தடுப்பூசி என்றால் என்ன

thaduppu oosi in tamil

அறிமுகம்

உலகில் பல்வேறு வகையான நோய்கள் ஏற்பட்டுள்ளன. இன்றுவரை ஏற்பட்டும் வருகின்றன. இவை தொற்றும் நோய்களாகவும், தொற்றா நோய்களாகவும் காணப்படுகின்றன.

நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற தடுப்பூசிகள் மனித குலத்திற்குப் பெரும் பாதுகாப்பாக விளங்குகின்றன. தடுப்பூசிகள் இறந்த அல்லது பலவீனமான ஆன்டிஜென்களால் தயாரிக்கப்படுகின்றன.

சில தடுப்பூசிகள் விலங்குகளில் வேலை செய்யும் மனிதர்களில் பலனளிக்காமல் போகலாம். சில தடுப்பூசிகள் பக்கவிளைவை ஏற்படுத்தலாம். இப்படி செயல்படும் விதமே தடுப்பூசியை கண்டுபிடிக்க தாமதத்திற்கும் காரணம் ஆகும்.

தடுப்பூசி என்றால் என்ன

தடுப்பூசி என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும் மருந்து ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

நம்மையும் நம் குழந்தைகளையும் உடல் நலக்குறைவிலிருந்து பாதுகாக்க நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் தடுப்பூசி. தடுப்பூசிகள் உலகளவில் பல மில்லியன் இறப்புகளைத் தடுக்கின்றன.

தடுப்பூசிகள் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லும், அல்லது பாதிக்கும் பெரியம்மை, போலியோ மற்றும் டெட்டனஸ் போன்ற நோய்கள் மறைந்துவிட்டன அல்லது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன எனலாம்.

இருப்பினும், மக்கள் தடுப்பூசி போடுவதை நிறுத்தினால் தொற்று நோய்கள் விரைவாக மீண்டும் பரவும் சாத்தியம் உள்ளது.

மனித உடலானது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கின்ற போதும் துரதிர்ஷ்டவசமாக புதிதாக சில வகை கிருமிகளை எதிர்கொள்ளும்போது, ஆன்டிபாடி மூலம் எதிர்வினை நடக்கப் பல நாட்கள் ஆகலாம்.

ஆன்டிபாடிகள் வேலை செய்ய ஆரம்பிப்பதற்குள் இறப்பு கூட நேரிடலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்காகத் தான் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனவே இறப்பைக் குறைப்பதற்கும், நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கும் தடுப்பூசிகள் இன்றியமையாததாகும்.

தடுப்பூசியின் பயன்கள்

தடுப்பூசிகள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் சிக்கலான மற்றும் வலுவான பாதுகாப்பு வழிமுறைகளை ஆதரிக்கின்றன. எதிர்காலத்தில் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

ஒரு தொற்று நோய்க்கான நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. எதிர்கால உடல் நலப் போர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தயார் செய்வதன் மூலம், தடுப்பூசிகள் உலகெங்கிலும் உள்ள தனிநபர்களை ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.

தடுப்பூசிகள் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் முதல் தடுப்பூசி

முதல் தடுப்பூசியை பிரிட்டிஷ் மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner) அறிமுகப்படுத்தினார். அவர் 1796 ஆம் ஆண்டில் கௌபாக்ஸ் வைரஸை (தடுப்பூசி) பயன்படுத்தினார்.

இவரே பெரியம்மை வைரஸிற்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்து மனிதர்களுக்குப் பாதுகாப்பை வழங்கியவராவார். இவர் ஓர் ஆங்கிலேய மருத்துவர், அறுவைச் சிகிர்ச்சை நிபுணர் மற்றும் வேதியல் நிர்ணர் ஆவார். இவர்தான் “தடுப்பூசியின் தந்தை” என்றும் “நோய் எதிர்ப்பின் பிதா மகன்” என்றும் அழைக்கப்படுகின்றார்.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி

போதுமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால், தடுப்பூசிகள் “மந்தை நோய் எதிர்ப்பு சக்தி” மூலம் சமூகங்களை நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் போதுமான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும்போது நோய்கள் மேலும் பரவ வாய்ப்பில்லை.

You May Also Like :
நோய் வரக் காரணங்கள்
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்