விமர்சனம் என்றால் என்ன

ஒரு விடயத்தின் உண்மைத் தன்மையினை மதிப்பீடு செய்வதற்கு விமர்சனமானது துணை புரிகின்றது. ஒரு விடயத்தை மதிப்பீடு செய்வதற்காக எம்மால் முன்வைக்கப்படும் கருத்தே விமர்சனமாகும்.

விமர்சனம் என்றால் என்ன

விமர்சனம் என்பது யாதெனில் ஏதாவதொரு விடயம் அல்லது நபர் அல்லது கருத்து போன்ற விடயங்களை மதிப்பீடு செய்வதற்காக முன்வைக்கப்படும் கருத்துக்களே விமர்சனம் எனப்படும்.

விமர்சனத்தின் மூலமாக வாழ்க்கையின் பல்வேறுபட்ட அம்சங்களை அதனுள் கொண்டுவர இயலும்.

விமர்சனமானது ஒரு படைப்பின் பலம் மற்றும் பலவீனங்களை சிறந்த முறையில் மதிப்பீடு செய்து முன்வைக்க கூடியதாய் உள்ளது. இந்த விமர்சனமானது படைப்பாளியை ஊக்கப்படுத்துவதற்காக அமைவதே சிறந்ததாகும்.

விமர்சனத்தின் நோக்கம்

விமர்சனமானது ஒரு விடயத்தின் குறைகளை மாற்ற துணைபுரிவதோடு சிறந்த ஆக்கபூர்வமான தன்மையை கொண்டமைந்ததாகவும் காணப்படும். ஒரு படைப்பில் எம்மால் அறிந்து கொள்ள முடியாத விடயங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான விடயங்களை சிறந்த முறையில் அறிந்து கொள்ள விமர்சனமானது துணைபுரிகின்றது.

படைப்பாளனுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கும், வாசகர்கள் சிறந்த முறையில் ஒரு விடயத்தினை அறிந்து கொள்ளவும் விமர்சனமானது அவசியமாகின்றது. படைப்பில் உள்ள சிறப்புக்கள் மற்றும் குறைகள் பற்றி பேசக் கூடியதாக விமர்சனம் காணப்படுகின்றது.

பொதுவாக விமர்சனங்கள் இரண்டு வகைகளாக காணப்படுகின்றன. அவை ஆக்கபூர்வமான மற்றும் அழிவுபூர்வமான விமர்சனமாகும்.

ஆக்கபூர்வமான விமர்சனம்

ஒரு குறிப்பிட்ட விடயத்தை சிறந்த முறையில் மேற் கொள்வதனை நோக்கமாக கொண்டமைந்ததாகும் இதனையே ஆக்கபூர்வமான விமர்சனம் என குறிப்பிடலாம். உண்மையானதாக காணப்படுவதோடு ஒரு விடயம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள இது துணைபுரிகின்றது.

அழிவு ரீதியான விமர்சனம்

ஒரு நபர் குறிப்பிட்ட நடவடிக்கைக்கு மதிப்பீடு அல்லது பதிலை கொண்டிருக்காது ஒரு வித சுருக்கத்தை கொண்டிருத்தல் ஆகும். இது சுயமதிப்பு நடத்தையை பாதிக்க கூடியதாகும்.

சுயவிமர்சனம்

சுயவிமர்சனம் என்பது யாதெனில் தன்னுடைய விடயம் சம்பந்தமாக தாமே அதிலுள்ள குறைகளை ஆராய்வதாகும். இதனூடாக தன்னுடைய குறையை தாமே அறிந்து கொண்டு அதனை சிறந்த முறையில் ஆய்வு செய்து வடிவமைத்துக் கொள்ள முடியும்.

சுய விமர்சனத்தினூடாக ஒரு விடயத்தின் நிறைகளையும் சரிவர புரிந்து கொண்டு பிற விடயங்களில் மிகவும் சிறப்பாக விமர்சனங்களை முன்வைக்க முடியும்.

விமர்சனத்தின் நன்மைகள்

ஒரு விடயத்தை பகுத்தறிவுடனும் சரியாகவும் சிந்தித்து செயற்பட வாய்ப்பினை ஏற்படுத்தி தருகின்றது. இது எந்த வகையான தொழிற்துறையாயினும் அதிலுள்ள பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து கொள்ள இவ் விமர்சனமானது துணை புரிகின்றது.

சிந்தனை ரீதியான ஆற்றல்களை ஊக்குவிக்கின்றது. அதாவது ஒரு தகவல் மற்றும் அது பற்றி விடயங்களை சரிவர அறிந்து கொண்டு செயற்பட அவசியமாகின்றது. ஆக்கத்திறன் சிந்தனையை மேம்படுத்துகின்றது. அதாவது புதிய ஆக்க ரீதியான சிந்தனையை மேம்படுத்துவதற்கு இது துணைபுரிகின்றது.

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும், தீர்மானங்களை மீள் பரிசீலனை செய்யவும் இந்த விமர்சனமானது சிறப்பாக செயல்படுகின்றது.

விமர்சனமும் இன்றைய சமூக ஊடகமும்

இன்றைய கால கட்டத்தில் விமர்சனமானது சமூக ஊடகங்களினூடாகவே ஒரு விடயம் விமர்சிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு விமர்சனமானது ஒருவர் ஒரு துறையில் முன்னேற்றம் காண்பதனை நோக்கமாக கொண்டு காணப்பட வேண்டுமே தவிர ஒருவர் ஒரு விடயத்தினை இனி வருங்காலங்களில் பதிவிடாது இருப்பதற்காக அல்ல அதாவது இன்று சமூக ஊடகங்களில் ஓர் விடயம் தொடர்பாக விமர்சனம் என்ற பெயரில் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

இவ்வாறாக விமர்சனங்களை முன்வைக்காது ஒரு சிறந்த விமர்சனத்தை முன்வைப்பதன் மூலம் ஒருவர் அவ்விடயம் தொடர்பாக முன்னேற்றத்தை காண்பர்.

Read More: ஊக்கமுடைமை என்றால் என்ன

பாவங்கள் போக்கும் நதி