நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டியவை

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பர். நலத்துடன் கூடிய வாழ்வு குறைவில்லா செல்வத்துக்கு சமனாகின்றது. நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும்.

இன்றைய வாழ்க்கை முறையில் பல்வேறுபட்ட நோய்களைச் சந்திக்க நேரிடுகின்றது. இவற்றிலிருந்து பாதுகாப்பு பெற்று நோயின்றி ஆரோக்கியமான வாழ்வு வாழ்தல் அவசியமாகின்றது.

நோயற்று வாழ்வு வாழ்வதற்கு சில முயற்சிகளை எடுக்கும்போது நோய் வருவதைக் கட்டுப்படுத்தலாம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

#1. உணவின் அளவு

நாம் எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அளவோடு உண்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பதும், அளவுக்கதிகமாக உண்பவர்கள் நோய்களுக்கு ஆளாவதும் இயற்கை.

#2. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

உடல் ஆரோக்கியத்தில் உடற்பயிற்சியின் பங்களிப்பு மகத்தானதாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்க முடியும், எலும்புகளும் தசைகளும் உறுதியாக இருக்கும், நீண்ட நாள் வாழ முடியும். சிறியவர்கள் பெரியவர்கள் என எல்லாருமே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

#3. சுத்தத்தை பேணுதல்

மனிதர்களாகிய அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஆரோக்கிய வழிமுறைகளில் ஒன்றே சுத்தம் பேணுதல் ஆகும். அதனால் தான் கூறுவர் “சுத்தம் சுகம் தரும்” என்று. உணவு உண்பதற்கு முன்பும், பின்பும் சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுதல் வேண்டும். தினமும் குளித்தல் நன்று.

#4. எண்ணெய் உணவுகளை உண்ட பின்பு வெந்நீர் அருந்த வேண்டும்

வெந்நீருக்கு கொழுப்பைக் கரைக்கும் சக்தி உண்டு. உணவு உண்ட பின்பு வெந்நீர் பருகினால், எண்ணெயினால் படியும் கொழுப்பை வெந்நீர் கரைத்துவிடும். ஆனால் முடிந்தவரை உணவில் அதிக அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

#5. சத்தான உணவை மட்டும் சாப்பிடுங்கள்

ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ணும் போது ஆரோக்கியமாக வாழ முடியும். பழங்களையும், காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தானியங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஏனெனில் தானியங்களில் அதிக ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கின்றன. இவை உடலுக்கு ஊட்டச்சத்தை கொடுப்பதுடன் நோயின்றி வாழவும் உதவுகின்றன.

#6. அளவான தூக்கம்

தூங்குவதற்கு நேரம் இல்லை எனக்கூறி தூக்கத்தைத் தவிர்ப்பது தவறானது. சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் எடை அதிகமாகலாம். மன அழுத்தம் ஏற்படலாம், இருதய நோய், சர்க்கரை வியாதி வரலாம். மோசமான விபத்துகள் ஏற்படுவதற்கு கூட காரணமாகி விடலாம்.

எனவே போதுமான அளவு தூங்கினால் நோய்கள் வராமல் ஆரோக்கியமாக வாழலாம்.

#7. காலை உணவைத் தவிர்க்காதீர்கள்

உடலில் ஆற்றல் வேண்டும் என்றால் அதை உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். இரவு உணவு உண்ட பின்பு நீண்ட நேரத்தின் பின் உண்ணும் உணவு காலை உணவாகும். காலை உணவே நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலை வைத்திருக்க உதவுகின்றது. எனவே காலை உணவை தவிர்த்தல் கூடாது.

#8. மலசலத்தை அடக்குவதை தவிர்த்தல்

தினமும் காலையில் மலம் கழிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. மலசலத்தை அடக்குவதால் மலச்சிக்கல் ஏற்படும் நோய்களில் மிகவும் தொல்லை தரும் நோய் மலச்சிக்கலாகும்.

#9. போதியளவு நீர் பருக வேண்டும்

தண்ணீரானது தாகத்துக்கு மட்டுமன்றி நோயின்றி வாழவும் முக்கியம் பெறுகின்றது. உடலின் நச்சுக்களை வெளியேற்றி மற்ற உறுப்புகளுக்கு போதுமான ஆற்றலை அளிப்பதில் தண்ணீர் சிறந்தது.

#10. உடலின் மீது அக்கறை கொள்ளுங்கள்

உங்கள் உடலில் மாற்றங்கள் நிகழும்போது அதனை கவனிப்பது இன்றியமையாதது. உடலில் பிரச்சனையை உணரும் போது வைத்தியரை அணுகுவது சிறந்தது. களைப்பாக உணரும் தருணங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

You May Also Like :
தூதுவளை பயன்கள்
வாய் துர்நாற்றம் நீங்க டிப்ஸ்