பஞ்சபூத தலங்கள்

panchabootha temples in tamil

பஞ்சபூத தலங்கள் என்பவை நீர், நெருப்பு, காற்று, நிலம் ஆகாயம் எனும் பூதங்களுக்குரிய சிவாலயங்கள் ஆகும். இந்த தலங்களில் மூலவராக உள்ள லிங்கங்கள் பூதங்களின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.

இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ சிலவனவற்றை கொண்டோ உருவாகியிருக்கும் பஞ்ச என்பது 5 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும்.

ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாக ஏதேனும் ஒரு தன்மையினால் / இயற்கையான நிலவரத்தினாலும் இப் பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.

பஞ்சபூத தலங்கள் பெயர்

    கோவில் பெயர்குறிக்கும் பூதம்லிங்கத்தின் பெயர்இடம்
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்நிலம்பிருத்வி லிங்கம்காஞ்சிபுரம்
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்நெருப்புஅக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம்திருவண்ணாமலை
    திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நீர்அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம்திருச்சி
    சிதம்பரம் நடராசர் கோயில்ஆகாயம்ஆகாச லிங்கம்சிதம்பரம்
    திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்காற்றுவாயு லிங்கம்திருக்காளத்தி

    1. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

    இந்த கோயில் குறிக்கும் பூதம் நிலம். லிங்கத்தின் பெயர் பிருத்திவ்லிங்கம். இது அமைந்துள்ள இடம் காஞ்சிபுரம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சி ஏகம்பம் எனப்படுகிறது.

    தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.

    இந்த தலத்தின் தலவிருட்சம் மாமரம் ஆகும். திருக்குளிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காலகோன் நாயனார், களச்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முத்தியடைந்த தலம் இதுவாகும்.

    2. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

    இந்த கோயில் குறிக்கும் பூதம் நெருப்பு. இங்கு உள்ள லிங்கத்தின் பெயர் அக்னி லிங்கம். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் திருவண்ணாமலை. திருவண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படுகின்றது.

    சிவபெருமானின் பஞ்ச பூதங்களில் அக்னி தலம் ஆகும். இது தேவாரப்பாடல் பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்ட தலமாகும்.

    இந்த தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகின்றது.

    திருவண்ணாமலையில் உள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது என டாக்டர் பேர்பால் சகாளி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். கலியுகத்தில் இந்த மலை கல் மலையாகவும் காணப்படுகின்றது.

    இத்தலம் சித்தர்களின் சரணாலயம் ஆகவும் விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தலம் சித்தர்களின் சரணாலயம் ஆகவும் விளங்குகின்றது.

    3. திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்

    இந்த கோயில் குறிப்பிடும் பூதம் நீர். லிங்கத்தின் பெயர் அப்புலிங்கம். இந்த ஆலயம் திருச்சியில் அமைந்துள்ளது. திருவானைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன்கோயில் இதுவாகும்.

    அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் என அழைப்பர். இந்த சிவாலயம் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப்பாடல் பெற்ற சோழநாடு காவிரி வடகிரி தலங்களில் அறுபதாவது சிவத்தலம் ஆகும்.

    புராண காலங்களில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இந்த தலம் விளங்கியது. இங்கு வீற்றிருக்கும் மூலவராகிய ஜம்புகேசுவரரின் அடியில் எப்போதும் நீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த கோயிலில் சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் ஐந்து பரிகாரங்களும் நான்கு திசைகளில் கோபுரங்களும் சூழ்ந்து காணப்படுகின்றன. இங்குள்ள அம்மன் அகிலாண்டேஸ்வரி.

    உச்சிக்காலப் பூஜையின் போது சிவாச்சாரியார் அகிலாண்டேஸ்வரி போல் பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள தாளங்களுடன் யானை முன்னே செல்ல் சந்நிதிக்கு வந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்வது இந்த தலத்தின் தனிச்சிறப்பு ஆகும்.

    4. சிதம்பரம் நடராஜர் கோயில்

    இந்த கோயில் குறிப்பிடும் பூதம் ஆகாயம். லிங்கத்தின் பெயர் ஆகாசலிங்கம். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் சிதம்பரம்.

    இந்த நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வரும் தேவாரப்பாடல் பெற்ற தலமாகவும் காவேரி வடகிரி சிவதலங்கள் சோழநாடு காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும்.

    இந்த தலம் தில்லை சிதம்பர நடராஜர், சிதம்பரம் தில்லைக்கூத்தன் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த தலம் சைவ இலக்கியங்களில் கோவில் என்ற பெயராலேயே அழைக்கப்படுகின்றது.

    அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கேலாயம் என்றும் அறியப்படுகின்றது. இந்த தலம் தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்னும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகின்றது.

    சிதம்பர இரகசியம் இச் சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் ஒரு சிறிய வாயில் உள்ளது. அங்குள்ள திரை அகற்றப்பட்டு தீபாரதனை காட்டப்படும். அங்கு திருவுருவம் இல்லாது தங்கத்தால் ஆன வில்வத்தள மாலை ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். இதன் இரகசியம் இங்கு இறைவன் ஆகாயவடிவில் இருக்கின்றார்.

    ஆகாயத்திற்கு தொடக்கமோ/முடிவோ கிடையாது அதை உணர மட்டுமே முடியும் என்பதே உண்மையாகும். மனிதனின் உடலமைப்பில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நடராஜர் நடனமாடிய நிலையில் உள்ளார்.

    5. திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

    இந்த கோயில் குறிக்கும் பஞ்சபூதம் காற்று. இங்கு உள்ள இலிங்கத்தின் பெயர் வாயுலிங்கம். இது திருக்காளத்தி ஆந்திர பிரதேசத்தில் சிற்றூர் மாவட்டத்தில் இந்த தலம் கண்ணப்பர் தொண்டாற்று பேறு பெற்ற தலம் எனப்படுகின்றது.

    இந்த தலம் வாயு தலம் என அழைக்கப்படுகின்றது. இராசேந்திரச சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும்.

    இந்த தலத்தில் சிலந்தி, யானை, பாம்பு என்பன சிவலிங்கத்தைப் பூசிப்பதாகவும்  திருக்காளத்தி காளகஸ்தி எனப் பெயர் பெற்றது. வடமொழிப் புராணங்கள் பலவும் இந்தக் கோயிலின் சிறப்பை போற்றுகின்றன. அகண்ட வில்வமரம், கல்லால மரம் போன்றன இந்த ஆலயத்தின் தல விருட்சங்கள் ஆகும்.

    Read more: தூதுவளை பயன்கள்

    கற்பூரவள்ளி இலையின் பயன்கள்