கீழ்த்திசை என்றால் என்ன

keel thisai in tamil

நம் முன்னோர்கள் சூரியன் உதிக்கும், மறையும் திசை என்ற அடிப்படையில் கிழக்கு, மேற்கு போன்ற பெயர்களை அமைத்தனர்.

திசைகள் நான்கு இருந்தாலும் அதில் முதலிடத்தில் உள்ள கிழக்குக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறமையைக் காணலாம்.

காரணம் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு ஆகும். ஏனெனில் இருண்டு கிடக்கும் உலகம் ஒளி பெறும் திசை கிழக்கு ஆகும். கீழ்வானில் சூரிய உதயம் வந்ததும், உயிர்கள் இயங்கத் தொடங்குகின்றன.

ஒரு வரைபடத்தில் வலது புறம் இருப்பது கிழக்குத் திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்ததாகவும் கருதப்படுகின்றது.

சீன, பர்மிய, ஜாவா சுமத்ரா தாய்லாந்து மற்றும் மலேசியா உணவு வகைகள் கீழ்த்திசை நாடுகளின் உணவுகள் என்று அறியப்படுகின்றது.

கீழ்த்திசை = கிழக்கு திசை

கீழ்த்திசை என்றால் என்ன

நான்கு முக்கிய திசைகளில் கிழக்கு திசையும் ஒன்றாகும். கீழ்திசை என்பது தமிழில் “கிழக்கு திசை” என அறியப்படுகின்றது. இத்திசை சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கும். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது.

திசை என்ற சொல் சங்ககாலத்திலிருந்தே தமிழர்களால் திக்கு (Direction) என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. {சான்று = புறநானூறு 30 = ‘வளி திரிதரு திசையும்’} எனவே சங்ககாலத்திலேயே தமிழர்கள் திசை வேறுபாடுகளை அறிந்துள்ளார்கள்.

கிழக்குத் திசையின் மற்றொரு தமிழ்ப் பெயர் “குணக்கு” என்பதாகும். “தொடுகடற் குணக்கும்” (புறநா. 6,3) என புறநானூறு பாடுவது கிழக்குத் திசையினையேயாகும்.

கிழக்கு திசையின் மகிமை

அதேபோல் பலன்களை அதிகம் அள்ளித்தருவதிலும் கிழக்கு பிரதான இடத்தினை வகிக்கிறது. அருட்சக்தி குடியிருக்கும் கோவிலை முதல் திசையான கிழக்கு நோக்கி அமைக்கின்றனர்.

எந்த நல்ல செயலையும் கிழக்கு நோக்கிச் செய்வது சிறப்பு. எல்லா திசைகளுக்கும் ஆரம்பமாக கிழக்கு திசை அமைவதால் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க கிழக்கு திசை உகந்தது என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உண்டு.

பண்டைய தமிழர்களின் கட்டிடக் கலைகள், வழிபாட்டு முறைமைகள், வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் திசைகளின் பலன்களை அடியொட்டியே அமைந்திருந்தன என்பதற்கு பல குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

கடவுள்கள் கிழக்கு திசையில் இருந்து வந்ததாகவும், மேற்கு திசை மூலமாக கடவுளர் சொர்கத்துக்குச் சென்றதாகவும் பிராமண நூல்கள் சொல்கின்றன.

இந்துக்கள் எப்போதும் கிழக்கு நோக்கியே வழிபாடு செய்வர். இறந்தோருக்கான வழிபாடு மட்டும் தெற்கு திசையை நோக்கி இருக்கும்.

கிழக்கு திசையில் செய்யும் வழிபாடுகள் மற்ற திசைகளில் செய்யும் காரியங்களுக்கு உறுதுணையாக அமைந்து காரிய சித்திகளை நல்கும் என்பது ஐதீகம்.

வாஸ்து சாஸ்திரத்தில் சூரியன் தந்தைக்கு காரகனாக விளங்குவதால் கிழக்கு திசை நோக்கிய வீட்டில் வசிப்பவர்களின் தந்தைக்கு உடல்நலம் நல்ல நிலையில் இருக்கும். மேலும் வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல் நலனும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Read more: தேவாரம் என்றால் என்ன

கரிநாள் என்றால் என்ன