதான நிலையாகும். கூன் போடும் ஒரு நிலையாகும்.
பிணி
ஒரு மனிதன் வயதான நிலையை எய்தும் போது அடுத்ததாக அவன் எதிர்நோக்கும் ஒரு நிலையாக பிணி காணப்படுகின்றது. அதாவது பிணி என்பது நோயினை குறிப்பிடுகின்றது. அதாவது முதுமையில் ஏற்படக் கூடிய நோய்களாகும்.
இந்த காலப்பகுதியில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பக்கவாதம், மறதி, மூட்டு வலி போன்ற பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றது. இந்த முதுமையில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவிகின்றனர்.
சாக்காடு
சாக்காடு என்பது வயதான நிலையை கடந்த பின்னர் ஏற்படும் இறப்பினையே சாக்காடு எனப்படுகின்றது.
இவ்வாறான வாழ்வின் ஐந்து நிலைகள் காணப்பட்ட போதிலும் இவற்றிலிருந்து முதுமையினை ஒருவர் சிறந்த முறையில் எதிர்கொள்ளல் வேண்டும்.
முதுமையின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் முதுமை எம்மை ஆட்கொள்கின்ற போது ஆண், பெண் என இரு பாலருக்கும் ஹோர்மோன்கள் அதிகமாக சுரப்பதோடு ஹோர்மோன் சமநிலையின்மை ஏற்படும். இதன் காரணமாக தசைகளின் வலிமை குறைவடையும்.
எலும்புகள் தேய்மானங்கள் அடைய ஆரம்பிக்கும். எலும்புகள் உடையக் கூடிய நிலை ஏற்படும். அதாவது வயதாகும் போது கூன் விழுந்து எலும்புகள் வலு விழந்து போகும். மேலும் பக்கவாதம், முடக்குவாதம் போன்றன ஏற்படும்.
அதிகமான நோய்கள் இந்த வயதான காலப்பகுதிகளில் இலகுவாக எம்மை வந்தடைவதோடு விரைவில் மரணமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதாகும் போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடைந்து செல்லும். மேலும் ஓர் இயலாமை நிலையே காணப்படும்.
முதுமையின் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள்
முதுமையின் போது பல்வேறுபட்ட இன்னல்களை சந்நிக்க நேரிடும். முதுமையின் போது சத்துள்ள பழங்கள் மற்றும் உணவு வகைகளை உட்கொள்ளல் வேண்டும். இந்த காலப்பகுதிகளில் முதுமையானவர்களை தனித்து விடாது அவர்களை அன்போடு பார்த்துக் கொள்ளல் வேண்டும். இதனூடாக அவர்கள் சந்தோசமாக காணப்படுவார்கள்.
முதுமையானவர்களை இன்று பலர் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். மேலும் அவர்களை துன்புறுத்துகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினூடாக அவர்கள் பல்வேறு மனக்கவலைகளுடன் விரைவிலேயே மரணத்தினை எய்துகின்றனர்.
ஆகவே இவ்வாறான நிலைகளை தவிர்த்து அவர்களையும் மதித்து நடப்பதோடு அவர்களது நிலைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.
Read More: மாதவிடாய் தள்ளி போக காரணங்கள்