அன்பளிப்பு என்பது பொதுவாக சமூகத்தில் பயன்பாட்டில் உள்ள சொல்லாகும். அன்பளிப்பு என்பது அன்பின் அடையாளமாக தரப்படும் பொருளாகும்.
அதாவது அன்பளிப்பு என்ற வார்த்தைக்கு அன்பை வழங்குவதாக பொருள் வருகிறது, அல்லது அன்பினால் வழங்குவதாகவும் பொருள் கொள்ளலாம்.
அப்படியானால் நாம் ஒருவருக்கு அன்பளிப்பு கொடுக்கிறோம் என்றால் அதற்கான அடிப்படை காரணம். நாம் அவர் மீது வைத்துள்ள அன்புதான்! அதற்கு பிரதிபலனாக அவருடைய அன்பு கிடைப்பது நிச்சயம்.
அன்பளிப்பை பெற்றவர் அன்பளிப்பு கொடுத்தவர் மீது பாசம் கொள்வது இயல்பு. அதன் காரணமாக அவருக்காக சில விசயங்களை விட்டுக் கொடுக்கவும் அவரிடம் அனுசரித்து போகவும் முன்வருவார்.
நாம் பிறருக்கு அன்பளிப்பு கொடுக்கலாம் அவர் மீண்டும் அன்பளிப்பு தர வேண்டும் என நாம் எதிர் பார்க்கக் கூடாது.
இன்று தமிழர் பண்பாட்டில் அவர்களின் வீடுகளுக்கு விருந்துக்காக செல்பவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது இயல்பாகக் காணப்படுகின்றது. இது தமிழர்களின் வழக்கமாக காணப்படுகின்றது.
மேலும் அன்பளிப்புக்கள் பொருளாகவோ பணமாகவோ அல்லது உணவாகவோ வழங்கப்படும். இவ்வாறான அன்பளிப்பு என்ற சொல்லுக்கு வேறு சொற்களும் காணப்படுகின்றன.
- நன்கொடை
- பரிசு
- வெகுமதி
- தானம்
- இனாம்
இவ்வாறான வேறு பெயர்கள் அன்பளிப்புக்கு வழங்கப்படுகின்றன.
Read more: கருஞ்சீரகம் பயன்கள் என்ன