இதர தொழில் என்றால் என்ன

ithara thozhil in tamil

உலகில் பல்வேறுபட்ட தொழில் முறைகள் காணப்படுகின்ற போதிலும் அதனுள் இதர தொழில் முறையும் ஒன்றாகவே திகழ்கின்றன.

இதர தொழில் என்றால் என்ன

இதர தொழில் என்ற சொல்லானது வேறு தொழிலினை குறித்து நிற்கின்றது. அதாவது தமது முயற்சியின் ஊடாக நாம் மேற்கொள்கின்ற தொழில்களை இந்த இதர தொழிலானது சுட்டுகின்றது.

அதாவது தையல் தொழில், கைவினைத் தொழில் போன்றவற்றை கூறலாம். இதர தொழிலில் ஈடுபடுபவர்கள் தன்னகத்தே முயற்சியினை உடையவராக திகழல் வேண்டும். மேலும் ஆக்கத்திறனாக சிந்திக்க கூடியவர்களாகவும் காணப்படுவர்.

இதர தொழிலினை மேற்கொள்பவர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்

புதிய சிந்தனை, சுய செயல்பாடு

அதாவது தன்னுடைய காரியத்தை முடிக்க சாதாரணமாக தேவைப்படும் முயற்சியை விட கூடுதல் முயற்சியினை மேற்கொள்ளல் வேண்டும். அதாவது தனது தொழிலை புதிய இடங்களில் புதிய பொருள்கள் மற்றும் புதிய சேவையினூடாக விரிவாக்கம் செய்பவராக காணப்படுவார்.

வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்தல்

அதாவது அசாதாரண வாய்ப்புக்களை உருவாக்கி தொழிலுக்கு தேவையான விடயங்களை அடைதல். மேலும் வாய்ப்புக்களுக்காக சூழ்நிலையை கவனித்தல் மற்றும் அதனை கண்டறிந்து செயற்படல்.

விடாமுயற்சி

இதர தொழிலினை மேற்கொள்கின்ற போது எவ்வகையான தடைகள் ஏற்பட்டாலும் அத்தடையை தாண்டி தனது இலக்கினை அடைய வேண்டும் என்பதோடு பெரிய தடை வரும் போது மனம் சோராது செயற்படுவார்கள்.

தரத்திற்கான முனைப்பு

தனது தொழிலில் தற்போதுள்ள தரத்தையோ அல்லது அதை விட மேம்பட்ட தரத்திலோ பொருட்கள் சேவைகளை முனைப்புடன் செயற்படுத்தல் வேண்டும். மேலும் ஏனையவர்களை போன்றல்லாது தனது உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுதல் வேண்டும்.

தன்னம்பிக்கை

தன் மீதும் தனது திறமை மீதும் நம்பிக்கையுள்ள ஒருவராகவே இதர தொழிலினை மேற்கொள்வோர் காணப்படல் வேண்டும். ஏனெனில் ஒரு விடயத்தினை வெற்றிகரமாக முடிப்பதற்கு தன்னம்பிக்கையானது மிகவும் கட்டாயமானதொன்றாகும். மேலுள்ள பண்புகளை கொண்டவராக காணப்படுகின்ற போதிலேயே இதர தொழிலினை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

இதர தொழிலின் நன்மைகள்

அதிக வாய்ப்புக்கள் கிடைத்தல்

அதாவது நாம் இதர தொழிலினை மேற் கொள்கின்ற போது எமக்கு அதிகமான இதர தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும். மேலும் இந்த வாய்ப்புக்களினூடாக எமது திறமையானது வெளிக்கொண்டு வரப்படுகின்றது.

இலக்குகளுக்கான பயணம்

ஒருவரிற்கு கீழ் ஓரிடத்தில் வேலை செய்கின்ற போது வாழ்க்கையின் இலக்கினை நேராக அடைவது சிறிது கடினமாகும். எனவேதான் ஒரு இலக்கை நோக்கி நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சம்பளம் என்பது நிறுவனம் விரும்பும் தொகையில் தான் காணப்படும். ஆனால் சொந்தமாக இதர தொழிலினை மேற்கொள்கின்ற போது தமது கனவுகளை இலகுவாக நனவாக்கி கொள்ள முடியும்.

சுயதிருப்தி

இதர தொழிலினை மேற் கொள்கின்ற போது ஏற்படும் இலாபமானது எமக்கு மட்டுமே வந்து சேர்வதோடு அந்த இலாபம் சிறியதாக காணப்பட்டாலும் மனதிருப்தி ஆனது ஏற்படும்.

முயற்சிக்கேற்ற விளைவுகள் காணப்படும்

இதர தொழிலை மேற் கொள்கின்ற போது எமது உழைப்பிற்கான பலன் கிடைக்கும். மேலும் ஒருவரின் கீழ் பணிபுரியும் போது நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் பாராட்ட தவறி விடுகின்றனர். ஆனால் நாம் இதர தொழிலை மேற்கொள்கின்ற போது எமது முயற்சிக்கான விளைவு எல்லையற்ற மகிழ்ச்சியாகவே வந்து சேரும்.

பல்வேறுபட்ட தொழில் முறைமைகள் காணப்பட்டுள்ள போதிலும் இதர தொழிலானது எமக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான தொழில் முறையாக திகழ்கின்றது.

Read More: கைத்தொழில் கட்டுரை

பரந்து கிடக்கும் தொழில் உலகு கட்டுரை