22 கேரட் – 24 கேரட் தங்கம் என்றால் என்ன

22 கேரட் தங்கம் என்றால் என்ன

அன்று முதல் இன்று வரை உலகம் முன்னேற முன்னேற தங்கத்தின் விலையும் முன்னேறிக் கொண்டே போகின்றது.

தங்கமானது எவ்வளவு காலமானாலும் மங்காது துருப்பிடிக்காது தன்னுடைய தன்மையில் நிலைத்திருக்கும். இதனால் தான் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது.

உலக நாடுகள் வர்த்தகம் செய்வதற்கு, தங்கத்திற்கு நாணய மதிப்பு கொடுத்து அதை வைத்து வர்த்தகம் செய்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முதல் விலை உயர்ந்த உலோகமாக தங்கம் கருதப்படுகின்றது.

தங்கத்தை எந்த கருவியை வைத்தும் உருவாக்க முடியாது. இது இயற்கையாகவே நிலத்துக்கடியில் உருவாகக்கூடியதாகும்.

தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்கவும் முடியாது அதுமட்டுமல்லாது தங்கம் நிலத்திலிருந்து எடுக்கும் முறை மிகவும் கடினமானதாகும்.

தங்கத்தை உருக்கி எந்த ஒரு வடிவத்திற்கும் கொண்டு வர முடியும். இதனால் தான் தங்கத்தை வைத்து விதவிதமான ஆபரணங்களை செய்கின்றனர்.

ஒரு நாட்டின் செல்வச்செழிப்பு அதன் தங்கத்தின் இருப்பை கொண்டே கணக்கிடப்படுகின்றது.

தங்கம் முதன்முதலில் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் உலோகங்களில் முதன்மையிடம் தங்கத்திற்குதான் உண்டு.

உலகில் எத்தனையோ விதமான உலோகங்கள் இயற்கையாக கிடைக்கின்றன. ஆனாலும் தங்கத்தின் மீதான மதிப்பு குறைவதில்லை. அதற்கு காரணம் தங்கத்தின் இயற்பியல், வேதியல் பண்பாகும்.

இதனால்தான், ஏதேனும் ஒன்றை சிறப்பாக கூற விரும்பினால் தங்கத்திற்கு ஒப்பிடுவது வழக்கமாக உள்ளது.

பெட்ரோலிய எண்ணெய் “கருப்புத் தங்கம்” என்கின்றோம். பருத்தியை “வெள்ளைத் தங்கம்” என்கின்றோம் வளமான காலத்தை “பொற்காலம்” என்று கூறுகின்றோம். நல்ல மனிதர்களை “தங்கமான மனிதர்கள்” என்று கூறுகின்றோம்.

தங்கத்தின் அன்றாட விலையை உலக நாடுகளுக்கு நிர்ணயிப்பது லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேசன் (London Bullion Market Association) ஆகும். உலகில் அதிகபட்சமாக உலோகங்களுக்கு இங்குதான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. LBMA தங்கத்திற்கு US டொலரியில் விலை நிர்ணயிக்கின்றது.

22 கேரட் தங்கம் என்றால் என்ன

22 கேரட் தங்கமும், 2g வேறு உலோகங்களும் சேர்க்கப்படுகின்ற தங்கமே 22 கேரட் தங்கம் எனப்படுகின்றது.

வேறு உலோகங்களாக சில்வர், பிளாட்டினம், செப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

24 கேரட் தங்கம் என்றால் என்ன

தனித் தங்கத்தை வைத்து நகைகள் செய்ய இயலாது. காரணம் தங்கம் ஒரு இலகுவான பொருள் என்பதினாலாகும். எனவே அதனுடன் செப்பு, வெள்ளி, அல்லது துத்தநாகம் கலந்து செய்யப்படுகின்றது. இந்த உலோகங்களில் அளவைப் பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

24 கேரட் தங்கம் என்பது சுத்தமான தங்கமாகும். இது எந்த கலப்படமும் அற்ற தங்கமாகும். இதன் நிறம் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் காணப்படும். 24 காரட் தங்கத்தை விட உயர்ந்த தங்கம் எதுவுமில்லை.

இத்தங்கத்தின் அடர்த்தி குறைவானதாகவும், மென்மை உடையதாகவும் இருக்கும். எனவே இவற்றை வைத்து நகைகள் செய்ய முடியாது. இதனால் இவை காயின்(Coin) மற்றும் கட்டிகளாக விற்கப்படுகின்றன.

வெயில், மழை, காற்று ஆகியவற்றின் காரணமாக தங்கம் நிறைந்த கரிம பாறைகள் சிதைந்து கழிமுகப் பாறைப் பகுதிகளிலும், ஆறுகளிலும் சிறுசிறு துகள்களாக தங்கம் கிடைக்கின்றது. இந்த முறையில் கிடைப்பது வண்டல் மண் தங்கம் எனப்படுகின்றது.

Read more: தனிமம் என்றால் என்ன

செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை