பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் தூக்கம் என்பது இன்றியமையாதது. காலை எழுந்து மாலை வரை உழைத்து விட்டு இரவில் கண்களை மூடி உடலுக்கும் கண்களுக்கும் ஓய்வு கொடுக்கும் நிலையே தூக்கம் எனப்படும்.
தூங்காமல் எவராலும் தன் வேலையை சரிவர செய்ய முடியாது. ஆழ்ந்த தூக்கத்தின் பின் அதிகாலையில் வேலை செய்யும் போது ஒரு புதுவித உணர்வு கிடைக்கும்.
ஆனால் தற்காலத்தில் சிலர் முறையான தூக்கம் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கின்றனர். அது அவர்களின் உடல் நலத்திற்கு நிச்சயம் கேடு விளைவிக்கும்.
சிலர் கடன் சுமை காரணமாகவும், வேலைப்பளு காரணமாகவும், பல தரப்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் தூங்காமல் இருக்கின்றனர். இதனால் அவர்களின் உடல் நலப் பாதிப்படைந்து நோய்க்கு ஆளாவார்கள். தூக்கம் என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் அவசியம்.
தூக்கம் வேறு சொல்
- உறக்கம்
- துயில்
- நித்திரை
- சயனம்
இலகுவான தூக்கம்: இலகுவான தூக்கம் என்பது தூக்கத்துக்கும் – விழிப்புக்கும் இடையே மனம் பயணப்படும் நேரம் எனலாம். இந்த வகை தூக்கத்தில் இருப்பவர்கள் சிறிய சப்தத்திற்கு கூட திடுக்கிட்டு எழுந்து கொள்வார்கள்.
உண்மையான தூக்கம்: இலகுவான தூக்கத்தின் அடுத்த நிலையில் வருவதுஉண்மையான தூக்கம் ஆகும். இந்த நிலையில்தான் பெரும்பாலானவர்களின் தூக்கம் நிகழ்கிறது.
ஆழமான தூக்கம்: இந்த நிலையில் இதயம்-மூச்சு இரண்டும் மிக மிகக் குறைந்த அளவிலேயே இயங்குகின்றன. இந்த உறக்கமானது முழுமையானதாக இருக்கும். இந்த உறக்க நிலையில் எழுப்பினால் ஓரிரு நிமிடங்கள் கழித்து நிதானமாக, தெளிவாக விழித்துக் கொள்வார்கள்.
மிக ஆழமான தூக்கம்: இந்த உறக்கத்தில் இருப்பவர்கள், அசைவற்று உறங்குவார்கள். இவரை எழுப்பினால், எங்கு இருக்கிறோம்? என்ன நிகழ்கிறது என்பதை உணராமல் குழம்பிப் போய் தடுமாறுவர். சூழலுக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளவே அவருக்கு நிறைய நேரமாகும்.
Read more: தூக்கம் வர எளிய வழிகள்