கருங்காலி மரம், மாலை, கட்டை போன்றவை மாந்திரீகம், வசியம் போன்ற ஆன்மீக, சாஸ்திர சடங்குகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. கருங்காலி மரத்தின் மரப்பட்டைகள், வேர்கள், கட்டைகள் போன்றவற்றில் அதிகளவு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.
பண்டைய காலத்தில் குழந்தைகள் விளையாட பயன்படுத்திய மரப்பாய்ச்சி பொம்மைகள் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டன. இத்தகைய கருங்காலி மரங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை.
கருங்காலி மரப்பட்டைகளை அவித்து அந்த நீரை குடித்து வர குருதியில் உள்ள இரும்புச்சத்தை அதிகரிக்கும். அத்தோடு உடலில் உள்ள பித்தத்தை குறைக்கின்றது. நீரிழிவு தோயாளிகளில் குருதியில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றது. இவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை குடிக்க வேண்டும்.
அத்தோடு கருங்காலி வேரை சுத்தமாக்கிய பின்பு நீரில் ஊற வைத்து வடிகட்டி எடுத்து அந்த நீரினை எடுத்து அருந்தி வர அல்சர் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு வயிற்றில் உள்ள புண்கள் எல்லாம் ஆறி விடும். அதுமட்டுமல்லாது வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
Table of Contents
கருங்காலி மாலை
கருங்காலி மாலை ஆனது ஆன்மீக பொருட்களில் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகக் காணப்படுகின்றது. கருங்காலி மரம் எனப்படுவது ஒரு பழமையான வகையைச் சார்ந்த மரங்களின் நடுப்பகுதி சக்தி கூடியதாகவும் கருமையானதாகவும் காணப்படும்.
அவ்வாறான கருமையாக காணப்படும் நடுப்பகுதியை வெட்டி எடுத்து நாம் நமது தேவைக்கு ஏற்றாற் போல் மாலை மற்றும் சுவாமிப்பட சிலைகளைத் தயாரிக்க முடியும். வைரம் போன்ற கருங்காலி மரக் கட்டைகளை மணிகள் போன்று செதுக்கி 108 மணிகள் இணைத்து மாலையாக ஆக்கபடுகின்றது.
கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
கருங்காலி மாலை ஆனது நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான செவ்வாய் கிரகத்திற்கு உரியது ஆகும். இத்தகைய கருங்காலி மாலையை கழுத்தில் அணிவதன் மூலம் செவ்வாய் பகவான் அருளும் சகல பலன்களும் நமக்கு கிடைக்கும்.
அதுமட்டுமல்லாது கருங்காலி மரத்திற்கு மின் கதிர்வீச்சுக்களை சேமித்து வைக்கும் ஆற்றல் அதிகளவு காணப்படுகின்றது. இதன் காரணமாக கருங்காலி மரத்தின் நிழலின் அமர்வதனாலேயே உடலில் உள்ள நோய்கள் இல்லாமல் போகும். கருங்காலி மாலையை அணிவதால் தேகம் வலுவடையும்.
கருங்காலி மாலை யார் அணியலாம்
கருங்காலி மாலைக்கென தனித்துவமான விதிகள் என்று எதுவுமில்லை. அதனால் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் அணியலாம். இந்த கருங்காலி மாலை ஆனது உடலில் காணப்படும் அழுக்கான குருதியை சுத்தப்படுத்துகின்றது.
அத்தோடு கருங்காலி மாலை அணிவதால் வயிற்றில் உள்ள ஜீரண பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமல்லாது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது.
குறிப்பாக ஆண்,பெண் என இருபாலரதும் மலட்டுத்தன்மையை நீக்குவதோடு குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும். இவை தவிர எப்போதும் சோம்பல் நிலையை உணர்பவர்கள் அவ்வாறான சோம்பேறி தனம் நீங்கி சுறுசுறுப்புடன் செய்ல்பட வழிவகுக்கும்.
இளம் வயதினருக்கு மாங்கல்ய பாக்கியத்தை உருவாக்கும். அத்தோடு ஆண்களின் ஆண்மையை அதிகரிப்பதோடு உடல்வலு உறுதியடைய வைப்பதோடு மட்டுமல்லாது கோபங்களை குறைக்கும்.
இத்தகைய கருங்காலி மாலை அணிபவர்களுக்கு பேச்சுத்திறமை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் தொழில் மற்றும் வியாபாரங்களில் ஏற்படும் போட்டித்தன்மை குறையும்.
மேலும் நிலம் தொடர்பான தொழிலை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு சிறந்த அனுகூலம் கிடைக்கும். இந்த மாலை அணிவதனால் விஷ பூச்சிகள் நம்மை அண்டாது.
பயணங்களை மேற்கொள்ளும் போது இந்த மாலை அணிவதால் வாகனங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுத்து பயணங்களை சிறப்பானதாக மாற்றி அமைக்கும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் குறிப்பாக இந்த மாலை அணிந்து வர தோஷம் நீங்கி திருமண தடைகள் இல்லாமல் போகும். சகோதரர்கள் கணவன் மனைவிக்கு இடையில், உண்டாகும் சச்சரவுகள் நீங்கி உறவு பலப்படும்.
Read More: பஞ்சபூத தலங்கள்