அரசானது சமூக நலத்தினைப் பேணுவதற்காகப் பல சமூக நலத்திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றது. இதற்கு வருவாய் என்பது அவசிமாகும். இதற்காக மக்களிடமிருந்து வசூலிக்கப்படுவதே வரி ஆகும். இவ்வாறு அரசால் விதிக்கப்படும் வரியையே வரிவிதிப்பு எனக் கூறுவர்.
ஒவ்வொருவரும் சட்டத்துக்குட்பட்டு வரி செலுத்துவது இன்றியமையாததாகும். இது ஒவ்வொரு குடிமகனதும் கடமையாகவும் உள்ளது. வரிகள் இல்லையேல் சமுதாய நலத்திற்குத் தேவையானவற்றை அரசால் செய்ய இயலாது. எனவே அனைவரும் உரிய வகையில் சட்டத்துக்குட்பட்டு வரி செலுத்துவது தார்மீகக் கடமையாகும்.
இந்தியாவில் வரிகள் இரண்டு வகையாகக் காணப்படுகின்றன. அதாவது நேர்முகவரி மற்றும் மறைமுகவரி என்பவையே அவை இரண்டுமாகும்.
நேர்முக வரி என்பது தனியாள் அல்லது தனி நிறுவனம் நேரடியாக அரசுக்குக் கட்டும் வரி நேர்முக வரி ஆகும். உதாரணமாக சொத்துவரி, தனியாள் சொத்துவரி, வருமான வரி, உறுதி மொழிப் பத்திரங்களின் மீதான வரி போன்றவற்றைக் கூறலாம்.
மறைமுக வரி என்பது தொடக்கத்தில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றவருக்கு மாற்றப்படும். இந்த முறையே மறைமுகவரி எனப்படுகின்றது. உதாரணமாக இறக்குமதி வரி, கேளிக்கை வரி, விற்பனை வரி, சுங்க வரி, கலால் வரி போன்றவை ஆகும்.
அந்த வகையில் சுங்கவரியானது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. குறிப்பாக பொருட்கள் வாங்கும் இடம், பொருட்கள் தயாரிக்கப்பட்ட இடம், பொருட்களின் பொருள், பொருட்களின் எடை மற்றும் பரிமாணங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.
வருவாயை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டு வணிகம், வேலைகள், சுற்றுச்சூழல், தொழில்கள் போன்றவற்றை மற்ற நாடுகளின் கொள்ளையடிக்கும் போட்டியாளர்களிடமிருந்து பாதுகாப்பது போன்றவற்றை சுங்கவரி நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுங்க வரியின் மூலம் சாலைகளின் பராமரிப்பு மற்றும் சுங்க கட்டணம் வசூலிக்க தேவையான உள்கட்டமைப்பு போன்றவற்றிக்கு இந்த கட்டணத்தின் மூலம் நிதியளிக்கப்படுகின்றன.
கறுப்புப் பணப் புழக்கத்தைக் குறைக்கவும், மோசடி நடவடிக்கைகளைக் குறைக்கவும் சுங்கவரி உதவுகிறது.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் சுங்க வரி விதிக்கப்படுகிறது. மறுபுறம், ஏற்றுமதி வரிகள் ஒரு சில பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது.
பொதுவாக உயிர் காக்கும் மருந்துகள், உரங்கள், உணவு தானியங்கள் மீது சுங்க வரி விதிக்கப்படுவதில்லை.
Table of Contents
சுங்க வரி என்றால் என்ன
சுங்கவரி என்பது சர்வதேச எல்லைகளுக்குள் பொருட்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்படும் வரியை குறிக்கிறது.
இதனை வேறு விதமாக கூறினால், குறித்த ஒரு நாட்டிற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை நகர்த்துவதற்கு அதிகாரிகளால் சேகரிக்கப்படும் ஒரு வகையான கட்டணமாகும்.
பொதுவாக வரிகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்கின்றது. எனவே ஒரு அரசானது நாட்டின் நலனுக்காக சரியான முறையில் வரியைப் பயன்படுத்த வேண்டும். இதனை ஆட்சி நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சுங்க வரியின் வகைகள்
சுங்கவரியானது பல்வேறு வரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன,
அடிப்படைச் சுங்கவரி – சுங்கச் சட்டம் 12ன் படி பிரிவு 1962ன் ஒரு பகுதியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இவ்வரி விதிக்கப்படுகின்றது.
கூடுதல் வரி – சுங்கக் கட்டணச் சட்டம் 3ன் பிரிவு 1975ன் கீழ் கூறப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியாகும்.
பாதுகாப்பு கடமை – இவ்வரியானது வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு எதிராக உள்நாட்டு வணிகங்கள் மற்றும் உள்நாட்டுத் தயாரிப்புக்களைப் பாதுகாக்கும் நோக்கமாக விதிக்கப்படுவதாகும்.
கல்வி செஸ் – சுங்கவரியில் சேர்த்து 2% கூடுதல் உயர்கல்வி வரியுடன் 1% வசூலிக்கப்படுகின்றது.
டப்பிங் எதிர்ப்பு கடமை – இவ்வரியானது இறக்குமதி செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட பொருள் நியாமான சந்தை விலைக்கு குறைவாக இருந்தால் விதிக்கப்படும்.
Read more: துத்தி இலையின் பயன்கள்