அடைக்கலம் என்றால் பாதுகாப்பான நிலையில் இருப்பதைக் குறிக்கும். அதாவது அடைக்கலம் என்பது பாதுகாப்புக் கருதி ஒரு இடத்தில் தஞ்சமடைதல் ஆகும்.
மேலும் அடைக்கலம் கொடுப்பது என்பது ஆபத்தான சூழ்நிலையிலிருந்து மீள பாதுகாப்பான புகலிடம் தருவதைக் குறிக்கும். வானிலை அல்லது பிற இடர்களிடமிருந்து காக்கும் பொருட்டு பாதுகாப்பாகத் தங்கக்கூடிய ஒரு இடத்தையும் குறிக்கிறது.
சுருக்கமாக கூறின் ஆபத்தில் இருப்பவர் அல்லது ஆதரவற்றவர் நாடும் பாதுகாப்பான இடம் ஆகும். உதாரணமாக புறா கழுகிடம் இருந்து தன்னை பாதுகாப்பை பெற சிபிச்சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்தது என்பதைக் கொள்ளலாம்.
நாம் ஒரு நாட்டிடமோ அல்லது சில சமயம் இறைவனிடமோ நாம் அடைக்கலம் அடைகின்றோம். இவ்வாறான அடைக்கலம் என்ற சொல்லுக்கு வேறு சொற்களும் காணப்படுகின்றன.
அடைக்கலம் வேறு சொல்
- தஞ்சம்
- உதவி
- கையடை
- புகலிடம்
- சரண்புகுதல்
Read more: பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்