Table of Contents
ஈர நிலம் என்றால் என்ன
இயற்கையான சுற்றுச் சூழல் பிரதேசமே ஈரநிலம் ஆகும். ஈர நிலம் எனப்படுவது மண்ணானது புதியதாக நீர் உருவாகிய பிரதேசம் அல்லது உப்பு நீருடன் கூடிய பிரதேசத்துடன் தொடுகையுறும் பகுதியே ஈர நிலம் எனப்படுகின்றது.
இந்த ஈரநில வலயமானது நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வெள்ளத்தில் மூழ்கி காணப்படும். இந்த ஈரநிலமானது இயற்கைக்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுகின்றது. இத்தகைய ஈர நிலங்கள் மனிதனால் செயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ உருவாக்கப்படலாம்.
ஈர நில வகைகள்
ஈர நிலங்கள் உருவாகிய வழிகளான இயற்கை முறை, செயற்கை முறையின் அடிப்படையிலும் அவற்றில் அமைந்துள்ள நீரில் அதாவது ( நன்னீரிலா அல்லது உப்பு நீரிலா) என்ற அடிப்படையிலும் இது ஏழு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
#1. நதி ஈரநிலம்
நதி ஈர நிலம் எனப்படுவது ஆறுகள், நீரோடைகள், மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் குறிக்கும். இது நன்னீர் வகையையும் இயற்கைப் பண்புகளையும் கொண்டுள்ளது.
#2. ஏரி ஈரநிலங்கள்
ஏரி ஈரநிலங்கள் எனப்படுபவை ஏரிகள் மற்றும் இயற்கை தடாகங்கள் மூலம் உருவாகும். புதிய ஈரநிலங்கள் ஆகும். இதுவும் நன்னீர் வகையை சார்ந்தது.
#3. வெப்பமண்டல பலஸ்ட்ரெஸ்
வெப்பமண்டல பலஸ்ட்ரெஸ் எனப்படுபவை சிறிய நீரூற்றுக்கள், சோலைகள், சதுப்பு நிலக் காடுகள், சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கையான நிரந்தரமான புதிய தோற்றம் பெற்ற நீர்ப்பிரதேசங்கள் ஆகும்.
#4. கடல் ஈரநிலங்கள்
இவை கடற்பிரதேசங்களைச் சூழ்ந்துள்ள இயற்கையான உப்பு நீர்ப்பகுதி ஆகும்.
#5. தோட்டங்கள்
நதிகள் கடலுடன் கலக்கும் இறுதி வாயிலில் உருவாக்கப்படுகின்றன. இவை உப்பு நீரால் ஆனவை.
#6. உப்பு நீர் ஏரிகள்
இவை இயற்கையான தோற்றம் கொண்ட ஏரிகள் மற்றும் தடாகங்களின் கரையோரப் பகுதிகளில் உருவாகுபவை. இவை உப்பு நீரைக் கொண்டிருக்கும்.
#7. செயற்கை
மனிதன் குறிப்பிட்ட அளவு நீரினை சேமித்து வைப்பதற்காக அல்லது கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கியது ஆகும். இவை நீர்த்நேக்கங்கள் மற்றும் அணைகள் என்று அழைக்கப்படுகின்றது.
ஈர நிலத்தின் பண்புகள்
கலப்பு சுற்றுப்புற சூழலாக இருத்தல் வேண்டும். அதாவது நீர்வாழ் மற்றும் நிலவாழ் சுற்றுச்சூழல் அமைப்பில் இருக்கும்.
தற்காலிகமான அல்லது நிரந்தரமான நீர் தேங்கும் பிரதேசமாக மண்டலங்களாக காணப்படும்.
இங்கு காணப்படும் நீரானது சிறிய நீரோட்டங்கள், உப்பு நீருடன் தேங்கக்கூடிய வசதியுடன் காணப்படும்.
ஈர நிலங்களில் அங்குள்ள தாவரங்களினாலேயே அந்த நிலப்பரப்பின் எல்லை தீர்மானிக்கப்படும்.
ஈரநிலங்களில் உணவு அளிப்பதற்காகவும் மற்றும் ஓய்வெடுப்பதற்காகவும் பல பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள், விலங்கினங்கள், பூச்சிகள் போன்ற பல வகை உயிரினங்கள் வாழும் இடமாக காணப்படுதல்.
ஈரநிலங்களின் முக்கியத்துவம்
ஈரநிலங்கள் மீன்கள், பறவைகள் போன்றவற்றுக்கும் ஏனைய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பெரிய விலங்குகளுக்கும் வளம் மிகுந்த வாழ்விடத்தை அளிக்கிறது.
அதுமட்டுமல்லாது பூமியில் காணப்படுகின்ற அனைத்து கடற்கரையோரங்களையும் பாதுகாக்கின்றன. இவை தவிர வெள்ளப்பெருக்கு, மண்ணரிப்பு, நீர் ஊடுருவல் போன்றவற்றில் இருந்து தடுக்கின்றன.
கண்டல் தாவரங்கள் மற்றும் முருகைக்கல் பாறைகள் உருவாக இடமளிப்பது ஈர நிலங்கள் ஆகும்.
ஈரநிலங்கள் அழிவதால் ஏற்படும் பிரச்சனைகள்
- வெள்ளப்பெருக்கு ஏற்படுதல்
- உயிர்ப்பல்வகைமை அழிவுக்குள்ளாதல்
- கண்டல் தாவரங்கள் அழிதல்
- மீன்பிடி நடவடிக்கை பாதிக்கப்படல்.
- முருகைக்கற்பாறை அழிவுக்குள்ளாகும் அபாயம் உருவாதல்
- மண் அமிலமாதல்
- மண் உவர்த்தல்
- ஈரநிலங்கள் மாசுக்குள்ளாதல்
பல்வகை உயிரினங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஈரநிலங்களைப் பாதுகாப்பது மக்களாகிய நமது ஒவ்வொருவரினதும் கடமை ஆகும்.
இவ்வாறான சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக பெப்ரவரி 2ஆம் திகதி சர்வதேச ஈரநிலங்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. வருடாவருடம் ஈரநிலங்களைக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து தொனிப்பொருள் ஒன்றினை வெளியிட்டு கொண்டாடப்படுகின்றது.