பச்சை தங்கம் என்று அழைக்கப்படுவது எது

pachai thangam in tamil

பச்சை தங்கம் மற்றும் ஏழைகளின் மரம் என்றும் மூங்கிலை அழைக்கின்றனர். மூங்கிலானது ஒரு புல் வகையாகும். இன்று மூங்கில் இல்லாத நாடுகளையே காணமுடியாது என்றளவிற்கு மூங்கிலின் பயன்பாடானது காணப்படுகிறது.

மூங்கிலின் பயன்களை கருதிற்கொண்டு ஏழைகளின் மரத்துண்டு, மக்களின் நண்பன் என்ற சிறப்பு பெயர்களை கொண்டு அழைக்கின்றனர்.

பச்சை தங்கம் மூங்கில்

மூங்கிலின் பயன்பாடானது இன்று பாரிய பங்களிப்பினை செய்து வருகின்றது. அந்த வகையில் மூங்கில்கலானவை தொழிற்சாலைகளுக்கு பொரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனுள் 40 சதவீதமான மூங்கில்கள் காகித தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே மூங்கிலை பச்சை தங்கம் என அழைக்கின்றனர். மூங்கில்கலானவை விவசாயத் தாவரமாகவும் காணப்படுகிறது.

மூங்கிலின் பயன்பாடுகள்

மூங்கில்கலானவை 60 ஆண்டுகள் ஆனால் அதன் உயரத்தை இலகுவாக அடையக்கூடியதாக காணப்படும். இது மலைவாழ் மக்கள், விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டிதரும் மரமாகவும் மூங்கில்கள் காணப்படுகின்றன.

அழகுசாதன பொருள்களை தாயரிக்க மூங்கிலின் திரவமானது பயன்படுகின்றது. மேசை, பாய்கள் மூங்கில் தட்டுக்கள் மற்றும் பலகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூங்கிலையே மூலப் பொருளாக கொண்டுள்ளன.

வீடு கட்டுவதற்கு மரத்திற்குப் பதிலாக மூங்கில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதாவது ஏணிகள், பாலங்கள், கால்வாய் பாலம், வேலிகள், நிலைக்கால்கள் போன்றவைகளை செய்வதற்கும் மூங்கில்களானது பயன்படுத்தப்படுகின்றது.

மருந்து தயாரிப்பிற்கும் இது துணைபுரிகின்றது. அதாவது மூங்கிலின் திரவமான பாசீர் என்பது ஆஸ்துமா, இருமல் மற்றும் பெண்களின் உபாதைகளை தீர்க்கும் மருந்தாக காணப்படுகிறது. இது மூங்கில் கனுக்களில் காணப்படும்.

மூங்கில் குருத்துக்களை சார்ந்த உணவுத் தொழிற்சாலைகள் இன்று துரிதமாக வளர்சியடைந்து வருகின்றன. அதாவது இளங்குருத்துக்கள் தண்ணீரில் ஊறவைத்து வேகவைக்கப்பட்டு உணவுகள் தயாரிக்க பயன்படுகின்றன.

சில இடங்களில் அரிசை காட்டிலும் மூங்கில் குருத்துக்களே அதிக விலையில் விற்கப்படுகின்றன என்பதினூடாக மூங்கிலின் பயன்பாடானது அதிகரித்து வருவதனை காணமுடிகிறது.

மூங்கில்கலானவை காகிதகூழ் தயாரிப்பதற்கு பயன்படுகின்றது. அதாவது இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் காகிதகூழ் தேவை அதிகரித்து காணப்படுவதோடு மூங்கிலை ஆதாரமாக கொண்டே வாழ்ந்தும் வருகின்றனர்.

காற்றை சுத்தப்படுத்தும் மூங்கில்

நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமான ஒக்ஸிஜனை தாவரங்களே எமக்கு அளிக்கின்றது. அவ்வாறான தாவரங்களினாலேயே அதிகளவான காபனீரொட்சைட் உள்ளிழுக்கப்பட்டு எம்மால் சுவாசிக்கக்கூடிய ஒக்ஸிஜன் வாயுவை மாற்றித் தருகின்றது. இப்பாரிய வேலையை மேற்கொள்வது மூங்கில் மரங்களே ஆகும்.

மூங்கில் மரமானது வாழ்நாளில் 450 டொன் காபனீரொட்சைட்டை உறிஞ்சி அதற்கு நிகராக ஒக்ஸிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்தில் ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே மூங்கில்கலானவை சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடியதொரு மரமாக கருதப்படுகிறது. எனவேதான் மூங்கில் மரங்களை நடுவதனூடாக சுத்தமான காற்றினை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏழைகளின் மரமான மூங்கில்

மூங்கிலை ஏழைகளின் மரமாக அழைக்கின்றனர். ஏனெனில் பல நாடுகளில் மூங்கில் விவசாயமானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் ஏழைகளின் வருமானதிற்கான சுய தொழிலாகவும் இந்த மூங்கில்களானவை தொழிற்படுகின்றது.

அதாவது குறைந்த செலவில், நீண்டநாள் உழைப்பில் அதிக வருமானத்தை இவ் மூங்கில் மரங்கள் பெற்றுத் தருகின்றன. மூங்கிலினை நட்டு ஐந்தாண்டுகளின் பின்னர் பல்வேறு வேலைகளுக்காகவும், உபகரணங்கள் தாயரிப்பதற்காகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன.

சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு வலையமைப்பு என்பது இது போன்ற வேளைகளுக்காக மூங்கிலை பிரபலப்படுத்தும் சர்வதேச அமைப்பாகும்.

மூங்கில்கலானவை தன்னகத்தே பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக திகழ்கின்றது. எனவே அனைவரும் தங்கள் வீட்டில் ஒரு மூங்கிலையாவது நட்டு பயன்பெறுவோம்.

Read More: ஓமவல்லி இலை பயன்கள்

மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள்