மேலை நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் அற்புதமான உணவான ஆளி விதை பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- ஒமேகா-3
- ஒமேகா-6
- நார்ச்சத்து
- கார்போவைதரேட்
- புரதம்
- கால்சியம்
- மெக்னீசியம்
- பாஸ்பரஸ்
- பொட்டாசியம்
- ஃபோலேட்
- வைட்டமின்கள்
- கனிமச்சத்துக்கள்
போன்ற ஏராளமான ஊட்ட சத்துக்கள் இந்த ஆளி விதையில் நிறைந்து இருக்கின்றன.
மீன் உணவுக்கு நிகரான சத்து இந்த ஆளி விதையில் இருக்கின்றது.
Table of Contents
ஆளி விதை பயன்கள்
உடல் எடையை குறைக்கும்
ஆளி விதையில் soluble fiber, insoluble fiber எனும் இரண்டு வகையான நார்ச்சத்துக்களும் உள்ளன. இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். எனவே அடிக்கடி பசி எடுப்பது தடுக்கப்படும்.
மற்றும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றவும் உதவி செய்யும் இதனால் உடல் எடை வேகமாக குறையும்.
இதய அடைப்பை தடுக்கும்
ஆளி விதையில் ஒமேகா-3 எனப்படும் நல்ல கொழுப்பு அமிலங்கள் மிக அதிக அளவில் நிறைந்திருக்கின்றது.
இது இதயத்தில் அடைப்பை உண்டாக்க கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். மற்றும் இதயத்தை வலுவாக்கவும் உதவுகின்றது.
ஒமேகா-3 அதிகம் நிறைந்த இந்த ஆளி விதையினை தினசரி உணவில் அதிகம் எடுத்து வரும் போது இருதயம் சார்ந்த பிரச்சனைகள் வரமால் பாதுகாத்து கொள்ள முடியும்.
செரிமானம் சீராகும்
ஆளி விதையில் இருக்கும் அதிகபடியான நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீராக்கி மலசிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவியாக இருக்கின்றது.
புற்றுநோய் வராமல் தடுக்கும்
ஆளிவிதையில் அதிகளவு இருக்கும் ஒமேகா-3 மற்றும் ஆன்டிஆக்ஸின் உடலில் புற்றுநோயை உண்டாகும் காரணிகளை அழிப்பதுடன் புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
மற்றும் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த ஆளி விதைக்கு உண்டு என ஆய்வுகள் கூறுகின்றன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
நீண்ட நாட்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி ஆளி விதையினை உணவில் எடுத்து வருவது மிகவும் நல்லது. இது இன்சுலின் சுரப்பை சீராக்கி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதற்கும் உதவி செய்கின்றது.
எலும்புகளை வலுவாக்கும்
இந்த ஆளி விதையில் உள்ள சத்துக்கள் எலும்புகளில் உண்டாகும் தேய்மானத்தை தடுக்கும். குறிப்பாக மூட்டுகளில் உண்டாகும் வறட்சியை தடுத்து மூட்டுகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்கும்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவற்றை சீராக்கும் தன்மை ஆளி விதைக்கு உண்டு.
ஆளி விதை சாப்பிடும் முறை
இந்த ஆளி விதையை நன்கு அரைத்து பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது. பொடியாக்கி சாப்பிடும் போது இதன் முழு நன்மைகளும் உடலுக்கு கிடைக்கின்றது.
ஒரு தேக்கரண்டி ஆளி விதை பொடியினை ஒரு கப் நீர் மோர், தண்ணீர், பால் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம்.
ஆளி விதையை நேரடியாக சாப்பிட விரும்பாதவர்கள் இட்லி, தோசை மாவு அல்லது சப்பாத்தி மாவு போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்தி வரலாம்.
ஆளி விதை தீமைகள்
இந்த ஆளி விதை பொடியை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டிகளுக்கு மேல் எடுக்கக் கூடாது.
ஆளி விதையை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது மலச்சிக்கல், வயிறுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இந்த ஆளி விதை அனைவருக்கும் பயன் தரக்கூடியது ஆனாலும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவர்களின் ஆலோசனையோடு சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
ஆளி விதை அழகு குறிப்புகள்
முடி ஆரோக்கியம்
ஆளி விதை பொடியை தயிரில் கலந்து தலைமுடி வேர்களில் நன்றாக படும் படி தடவி மாசாஜ் செய்து ஒரு அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை இது போன்று செய்து வந்தால் முடி நன்கு அடர்த்தியாக வளரும்.
முடி உதிர்வு, முடி உடைத்தல் போன்றவற்றை தடுத்து முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க இது மிகவும் உதவுகின்றது.
ஆளி விதை கூந்தலுக்கு போஷாக்கு அளித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகின்றது. சீயக்காய் போல் ஆளி விதையும் கூந்தலுக்கு மிகச் சிறந்தது.
இது அரிப்பு, வெள்ளை செதில் உருவாகுதல் மற்றும் பொடுகு போன்றவற்றை வரவிடாமல் தடுக்கின்றது.
ஆளி விதை எண்ணெய் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
- ஆளி விதை – 3 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
- தண்ணீர் – 250 ml
கடைகளில் விற்கும் எண்ணையை விட செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள 250 ml தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் 3 ஸ்பூன் ஆளி விதையை போட்டு மீண்டும் ஒரு ஐந்து நிமிடங்கள் சூடாக்க வேண்டும். சூடாக்கும் போது கரண்டியால் கலக்க வேண்டும் இல்லையென்றால் பாத்திரத்தில் ஒட்டி அடி பிடித்து விடும்.
பின்னர் இது ஜெல் போன்று வந்து விடும். சூடாக இருக்கும் போதே அந்த ஜெல்லை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆறிய பின் தேவையான அளவு அந்த ஆளி விதை ஜெல்லுடன் தேவையான அளவு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இது நான்கு நாட்கள் வரை பழுதடையாமல் இருக்கும்.
இதனை முடி வேர்களில் படும்படி நன்கு தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதுமானது.
You May Also Like :