Table of Contents
குருத்தோலை ஞாயிறு அறிமுகம்
கிறிஸ்தவர்களால் பல வழிபாட்டு நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு மிக்கனவாகக் காணப்படுகின்றன. அந்த வகையில் குருத்தோலை ஞாயிறும் ஒன்றாகும்.
கிறிஸ்தவர்களின் நாற்பது நாள் தவக்காலத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக குருத்தோலை ஞாயிறு கருதப்படுகின்றது.
இயேசுக் கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வாக குருத்தோலை ஞாயிறு திகழ்கின்றது.
உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ மக்கள் தங்கள் நாட்டு வழக்கப்படி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன
குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கழுதை மேல் அமர்ந்து ஒலிவ மலையில் இருந்து வந்து கித்திரோன் பள்ளத்தாக்கின் வழியாக ஜெருசலேம் நுழைந்த வெற்றிப் பவனியை நினைவு கூறும் நாளாகும்.
இந்த நிகழ்வு 4 அதிகாரபூர்வ சுவிஷேசங்கள் ஒவ்வொன்றிலும் குறிப்பிப்பட்டுள்ளது. அவையாவன மாற்கு 11:1-1, மத்தேயு 21:1-11, லூக்கா 19:28-44, யோவான் 12:12-19. குருத்தோலை ஞாயிறானது பாடுகளின் குரத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகின்றது.
குருத்தோலை ஞாயிறு வரலாற்றுப் பின்னணி
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இயேசுக் கிறிஸ்து பஸ்கா பண்டிகையை சீடர்களுடன் சேர்ந்து ஜெருசலேமில் கொண்டாடும்படி புறப்பட்டார்.
அவர் ஒலிவ மலை எனப்பட்ட மலையின் அருகில் பெதப்பனே மற்றும் பெத்தானியா என்னும் ஊர்களுக்கு அருகில் வந்ததும் இரண்டு சீடர்களை அழைத்து
“அருகிலுள்ள கிராமத்திற்குள் செல்லுங்கள். மனிதர்கள் ஒருவரும் இதுவரை ஏறாத கழுதைக் குட்டி கட்டியிருப்பதை காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். அவிழ்க்கும் போது யாராவது இதைப் பற்றிக் கேட்டால் இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார்.
அவர் கூறியபடியே சீடர்களும் கழுதைக் குட்டியை அவிழ்த்து இயேசுவிடம் கொண்டு வந்து தங்கள் வஸ்திரங்களை அதன் மேல் போட்டு இயேசுவை அதன் மேல் ஏற்றினார்கள்.
அவர் ஒலிவ மலை அடிவாரத்தில் வந்து ஜெருசலேமை நெருங்குகையில் திரளான மக்கள் கூட்டம் அவரை வரவேற்றனர். அவரை வரவேற்கும் விதமாக ஒலிவ மரக் குருத்து ஏந்தி ஆடம்பர வரவேற்பளித்தனர்.
குருத்தோலை ஞாயிறு சிறப்புகள்
இயேசுவின் போதனைகளைக் கேட்டிருந்த மக்கள் இயேசு கழுதையின் மீது அமர்ந்து ஊர்வலமாக வருவதைப் பார்த்ததும் அவர் தங்களை உரோமர்களிடமிருந்து காக்க வந்த ராஜா என்று நினைத்து வரவேற்றனர்.
அக்காலத்தில் ஒரு அரசர் போரில் வெற்றிபெற்று நாட்டிற்கு வரும் போது அந்த குருத்தோலையை வைத்து வரவேற்பது வழக்கம். அதனைப் போல்தான் இயேசுவையும் மக்கள் வரவேற்றனர்.
பழைய ஏற்பாடு தீர்க்கதரிசி சகரியா இந்த காரியத்தை குறித்து தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார்.
சகரியா 9:9 “இதோ உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும், இரட்சிக்கின்றவரும், தாழ்மையுள்ளவரும் கழுதையின் மேலும், கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாயிரக்கின்றார்” எனக் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேற்றும்படி இச்சம்பவம் நடைபெற்றது.
அக்காலத்தில் வெற்றியுடன் திரும்பி வரும்போது குதிரையின் மேல் ஏறி வருவார்கள். ஆனால் இயேசுகிறிஸ்து கழுதையின் மேல் வந்தமை அவருடைய தாய்மையை மக்களுக்கு எடுத்துக் கூறுவதாக இருந்தது.
தன் உடலைக் கிழித்துப் பலியாக்கி வேதனை உணர்வுகளைப் பாடுகளாக்கி மனிதனுக்கு முழு விடுதலையை வாங்கித் தருகிறார் இயேசு கிறிஸ்து. இப்பாடுகளின் ஞாயிறு வெற்றியின் ஞாயிறாகும்.
You May Also Like : |
---|
நாவல் என்றால் என்ன |
வீட்டோ அதிகாரம் என்றால் என்ன |