காட்டில் வாழும் மிருகங்களில் மிகவும் பெரிய மிருகம் யானை ஆகும். இது ஒரு தாவர உண்ணி விலங்காகும். யானை பெரும்பாலும் கரும்பு, விளாம்பழம் முதலியவற்றை அதிகமாக விரும்பி உண்ணும்.
நீண்ட தும்பிக்கை, சுளகு போன்ற காதுகள், கூரான வெண் தந்தங்கள், உலக்கை போன்ற கால்கள் இவை அனைத்தும் யானையின் உடற்கட்டமைப்புக்கள் ஆகும்.
இத்தகைய யானைக்கு தமிழில் பல பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு இன்றைய பதிவில் யானைக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
யானை வேறு பெயர்கள்
- யானை ( கரியது)
- வேழம் ( வெள்ளை யானை)
- களிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா ( துதிக்கையுடைய விலங்கு )
- உம்பர்
- அரசுவா
- அல்லியன்
- அறுபடை
- ஆம்பல்
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- தும்பு
- பெருமா ( பெரிய விலங்கு)
- வாரணம் ( புல்லை வாரிப்போடுவது)
- பூட்கை ( துளையுள்ள கையை உடையது)
- ஒருத்தல்
- ஓங்கல் ( மலை போன்றது)
- நாக
- பொங்கடி ( பெரிய பாதத்தை உடையது)
- கும்பி
- கரி
- கரேணு
- கயம்
- சிந்துரம்
- வயமா
Read more: அம்பு வேறு பெயர்கள்