வல்லுறவு என்றால் என்ன

valluravu in tamil

மனிதர்களின் இயல்பான உயிரியல் தன்மையான பாலியல் உணர்வினை வெறியாக உருமாற்றுவதில் முக்கிய பங்காற்றுவது இன்றைய சமூகப் பண்பாட்டு அம்சங்கள்தான்.

இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாச வக்கிரங்கள், கைபேசியில் தடையின்றி இவற்றினை அணுகும் வாய்ப்புகள், ஆபாச சீரழிவு வாழ்வினைப் போற்றுகின்ற திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கதைகள், கீழ்த்தரமான நாவல்கள் அதிகளவில் வளரத்தொடங்கியுள்ளன.

மேலும் தெருவுக்குத் தெரு மதுபானக் கடைகள் திறந்து விடப்பட்டு குடிவெறிபிடித்த சமூகமாக மாற்றப்படுகின்றது. மது போதை அதிகமாகிய பின்பு பாலியல் வல்லுறவைப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றனர்.

வல்லுறவு என்றால் என்ன

ஒரு பெண்ணின் மீது ஆண் நிகழ்த்தும் கொடிய வன்முறை. பெண்ணின் தெளிவான சம்மதம் இல்லாமல் அவள் மீது ஏவப்படும் பாலியல் உறவு முயற்சி அனைத்தும் வல்லுறவுக் குற்றமே ஆகும்.

இன்னொருவரின் ஒப்புதலின்றி திணிக்கப்படும் எந்த வடிவத்திலான உறவு முயற்சியும் வல்லுறவே ஆகும்.

யுத்தமும், வல்லுறவும்

பெண்கள் வரலாற்று ரீதியாகவே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் அந்தந்த கால நடைமுறைகளுக்கு ஏற்ப பாலியல் வல்லுறவுகள் இடம்பெறுகின்றன.

முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், 1971ல் பங்களாதேஷ் சுதந்திரப் போர், 1975ல் லைபீரிய உள்நாட்டுப் போர், 1990ல் குவைத்தின் மீதான ஈரான் ஆக்ரமிப்பு, 1992ல் போஸ்னிய யுத்தம், 1994ல் ருவாண்டா இன அழிப்பு, 1996ல் கொசாவா யுத்தம் அத்தனையிலும் கற்பழிப்பின் கறை படிந்தே இருந்தது.

ஆகவே யுத்தம் பெண்களை அதிகம் பாதித்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

வல்லுறவைத் தடுக்கும் வழிகள்

வல்லுறவு பெண்ணுக்கான சுதந்திரத்தை மறுக்கும் மனிதத்தன்மையற்ற செயல். எனவே அதனைத் தடுக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். உதாரணமாக சிங்கப்பூர் நாட்டில் பாலியல் வன்முறைகள் மிகக்குறைவு ஆகும். ஏனெனில், பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க அங்கு கடுமையான சட்டங்கள் அமுலிலுள்ளன.

எனினும் சட்டங்களினால் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க முடியாது. நீதிமன்றங்களில் பாலியல் வல்லுறவுகள் தொடர்பான விசாரணைகள் பல ஆண்டுகளாக இழுபடுகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளுகின்றனர். அல்லது கைவிடுகின்றனர். ஏனெனில், பாதிக்கப்பட்ட பெண் சில காலத்திற்கு பின்னர் திருமணம் செய்தால் அல்லது திருமணம் செய்ய நேரிட்டால் இந்த பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணைகள் அதற்கு இடையூறாக இருக்கின்றன.

அதுமட்டுமின்றி சில சமயங்களில் குற்றவாளிகள் சட்டத்தைப் பயன்படுத்தி தப்பித்தும் விடுகின்றனர். எனவே பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் சட்ட ஏற்பாடுகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

பால்நிலை சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும். மேலும் குடும்ப அங்கத்தவர்களுக்கு கருத்தரங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Read more: பற்களில் மஞ்சள் கறை நீங்க

கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்