இரட்டைக்கிளவி என்றால் என்ன

irattai kilavi in tamil

தமிழ் இலக்கணத்தில் ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு கட்டமைப்பில் அமையப்பெற்றுள்ளன. ஏனைய மொழிகளை காட்டிலும் தமிழ் மொழியிலே அதிகப்படியான இலக்கண அமைப்புகள் காணப்படுகிறது.

தமிழ் மொழி இலக்கண அமைப்பிலே வாக்கியங்களில் பொருளைத் தெளிவுப்படுத்த உதவும் தொடர்களில் இரட்டைக்கிளவியும் ஒன்றாகும்.

இரட்டைக்கிளவி என்றால் என்ன

ஓசையினையோ தோற்றத்தினையோ இயக்கத்தினையோ உணர்வையோ குறிப்பாக உணர்த்தி வரும். இரு சொற்கள் அடுத்தடுத்து வந்து ஒலிக்குறிப்பின் மூலம் பொருள் உணர்த்துவது இரட்டைக்கிளவி எனப்படும்.

இரட்டைக்கிளவியின் பண்புகள்

  1. இரட்டைக்கிளவிகள் தனித்து நின்று பொருள் தராது.
  2. இவற்றை இரண்டாகப் பிரித்தாளும் பொருள் உணர்த்தாது.
  3.  வாக்கியங்களில் ஓசை, பொருள் என்பவற்றை உணர்த்தும்.
  4. வினைச்சொல்லுக்கான அடைமொழிச் சொற்களாக இவை காணப்படும்.

இரட்டைக்கிளவி எடுத்துக்காட்டு

  • கட கட – விரைவு
  • கம கம – மணம் வீசுதல்
  •  கல கல – சிரிப்பு
  • கடு கடு – சினக்குறிப்பு
  • கரகர – காய்ந்து இருத்தல்
  •  கலீர்கலீர் – சலங்கை ஒலி
  • குடுகுடு – நடத்தல்
  •  குளுகுளு – தென்றல் காற்று
  •  குசுகுசு – இரகசியம் பேசுதல்
  • சலசல – நீரோடைச் சத்தம்
  • பளபள – கண்களை கூசச் செய்யும் ஒளி
  • வளவள – தேவையில்லாமல் பேசுவது
  • வின்வின் – வலித்தல்
  • மடமட – தண்ணீர் குடித்தல்
  • கொலுகொலு – பருத்தல்
  • பளிச்பளிச் – மின்னுதல்
  • வெதுவெது – இளம் சூடு
  • வெலவெல – நடுக்கம் அல்லது பதற்றம்

இரட்டைக்கிளவி வாக்கியங்கள்

  • தங்கம் தகதகவென பிரகாசித்தது.
  • அவள் கலகலவென சிரித்தாள்.
  • குழந்தை குடுகுடு என ஓடியது.
  • கந்தன் கோபத்தால் பற்களை நறநறவென  கடித்தான்.
  • மரத்திலிருந்து பழங்கள் பொலபொலவென விழுந்தன.
  • வாய்க்கால் நீர் சலசலவென ஓடியது.
  • மல்லிகைப்பூ கமகம என வாசம் வீசியது.
  • அவளது உடல் காய்ச்சல் காரணமாக கணகண என்று இருந்தது.
  • அவனது காயத்திலிருந்து குருதி குபீர் குபீர் என பாய்ந்தது.
  • சிறுவன் சத சத என்று சேற்றில் நடந்தான்.
  • மான்கள் சரசர என்று ஓடின.
  • சிறுவன் நாயை தரதர என்று இழுத்து சென்றான்.
  • அவனது நெஞ்சம் குற்றத்தால் குறுகுறுத்தது.
  • அம்மா சுடசுட தோசை கொடுத்தாள்.
  • நேற்று சிலுசிலு என்று காற்று வீசியது.

Read more: அடுக்குத்தொடர் என்றால் என்ன

இடைச்சொல் என்றால் என்ன