இலக்கியங்கள் யாவும் ஒரு காலத்தின் கண்ணாடியாக சமூகத்தை பிரதிபலிக்கும் ஊடகமாக விளங்குகின்றது.
Table of Contents
கோபல்லபுரத்து மக்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கிராமத்து விருந்தோம்பல்
- புதிய மனிதன் அறிமுகம்
- நீச்சுத் தண்ணீர்
- ஜீவ ஊற்று
- அன்னமய்யாவின் பெயர்ப் பொருத்தம்
- முடிவுரை
முன்னுரை
மழையை பெரிதும் எதிர்பார்த்து வானை நம்பி வாழ்கின்ற மானாவாரி என்கின்ற மக்களின் வாழ்க்கையினை எடுத்துரைக்கும் கரிசல் இலக்கியமாக கோபாலபுரத்து மக்கள் என்னும் இலக்கியம் அமைந்துள்ளது.
தமிழ் இலக்கிய உலகில் இந்த கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவராக கி.ராஜநாராயணன் என்பவர் காணப்படுகின்றார். இந்த இலக்கியத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை முறைகளை சிறப்பாக அறிந்து கொள்ள முடிகிறது.
கிராமத்து விருந்தோம்பல்
இந்த இலக்கியத்திலே, கோபாலபுரத்தில் வசிக்கின்ற மக்கள் பசித்த வேளையில் அவ்வழியே வரும் அறிமுகம் இல்லாதவர்களையும் அன்புடன் வரவேற்று விருந்தளிப்பவர்களாக, தன்னிடம் காணப்படுகின்ற எளிய உணவுகளையும் பகிர்ந்தளித்து இன்முகத்துடன் உண்பர் என்று கூறப்படுகிறது.
மற்றும் இத்தகைய குணாதிசயங்கள் கொண்ட சிறப்பான விருந்தோம்பல் பண்பு மிகுந்த வல்லந்திர மக்கள் காணப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
புதிய மனிதன் அறிமுகம்
இந்த இலக்கியத்திலே பிரதான கதாபாத்திரமான அன்னமய்யா எனும் வாலிபன் அதிகாலையில் வயலுக்குச் சென்று கொண்டிருந்தான்.
அந்நேரத்தில், அந்த வழியிலே ஓர் மனிதன் பசியினால் வாடி சோர்ந்து புளியமரம் ஒன்றின் நிழலில் சாய்ந்திருந்ததை கண்டு நின்றார். அவன் பேச விரும்பாதவன் போல் மெல்லப் புன்னகைத்தான்.
சிறிது நேரம் கழித்து அங்கேயே நின்று கொண்டிருந்த அன்னமய்யாவிடம் “தம்பி எனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று சற்று தயக்கத்துடன் கேட்டான் அந்த புதிய மனிதன்.
நீச்சுத் தண்ணீர்
அன்னமய்யா என்ற வாலிபன் புளிய மரத்தின் நிழலே சாய்ந்திருந்த மனிதனை அழைத்துச் சென்று ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமரச் செய்து விட்டு மணல் தரையின் பாதி புதைக்கப்பட்டிருந்த கற்களால் மூடப்பட்டிருந்த மண் கலயத்தை அடுத்து அதனுள் இருந்த நீத்து பாகத்தை(நீச்சுத் தண்ணீர்) வடித்து அம்மனிதனுக்கு கொடுத்தான்.
ஜீவ ஊற்று
அந்த புதிய மனிதன் நீச்சுத் தண்ணீரை குடித்து முடித்ததும் கலயத்திற்கு மேலே சுற்றி வைத்திருந்த மகுளியையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொடுத்தான். அதனையும் முழுவதுமாக மூச்சுவிடாது குடித்தான். இதன் மூலம் அவனுள் ஜீவ ஊற்று உருவாகி பொங்கி நிறைந்தது. இதனால் அந்த மனிதன் அந்த மரத்தடியிலேயே சாய்ந்து கண் அயர்ந்து விட்டான்.
அன்னமய்யாவின் பெயர்ப் பொருத்தம்
கண் விழித்து எழுந்த அந்த மனிதனிடம் அன்னமய்யா ” உமது பெயர் என்ன?” என்று வினவினார். அதற்கு அவன் ” தனது பெயர் சுப்பையா எனவும் தற்போது மணி என்றே அழைக்கின்றனர்.” என்று கூறிவிட்டு,
அன்னமய்யாவை நோக்கி “உங்கள் பெயர் யாது ?” என்று வினவினார். அன்னமய்யா என்று கூறியதும், அவர் மனத்துக்குள் “அனைவர்க்கும் எவ்வித எதிர்பார்ப்பும் அன்னம் அளித்து உயிரை காக்கும் கடவுளாக காணப்படுவதால் இப்பெயர் தங்களுக்கு சாலப் பொருந்துவதாகவே காணப்படுகிறது.” என எண்ணினார்.
முடிவுரை
தமிழரது பண்பாடுகளில் சிறப்பான பெருமைகொள் பண்பாடாக காணப்படும் விருந்தோம்பல் என்பது பேணி பாதுகாக்கும் பண்பாடாக காணப்படும் மனிதநேயச் செயல் என்பதை அன்னமய்யாவனது செயல்களிலும் அவ்வூர் மக்களது கூற்றுக்களிலும் சிறப்புற கரிசல் இலக்கியமான கோபல்லபுரத்து இலக்கியம் வாயிலாக சிறப்பாக அறியலாம்.
Read More: ஊழ்வினை வந்து உறுத்தும் கட்டுரை