ஜோடி வேறு சொல்

ஜோடி வேறு பெயர்கள்

ஜோடி என்பது வடமொழிச் சொல்லாகும். தமிழில் அது சோடி என திரிபடைந்து காணப்படுகின்றது. ஜோடி என்பது பெயராகவும் வினையாகும் வரக்கூடிய சொல்லாகும்.

பெயராக வரும் போது இணை என்று பொருள்படும். வினையாக வரும் போது அலங்கரி என்று பொருள்படும்.

ஜோடி என்ற சொல்லானது ஜோட் என்ற உருது சொல்லில் இருந்து தோன்றியது என்ற கருத்தும் காணப்படுகின்றது. ஜோட் என்றால் இரட்டை அல்லது இரண்டின் கூட்டு என்று பொருள்படும் அதே பொருளையே ஜோடி என்ற சொல்லும் பெறுகின்றது.

இரண்டு ஒரே தன்மையுடைய பொருட்கள் சேரும் போது அதை நாம் ஜோடி என்கிறோம். உதாரணமாக மனம் ஒருமித்த காதலர் இருவர் ஒன்று சேரும் போது அவர்களை நாம் ஜோடி என்கிறோம் அதோடு பாதனிகள் இரண்டையும் ஜோடி என்றே அழைக்கின்றோம்‌.

இவ்வாறு ஜோடி என்ற சொல் தமிழ்ப்பயன்பாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறான ஜோடி என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்களும் காணப்படுகின்றன.

ஜோடி வேறு சொல்

  1. இணை
  2. கூட்டு
  3. இரட்டை
  4. சோடி
  5. ஜதை

இவ்வாறான வேறு பெயர்கள் சோடிக்கு வழங்கப்படுகின்றன.

Read more: அமாவாசை அன்று செய்ய கூடாதவை

கடகம் ராசி குணங்கள்