நகரமயமாதல் என்றால் என்ன

nagaramayamathal endral enna

நகரமயமாதல் என்றால் என்ன விளக்கம்

வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் இடப்பெயர்வுடன் மனித அசைவு போன்ற பல்வகைப்பட்ட சேவைகளும் ஓரிடப்படுத்தப்பட்ட இடமாக நகரம் விளங்குகின்றது.

மக்களிடம் தேவை மற்றும் விருப்பங்களை எவ்விடம் அதிகம் நிறைவு செய்கின்றதோ அவ்விடம் நோக்கி மக்கள் நகர்வது சாதாரணமாக நிகழ்கின்றது. ஒரு நாட்டின் இடப்பரம்பல் ரீதியாகப் பார்க்கும் போது இந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் நகரத்தை மையமாகக் கொண்டு வாழும் மக்களின் அளவு நகரமயமாக்கல் எனப்படுகின்றது.

மேலும் பொருளாதாரம் மற்றும் சேவை மையமொன்றின்றினை நோக்கிய மக்களின் நிரந்தர நகர்ச்சி நகரமயமாதல் எனலாம்.

அதாவது நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சொந்த காரணங்களுக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றார்கள்.

18ஆம் நூற்றாண்டின் பின்னரே நகரமயமாதல் துரிதமாக வளர்ச்சியடைந்தது. அந்தவகையில் கைத்தொழில் புரட்சியுடன் இணைந்து வளர்ச்சியடைந்த நகரமயமாதல் சர்வதேச ரீதியாக சமூக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட முக்கிய பங்கு வகிக்கின்றது.

முதன் முதலில் கைத்தொழில் புரட்சியானது பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது நகரமயமாதல் செயற்பாட்டை ஏற்படுத்தியது. கால ஓட்டத்தின் அடிப்படையில் நகரமயமாக்கல் ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்ரேலியக் கண்டங்களிலும் இடம் பெற்றது.

நகரமயமாதல் என்றால் என்ன

நகரமயமாக்கலின் வளர்ச்சி

கிரேக்க, உரோம காலங்களில் நகரங்கள் காணப்பட்டன என்பதனை வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம். நகரமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பகாலங்களில் நகரமயமாக்கல் மிகவும் மந்தகதியிலான சனத்தொகை அதிகரிப்பு காணப்பட்டது.

18ஆம் நூற்றாண்டின் பின்னரே நகரமயமாதல் துரிதமாக வளர்ச்சியடைந்தது. 1970 ஆம் ஆண்டு காலங்களில் நகரமயமாக்கலானது 37.2% ஆகவும், 1980 ஆம் ஆண்டுகளில் 41.2% ஆகவும், 1991 ஆம் ஆண்டுகளில் 45% ஆகவும் மக்கள் நகர்ப்புறப் பகுதிகளில் வாழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகரமயமாக்கல் படிப்படியாக வளர்ச்சி கண்டுவருகின்றது. தற்காலத்தில் உலகின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 52% நகரங்களில் வாழ்கின்றனர்.

2014 ஆம் ஆண்டு வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உலகின் நகரமயமாக்கல் பற்றிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் 2050 ஆம் ஆண்டு காலப்பகுதியாகும் போது உலக நகராக்க வீதம் 66% வரை உயர்வடையும் என நம்பப்படுகின்றது.

நகரமயமாக்கலால் ஏற்படும் விளைவுகள்

கிராமிய – நகர இடப்பெயர்வு காரணமாக நகர சனத்தொகை அதிகரிக்கின்றது. இச்செயன்முறை தொடர்ச்சியாக இடம்பெறுவதால் நாட்டின் மொத்த சனத்தொகையின் அதிகமான அளவு கிராமப் பகுதிகளைவிட நகர்ப்பகுதிகளிலேயே அதிகரிக்கின்றது.

நகரமயமாக்கல் பிரச்சினையால் சமூகப் பிரச்சினைகள் எழுகின்றன. அதிகளவில் மக்கள் அதிகமாகக் காணப்படுவதால் போக்குவரத்து மற்றும் மக்கள் வதிவிடங்களிலும் பல்வேறு நெருக்கடி நிலைகளை மக்கள் எதிர்நோக்குவர்.

மேலும் இடப்பற்றாக்குறையும் ஏற்படுகின்றது. குற்றச்செயல்கள், சமூகவிரோதச் செயல்கள், (கொலை, கொள்ளை, கற்பழிப்பு) சட்ட விரோதக் குடியிருப்புக்கள், சமூக ஏற்றத்தாழ்வு, வறுமை, முரண்பாடுகள் போன்ற சமூகப் பிரச்சினைகள் எழுகின்றன.

மேலும் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. வளங்களுக்கான கேள்விகள் அதிகரிக்கின்றன. அதாவது நகரங்களில் மக்கள் தொகை அதிகமடைய அவர்களுக்கான தேவைகளும் அதிகமாகின்றன.

நகரங்களில் வாழ்கின்ற மக்களில் அதிகமானவர்களுக்கு நிரந்தரத்தொழில் அல்லது வருமானம் இருப்பதில்லை. அத்தோடு முறைசாராத தொழில்களிலும் ஈடுபடுபவர்களாகவுள்ளனர்.

மேலும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் எழுகின்றன. உலகளவில் ரீதியில் ¾ வீதமான இயற்கை வளங்களை நுகர்பவர்களாக நகரத்திலுள்ள மக்கள் காணப்படுகின்றனர்.

சுகாதாரப் பிரச்சினைகள், குடிநீர்ப் பிரச்சினை போன்றனவும் இடம் பெறுகின்றன. எனினும் நகரமயமாக்கலினால் தகுதி வாய்ந்த மருத்துவப் பராமரிப்பு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்குக்கான இடங்களை உருவாக்குதல் போன்ற நன்மைகளும் இடம்பெறுவது மறுக்க முடியாததாகும்.

You May Also Like :
அதிக மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள்
உலக மக்கள் தொகையில் இந்திய மக்கள் தொகையின் பங்கு