தொடர்பாடல் என்றால் என்ன

தொடர்பாடல் தடைகள்

தொடர்பாடல்அறிமுகம்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது தான் நியதி. இன்று உலகமே மாறிக் கொண்டிருக்கின்றது. உலகிலுள்ள எல்லா விடயங்களும் நாளுக்குநாள் மாற்றம் கண்டு கொண்டே இருக்கின்றது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நியதி என்றவாறு தொடர்பாடலும் பல மாற்றங்களைக் கண்டு வளர்ச்சியடைந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. தினசரி மனிதன் தொடர்பாடல் மூலமே தனது வாழ்க்கையை மேற்கொண்டு நடாத்துகின்றான் என்பது நிதர்சனமாகும்.

தொடர்பாடல் என்றால் என்ன

தொடர்பாடல் என்றால் என்ன

செய்திகள், தகவல்கள், கருத்துக்கள் போன்றவற்றை ஒரு பிரிவினருக்கு இடையில் அல்லது பல பிரிவினருக்கு இடையில் ஏதேனும் ஒரு ஊடகம் ஒன்றின் மூலம் கருத்துக்கள், தகவல்களைப் பரிமாற்றம் செய்வதே தொடர்பாடல் எனப்படும்.

அதாவது செய்தி, தகவல், கருத்து என்பன யாதேனும் ஊடகமொன்றின் மூலம் இரு பிரிவினரிடையே பரிமாற்றிக்கொள்ளும் செயன்முறையே தொடர்பாடல் ஆகும்.

தொடர்பாடல் வகைகள்

  1. Verbal Communication (வாய்மொழி தொடர்பாடல்)
  2. Non-Verbal Communication (வாய்மொழி அல்லாத தொடர்பாடல்)
  3. Written Communication (எழுத்து தொடர்பாடல்)
  4. Visual Communication (காட்சி தொடர்பாடல்)
  5. Feedback Communication (கருத்துத் தொடர்பாடல்)
  6. Mass Communication (வெகுஜன தொடர்பாடல்)
  7. Group Communication (குழு தொடர்பாடல்)

தொடர்பாடல் அடிப்படை கூறுகள்

  1. அனுப்புனர்
  2. பெறுநர்
  3. ஊடகம்

ஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன.

தொடர்பாடல் தடைகள்

  • உணர்வுகள்
  • உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை
  • கவனத்தை திசை திருப்பும் காரணிகள்
  • நம்பிக்கைகள்
  • நேரம் போதாமை
  • பெளதீகவியல் காரணிகள்
  • மருத்துவ ரீதியான காரணிகள்
  • மொழி தெரியாமை
  • வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல்

தொடர்பாடலின் வளர்ச்சிக் கட்டம்

உருவப்படங்கள் மற்றும் எழுத்தாவனங்களைப் பயன்படுத்தி தொடர்பாடுகின்ற முறை முதலாவது கட்டமாகும். ஆரம்ப காலங்களில் இருந்த எழுத்து மூலமான இத்தகைய தொடர்பாடல் நடமாடல் அற்றது. காரணம் இவை குறிப்பிட்ட இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களாகவே இருந்தன.

தொடர்பாடல் துறையின் இரண்டாவது வளர்ச்சி கட்டமாக கடதாசி, கிளே வெக் போன்ற திரவியங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட எழுத்து மூலமான தொடர்பாடலினை குறிப்பிட முடியும்.

தொடர்பாடலின் மூன்றாவது கட்டமாக இலத்திரனியல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி தொடர்பாடல் மேற்கொள்ளப்படுகின்ற முறையினை குறிப்பிடலாம்.

இவ்வாறு தொடர்பாடலானது பல வளர்ச்சிக்கட்டங்களைக் கடந்து இன்று நவீன தொடர்பாடல் நிலைக்கு வளர்ச்சி பெற்றுள்ளது எனலாம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக தொடர்பாடல் துறையில் பாரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக ஊடகத்துறை, கல்வித்துறை, விஞ்ஞானம் போன்றவற்றில் பாரியளவில் வளர்ச்சி நிகழ்ந்துள்ளது எனலாம்.

தொடர்பாடலின் நோக்கம்

பொதுவாக தொடர்பாடலின் நோக்கம் எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனை நோக்காகக் கொண்டுள்ளது.

தொடர்பாடலானது திறமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும், புதியனவற்றை அறிந்து கொள்வதற்கும், ஓய்வு நேரப் பொழுது போக்கினை செலவிடுவதற்கும், பிறரை வழி நடத்தவும், அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் நோக்காகக் கொண்டுள்ளது.

மனிதனும் தொடர்பாடலும்

மனிதன் எப்போதும் தனித்து வாழ விரும்புவதில்லை. குழுக்களாகவே வாழ விரும்புகின்றான். இவ்வாறு குழுக்களாக வாழும் போது அங்கத்தவர்களிடையிலோ அல்லது குழுக்களிடையிலோ செய்திகளை அல்லது கருத்துகளை அல்லது தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு தொடர்பாடல் முறையின் அவசியம் உணரப்பட்டதனாலேயே தொடர்பாடல் உதயமாகின.

மனிதன் பண்டைய காலம் முதல் இன்றுவரை தொடர்பாடலை மேற்கொண்டு வருகின்றான். தொடர்பாடல் மனிதனுடன் இரண்டறக் கலந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ஆரம்பத்தில் அங்க அசைவுகளாலும், மேளங்கள் தட்டியும், நெருப்பின் மூலமும் தொடர்பாடலை மனிதன் மேற்கொண்டான்.

இன்று தொடர்பாடலை மேற்கொள்வதற்கு உடல் அசைவுகள், கை அசைவுகள், நேர்காணல், குரல், கருத்துக்கள், சொற்கள் எனத் தொடர்பு கொள்ளும் முறைகள் பலவாக இருப்பதுடன், பல தொடர்பாடல் சாதனங்களும் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு மனிதன் பயன்படுத்துகின்றான்.

உறவுகள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. மனிதர்கள் தங்களுடைய ஏதோ ஒரு தேவையினை பூர்த்தி செய்வதற்கு ஒருவர் ஒருவருடன் எப்படியோ தொடர்புபட்டிருக்க வேண்டும்.

எனவே சிறந்த தொடர்பாடலை மேற்கொண்டு தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களோடு நல்ல உறவை மேற்கொள்ளுதல் என்பது மிக முக்கியமானதாகும்.

You May Also Like :
அறிவியல் வளர்ச்சி கட்டுரை
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை