பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சமயமாக இந்து சமயம் காணப்படுகிறது. இந்த இந்து மதமானது தன்னுள் காணாபத்தியம், சாந்தம், கௌமாரம், சௌரவம், சைவம், வைணவம் என ஆறு பிரிவுகளை கொண்டுள்ளது.
Table of Contents
வைணவம் என்றால் என்ன
வைணவ சமயம் என்பது விஷ்ணு பகவானை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடும் சமயம் ஆகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகின்றது.
வைணவ சமய முக்கிய நூல்கள்
- நாலாயிர திவ்ய பிரபந்தம்
- வேதம்
- பகவத்கீதை
- மகாபாரதம்
- இராமாயணம்
- கருட புராணம்
- மச்ச புராணம்
- பாகவத புராணம்
திருமாலின் பத்து அவதாரங்கள்
திருமாலின் பத்து அவதாரங்கள் தசாவதாரங்கள் என அழைக்கப்படுகிறது.
1. கூர்ம அவதாரம்
இந்திரன் இழந்த செல்வத்தை எடுப்பதற்காக,தேவர்கள் திருபாற்கடலை கடைந்தனர். அப்பொழுது மத்தாக இருந்த மேருமலை கடலில் மூழ்க தொடங்கியது. அப்போது தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமாள் ஆமையாக உருக்கொண்டு மேருமலையை தாங்கி நின்றார். இவ் அவதாரமே கூர்ம அவதாரம் எனப்படுகிறது.
2. வராக அவதாரம்
இரணியனுடன் பிறந்த அசுரன் நிலத்தை சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்று மறைந்து கொண்டான். இந்த செய்தியை தேவர்கள் திருமாலுக்கு கூறி தமக்கு உதவுமாறு வேண்டினர். திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை (நிலங்களை) அசுரனிடம் இருந்து மீட்டு வந்தார்.
3. நரசிம்ம அவதாரம்
இரணியன் தன்னை விலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக்கூடாது. இரவு, பகல், வீட்டுக்குள், வெளியில் என எந்நேரத்திலும், எங்கும் யாரும் தன்னை கொன்று விடக் கூடாது ஆயுதங்களாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என படைப்பு கடவுளான பிரம்மாவிடம் இருந்து வரம் பெற்றுக் கொண்டான்.
எனவே எல்லோரும் தன்னை வழிபட வேண்டும் என கட்டாயப்படுத்தினான். இரணியனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகும்.
4. வாமன அவதாரம்
குள்ள வடிவு கொண்ட அந்தணன் தோற்றத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கியது வாமன அவதாரம் ஆகும். அரசனிடம் மூன்று அடி மண் கேட்டு, பின் ஓரடியால் மண்ணையும், ஓர் அடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் போக மூன்றாவது அடியை மகாவலி மன்னனின் தலையில் வைத்து அவனை பாதாளத்துக்குள் தள்ளினார்.
5. பரசுராமன் அவதாரம்
திருமாலின் கூறாகிய பரசுராம அவதாரமானது அந்தணர் வடிவமாகும்.
6. இராமன் அவதாரம்
இலங்கையின் வேந்தனான இராவணனின் பக்தி செருக்கையும், அவனையும் அழிப்பதற்காக மேற்கொண்ட அவதாரம் இராமன் அவதாரம் ஆகும்.
7. கிருஷ்ணன் அவதாரம்
கம்சனை அழித்த வீரன், மகாபாரத போரின் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் திருமாலின் ஒரு கூறு ஆகிய கிருஷ்ண அவதாரம் ஆகும்.
8. பலராமன் அவதாரம்
பலராமன் கிருஷ்ணனின் அண்ணனாக பலமிக்கவராகவும் காணப்பட்ட அவதாரம் ஆகும்.
9. மச்ச அவதாரம்
மச்ச அவதாரம் என்பது மத்ஸ்யம் என்றும் சமஸ்கிருத மொழியில் அழைக்கப்படுகிறது. இது மீன் அவதாரமாகும். இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு வகைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும், கீழ்பாகம் மீனின் உருவமாகவும் கொண்ட அவதாரமாகும்.
10. கல்கி ஆதாரம்
கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி என்பதாகும். கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தில் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான அவதாரமாகும். கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீமைகளையும் அழிப்பார் என புராணங்கள் கூறுகின்றன.
பன்னிரண்டு ஆழ்வார்கள்
வைணவ சமயத்தை வளர்த்தெடுத்த பெருமை பன்னிரண்டு ஆழ்வார்களையே சாரும். இந்த 12 ஆழ்வார்களும் திருமாலின் அற்புதங்களை பாடல்களாக பாடி வைணவ சமயம் அழிவுறாமல் பாதுகாத்தனர். அந்த 12 ஆழ்வார்களும் பின்வருமாறு,
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வார்
- நம்மாழ்வார்
- திருமங்கையாழ்வார்
- தொண்டரடிப் பொடியாழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- குலசேகர ஆழ்வார்
- மதுர கவியாழ்வார்
- திருப்பாணாழ்வார்
Read more: விஜயதசமி என்றால் என்ன