யாதும் ஊரே யாவரும் கேளிர் (yaadhum oore yaavarum kelir): இந்த புறநானுறு பாடல் கணியன் பூங்குன்றனார் என்கிற புலவரால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பாடலாகும்.
2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்த பாடல் இன்றைய காலத்துடனும் ஒத்துபோகின்றது என்றால் மிகப்பெரிய ஞான பார்வையுடன் வாழ்ந்துள்ளான் தமிழன் என்பது உறுதியாகின்றது.
புறநானூறு – 192
பாடியவர் – கணியன் பூங்குன்றனார்
Table of Contents
புறநானூறு கணியன் பூங்குன்றனார்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
யாதும் ஊரே யாவரும் கேளிர் விளக்கம்
அனைத்து ஊரும் நம் ஊரே அனைத்து மக்களும் நமது உறவினர்களே. உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இந்த வரி இருக்கின்றது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதன் பொருள்
நன்மை தீமை அடுத்தவரால் வருவது அல்ல. நாம் செய்யும் செயலே நம் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணம். உன் அனுமதி இல்லாமல் உன்னை யாரும் காயப்படுத்தி விட முடியாது.
எல்லாம் நீயே.. நன்மை செய் நன்மை அடை.. தீமை செய் தீமையே உனக்கு கிடைக்கும் என்பதை “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற வரி குறிக்கின்றது.
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
துன்பமும் ஆறுதலும் மற்றவர்கள் தருவதில்லை.. உனக்கான துன்பத்துக்கு காரணமான நீயே அதற்கான ஆறுதல்.
துன்பத்தை நீ விளைவித்து விட்டு தவறை நீ செய்து விட்டு அதற்கான ஆறுதலை மட்டும் ஆலயத்தில் தேடாதீர்கள்.
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
நிரந்தரம் இல்லாத வாழ்க்கை பயணத்தில் நிரந்தர ஓய்வு எனப்படும் இறப்பு ஒருநாள் அனைவருக்கும் வரும். பிறந்த காலம் தொடக்கம் நம்முடன் சேர்ந்தே நடப்பது நம்முடைய மரணம்.
எனவே இறப்பு என்பது அதிசயம் இல்லை எனவே அதை நினைத்து நினைத்து துன்பப்பட வேண்டாம்.
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
இறைவன் அருளால் எனக்கு அனைத்தும் கிடைத்து விட்டது நான் மகிழ்ச்சியானவன் இனி என் வாழ்க்கை இனிய வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணாதீர்கள்.
பிறப்பு இறப்பு போல.. பகல் இரவு போல இன்ப துன்பமும் உண்டு.. எனவே எதிலும் அதீத மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.
முனிவின் இன்னா தென்றலும் இலமே
ஒருவனுக்கு துன்பம் மட்டுமே என்றும் துணையாக இருந்தது இல்லை.. துன்பம் மட்டுமே என் வாழ்க்கையாக இருக்கின்றது என்று வாழ்க்கையை வெறுத்து ஒதுக்காதீர்கள். இதுவும் கடந்து போகும் என்று எண்ணுங்கள்.
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை இந்த வரிகள் அருமையாக வெளிப்படுத்துகின்றது.
நீராவியாதல் என்ற அறிவியலுக்கு இணங்க கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின் மழையாகிறது. இவ்வாறு எப்படி மேகமானது கடல் நீரை வந்து எடுத்துச் செல்கிறதோ.
அதுபோல நம் வாழ்வில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இயற்கை அதற்கு நாம் தாயாராக இருக்கின்றோமோ என்பதே கேள்வி. எனவே வருவதை எதிர்கொள்ள எப்போதும் தாயராக இருங்கள்.
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
மேலே கூறிய இவற்றை எல்லாம் நல்ல நீதிநெறி அறிந்தவர்கள் கூறிய நூல்களில் இருந்து படித்து தெரிந்து தெளிவாக எழுதியிருக்கின்றேன் என்று சொல்லுகிறார் புலவர்.
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
நம்மை விட பெரிய இடத்தில் இருப்போரை நாம் தலைமேல் தூக்கிவைக்கவும் தேவையில்லை. நம்மை விட சிரியவர்களை காலில் போட்டு மிதிக்கவும் தேவையில்லை. இந்த குணம் தான் வாழ்வில் கற்றவர்களுக்கு உரிய சிறந்த குணமாகும்.
You May Also Like: