விளம்பரத்தின் தன்மை மாறுதல் கட்டுரை

vilambarathin thanmai maruthal

இந்த பதிவில் “விளம்பரத்தின் தன்மை மாறுதல் கட்டுரை” பதிவை காணலாம்.

நாகரீகத்தின் அபரிமிதமான வளர்ச்சி இன்று பலவகையான மாறுதல்களை விளம்பரப்படுத்தலில் ஏற்படுத்தியுள்ளன.

விளம்பரத்தின் தன்மை மாறுதல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விளம்பரங்கள் எனப்படுபவை
  3. விளம்பரங்களின் வளர்ச்சி
  4. ஆரம்பகால விளம்பரங்கள்
  5. சமூகவலைத்தளங்களின் பங்களிப்பு
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய வர்த்தக உலகத்தில் உற்பத்தியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவினை விளம்பரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அத்துடன் பொருட்கள் விற்பனையை மேம்படுத்தவும் தரமான பொருட்களையும் சேவைகளையும் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள விளம்பரங்கள் மிகச்சிறந்த கருவியாக காணப்படுகின்றன.

நாகரீகத்தின் அபரிமிதமான வளர்ச்சி இன்று பலவகையான மாறுதல்களை விளம்பரப்படுத்தலில் ஏற்படுத்தியுள்ளன. இவை தொடர்பாக இக்கட்டுரையில் நாம் நோக்குவோம்.

விளம்பரங்கள் எனப்படுபவை

“விளம்பல்” என்ற சொல் அடியில் இருந்தே விளம்பரம் என்ற சொல் உருவானது. அதாவது எடுத்து சொல்லுதல் அல்லது கூறுதல் என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

ஆரம்பகாலங்களில் வியாபார துறையில் அதிகம் காணப்பட்ட விளம்பரப்படுத்தல் முறையானது இன்று தொழில்துறை, கல்விதுறை, சினிமா, விளையாட்டு என பல துறைகளிலும் பயன்படுத்த பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. சுருங்க கூறின் விளம்பரம் இல்லாத துறையே இல்லை என்றே கூறிவிட முடியும்.

விளம்பரங்களின் வளர்ச்சி

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலவகையிலும் பொருட்களின் தரம் மற்றும் விலை போன்ற அம்சங்கள் தொடர்பான தெளிவோடு தான் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.

இவற்றினால் தமது வியாபாரத்தை பல மடங்காக அதிகரிக்க விரும்பும் வர்த்தக நிறுவனங்கள் பலவகையான கண்கவர் விளம்பரங்களை உருவாக்கி அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்றனர்.

இவற்றின் மூலம் கவரப்படுகின்ற மக்கள் தரமான பொருட்களை வாங்க முனைப்பு காட்டுகின்றனர். இவற்றின் வாயிலாக தமது இலக்குகளை அடைந்து கொள்ள முயல்கின்றனர்.

ஆரம்கால விளம்பரங்கள்

ஆரம்பாகாலங்களில் விளம்பரங்கள் சில வெகுசன ஊடகங்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டன. மற்றும் வானொலிகள் வாயிலாக ஒலிபரப்பப்பட்டன.

மற்றும் பத்திரிகைளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டன. வியாபாரத்தில் இடம்பெற்ற போட்டிகளின் விளைவாக தமது பொருட்கள் ஏனைய தயாரிப்புக்களை விட சிறந்தன என்பதை வெளிப்படுத்துவதாக ஆரம்பகால விளம்பரங்கள் காணப்பட்டன.

இவை உண்மை தன்மை மற்றும் போலியானவையாகவும் இருக்க சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு

இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அதிகளவான வர்த்தக விளம்பரங்கள் மிக உயர்ந்த செலவுகளில் சினிமா, விளையாட்டு துறை பிரபலங்களை விளம்பர தூதர்களாக பயன்படுத்தி விளம்பரங்கள் எடுக்கப்பட்டு சமூகவலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படுகின்றது.

இவற்றின் வாயிலாக மிக வேகமாக தகவல்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவதானது உறுதிப்படுத்தப்படுகின்றது.

முடிவுரை

இன்றைய வர்த்தக உலகமானது அதிகளவில் விற்பனை மற்றும் இலாபமீட்டலை அதிகம் கருத்தில் கொண்டு விளம்பரங்களை அதிகம் முன்னெடுக்கின்றன.

இவற்றின் வாயிலாக சில பக்கவிளைவுகள் அதிகம் நிறைந்த சில தயாரிப்புகளை கொள்வனவு செய்கின்ற துர்பாக்கிய நிலையானது உருவாகியுள்ளது. இவை ஒரு பாரிய மாற்றத்தினை விளம்பரதப்படுத்தலில் உருவாக்கியுள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

You May Also Like:
அறிவியல் வளர்ச்சி கட்டுரை
சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை