ஒரு வரி பொன்மொழிகள்

Oru Vari Ponmozhigal

எண்ணங்களும் சிந்தனைகளும் சிறந்ததாக இருந்தால் வாழ்வும் சிறப்பாக இருக்கும். இந்த பதிவில் “ஒரு வரி பொன்மொழிகள் (Oru Vari Ponmozhigal)” காணலாம்.

  • ஒரு வரி பொன்மொழிகள்
  • Oru Vari Ponmozhigal

ஒரு வரி பொன்மொழிகள்

புத்திசாலித்தனமும், தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே இருக்கும்.
பிறர் நலன் பேணுவதே சொர்க்கம். மற்றவர் வளர்ச்சி கண்டு மனம் புழுங்குவதே நரகம்.
மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.
அதிகாலையிலேயே எழுந்து மனதில் நல்ல எண்ணத்தைப் பரவவிடுங்கள்.
இதய வங்கியில் அன்பைச் சேமியுங்கள். அதை எந்த திருடனாலும் களவாட முடியாது.
பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டுகிறது.
தகுதியானது எதுவோ அது முடிவில் உங்களுக்கு கிடைக்கவே செய்யும்.
கடலுக்கு அலையும், வானுக்கு நிலவும் போல, மனிதனுக்கு நேர்மையே அழகூட்டுகிறது.
உண்மையே எப்போதும் வெல்லும் ஆற்றல் படைத்தது. இதில் சந்தேகம் கொள்வது கூடாது.
உழைத்து வாழப் பழகியவனுக்கு யாரிடமும் கைநீட்டி யாசிக்கும் அவசியம் உண்டாகாது.
குற்றம் குறையில்லாத மனிதன் யாருமில்லை. நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்த உலகம்.
கோபம் ஏற்படுவது மனித இயல்பு தான். ஆனால், கோபத்தில் எந்த முடிவும் எடுக்க முற்படாதீர்கள்.
அளவோடு பேசுங்கள். அதுவும் பிறரை புண்படுத்தாத விதத்தில் இனிமையுடன் இருக்கட்டும்.
உலகில் விலை உயர்ந்த பொருள் காலம் மட்டுமே. வாழ்வில் ஒரு நொடியைக் கூட வீணாக்காதீர்கள்.
சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீது தான் தர்மம் என்னும் கட்டிடம் நின்று கொண்டிருக்கிறது.
சத்தியம் ஒருபோதும் மாறாதது. ஆனால், இடத்தைப் பொறுத்து தர்மம் மாறிக் கொண்டேயிருக்கும்.
சத்தியத்தையும், தர்மத்தையும் இரு கண்களாகப் போற்றி பாதுகாக்க வேண்டும்.
சத்தான உணவால் உடல் பலம் பெறுவது போல, நல்ல எண்ணத்தால் மனம் பலம் பெறுகிறது.

Oru Vari Ponmozhigal

எங்கு தேடினாலும் சொர்க்கத்தை அடைய முடியாது. ஒழுக்கமுடன் வாழ்ந்தால் சொர்க்கம் நம்மைத் தேடி வந்து விடும்.
நாம் நல்லவர்களாக இருப்பதோடு, நாம் பழகுகின்ற நண்பர்களும் நல்லவர்களாக இருப்பது அவசியம்.
தர்மத்தை நாம் காப்பாற்றினால் அந்த தர்மம் நம்மைக் காப்பாற்றி கரை சேர்க்கும்.
மனிதனுக்கு நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறனை கடவுள் கொடுத்து இருக்கிறார்.
தர்மத்தைப் பற்றி பேசுவதை காட்டிலும், செயலில் வெளிப்படுத்துவதே சிறந்தது.
பாவம் செய்ய அச்சப்படுங்கள். இதுவே உலகிற்கு நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு.
மற்றவர்களின் சந்தோஷத்தைக் கண்டு நீங்களும் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
எந்த வேலையில் ஈடுபட்டாலும், அதற்கு உரிய நேரத்திற்குள் செய்து முடியுங்கள்.
வெறும் பேச்சோடு மட்டுமில்லாமல், நடத்தையாலும் உங்கள் செயல்பாடு உண்மையாக்கப்பட வேண்டும்.
சிந்தித்ததை எல்லாம் பேச வேண்டாம். யோசித்து தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுங்கள்.
குறுக்கு வழியில் பணம் தேடலாம். ஆனால், அது நிலைப்பதில்லை.
ஆசைகளை நெறிப்படுத்தவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ளுங்கள்.
தீய எண்ணம் நம்மைத் தாக்காமல் காத்துக் கொள்ள நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள்.
மனிதனைத் தாக்கும் ஆயுதம் போன்றது நாக்கு. நாக்கினால் உண்டான காயம் எளிதில் ஆறுவதில்லை.

You May Also Like:

வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள்

Motivational Quotes In Tamil

சிறந்த தமிழ் பொன்மொழிகள்