தேர்ச்சி என்றால் என்ன

therchi in tamil

தேர்வுகள் நம்மை தேர்ச்சி அடைய வைப்பதாக இருக்க வேண்டும். வாழ்வில் உயர்ச்சியைத் தரும் படிக்கல்லாக அமைய வேண்டும். தேக்கமில்லாது அனைத்துக் குழந்தைகளும் கல்வியை நிறைவு செய்வதற்கு தேர்ச்சி இன்றியமையாததாகும்.

தேசத்தின் எதிர்காலத்தைச் சுமக்கப் போகின்றவர்கள் மாணவர்கள்தான். அவர்களுக்கான தேர்வும், அத் தேர்வில் தேர்ச்சியுமே அவர்களை வாழ்வில் வெற்றி பெற வைக்கும்.

மாணவர்களின் கற்றல் தேர்ச்சிகள் அனைத்தினதும் பாண்டித்தியத்தை உறுதிப்படுத்துதல் வகுப்பாசிரியரின் கடமையும் பொறுப்புமாகும்.

மாணவர்கள், ஒவ்வொரு வகுப்பிற்குரிய கற்றல் அறிவை முழுமையாக பெற வேண்டும், அதற்கேற்ப மாணவர்கள் கற்பிக்கப்பட வேண்டும் அவ்வாறு கற்பிக்கப்படும் போதுதான் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைய முடியும்.

குறிப்பிட்டதொரு தேர்ச்சியை மாணவர்கள் அடையவில்லை எனில், குறித்த தேர்ச்சியை அடைவதற்கு மாணவனுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வேண்டும்.

மாணவர்கள் கல்வியில் மட்டும் தேர்ச்சி பெற்றிராது, ஏனைய துறைகளிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றுக்கொண்டால் சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

தேர்ச்சி என்றால் என்ன

தேர்ச்சி என்பது ஒரு பொருள் அல்லது சாதனைகளில் விரிவான அறிவு அல்லது திறன் ஆகும்.

மேலும் தேர்ச்சி என்பது அறிவு, திறன், மனப்பாங்கு, விழுமியங்களில் பிள்ளை அடைய வேண்டிய பாண்டித்திய தேர்ச்சியாகும்.

சில தேர்ச்சிகள் திறனை நோக்கியதாகவிருக்கும். வேறு தேர்ச்சிகள் அறிவையும் மனப்பாங்கையும் சார்ந்திருக்கும். சில தேர்ச்சிகள் விழுமியத்தை நோக்கியதாகவிருக்கும்.

பரீட்சையில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள்

அனைவருமே கல்வியில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க முடியாது. ஒரு சில குழந்தைகள் எப்பொழுதும் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடிப்பர்.

ஒரு சில குழந்தைகள் சற்று கவனக் குறைவுடன் இருந்து குறைவான மதிப்பெண் பெறுவர்.

சில பிள்ளைகளுக்கு படித்த பாடங்கள் சில நாட்களுக்கு மட்டுமே ஞாபகம் இருக்கும். அவர்கள் தேர்வு என்று வரும் பொழுது மீண்டும் அவற்றை படிக்க முயற்சி செய்தால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.

தேர்ச்சியை அடைந்துகொள்ள பயிற்சி என்பது இன்றியமையாததாகும். சிறுபிள்ளைகளுக்கு எழுத்துப் பயிற்சி, வாசிப்புப் பயிற்சி போன்றவற்றை வீட்டில் பெற்றோர்கள் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் தேர்ச்சி மட்டத்தை அதிகரிக்க முடியும்.

தேர்வுக்கான பயிற்சியும், அதனையொட்டிய கடின உழைப்பும் மாணவர்களுக்கு தேர்ச்சியை பெற உதவும்.

கல்வியில் தொடர்பாடல் தேர்ச்சிகள்

சிறந்த தொடர்பாடலே சிறந்த கல்வி, அபிவிருத்தியை ஏற்படுத்துகிறது. கற்றல், கற்பித்தலில் ஆசிரியர் மாணவர்களுக்கு இடையில் தொடர்பாடல் என்பது முக்கியமான விடயமாகிறது.

இன்றைய கற்பித்தல் முறையில் தொடர்பாடல்சார் தேர்ச்சியானது முதன்மை நிலையைப் பெறுகின்றது.

ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சி என்பது மாணவர்களிடையே ஆக்கம், தற்துணிவு, சுயமாக தீர்மானம் எடுக்கும் திறன், விரிந்த சிந்தனை முதலிய திறமைகளை வெளிப்படுத்த உதவும் தேர்ச்சி முறையாகும்.

சுற்றாடல் தொடர்பான தேர்ச்சி என்பது சமுதாயச் சூழல், உயிரியல் சூழல், பௌதீக சூழல் பற்றி அறிதல் ஆகும்.

இதனால் ஒவ்வொரு மாணவனும் கல்வியினால்தான் வாழும் உலகின் தன்மை பற்றி அறிய முடியும். இலக்கியம், விளையாட்டு முதலிய பல்வேறு துறைகளில் பிரகாசிப்பதற்கான திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய கல்வி முறை பரீட்சையை மட்டும் மையப்படுத்தியதாக அன்றி தொழிற் கல்வியை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். கல்வியில் இத்தகைய தேர்ச்சிகளின் வாயிலாக முன்னேற்றமடைந்த ஒரு கல்வி கற்ற சமுதாயம் எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more: சமூக நீதி என்றால் என்ன

ஓசோன் படலம் என்றால் என்ன