மோனை என்றால் என்ன

monai enral enna in tamil

தமிழ்மொழியில் காணப்படும் இலக்கணங்களில் எதுகை, மோனை, இயைபு எனும் மூன்றும் சிறப்புமிக்கவையாக காணப்படுகிறது.

இவை அதிகம் செய்யுள் தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இவை ஒவ்வொரு எழுத்துக்களும் அமையும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு பல வகைப்படும்.

இந்த பதிவில் மோனை என்பது யாது? அவற்றின் வகைகள், அவற்றிற்கான உதாரணங்கள் என்பவற்றை நோக்குவோம்.

மோனை என்றால் என்ன

ஒரு பாடலில் அல்லது செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை எனப்படும். இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாக வருவதும் உண்டு.

உயிர் எழுத்து இனங்களாவன :

  • அ, ஆ, ஐ, ஔ
  • இ, ஈ , எ, ஏ, யா
  • உ, ஊ, ஒ, ஓ

மெய்யெழுத்து இனங்களாவன :

  • ஞ், ந்
  • ம், வ்
  • த், ச்

மோனை வகைகள்

மோனை இரண்டு வகைப்படும். அவையாவன,

  1. அடி மோனை
  2. சீர் மோனை

அடி மோனை

பாடலின் முதல் அடியின் முதல் எழுத்து அடுத்த அடியின் முதல் எழுத்தாக வருவது அடி மோனை எனப்படும்.

உதாரணம்:

  • ன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்தபின்
    ன்நெஞ்சே தன்னைச் சுடும்.”

இந்த குறலில் ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்து “த” என ஆரம்பிக்கிறது. எனவே இதில் அடிமோனை எழுத்தாக “த” என்பது  காணப்படுகிறது.

சீர் மோனை

ஓர் அடியில் உள்ள சீர்களின் முதல் எழுத்து அனைத்தும் ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.

உதாரணம்:

  • ற்க சடற ற்பவை ற்றபின்
    நிற்க அதற்குத் தக”

இந்த குறளில் முதல் அடியின் நான்கு சீர்களிலும் முதல் எழுத்து “க” வந்துள்ளதால் இது சீர் மோனையாகும்.

சீர் மோனை ஏழு வகைப்படும். அவையாவன,

  1. இணை மோனை
  2. பொழிப்பு மோனை
  3. ஒருஉ மோனை
  4. கூழை மோனை
  5. மேற்கதுவாய் மோனை
  6. கீழ்க்கதுவாய் மோனை
  7. முற்று மோனை

இணை மோனை

முதலாம், இரண்டாம் சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது இணை மோனை எனப்படும்.

உதாரணம்:

  • “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற”

இதில் “பொ” எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் இணை மோனையாக காணப்படுகிறது.

பொழிப்பு மோனை

முதல் சீரின் முதல் எழுத்தும், மூன்றாம் சீரின் முதல் எழுத்தும் ஒன்று போல் வருவது பொழிப்பு மோனை ஆகும்.

உதாரணம்:

  • “தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்.”

இதில் “த” எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் பொழிப்பு மோனையாக காணப்படுகிறது

ஒரூஉ மோனை

முதல் சீரின் முதல் எழுத்து நான்காம் சீரின் முதல் எழுத்தும் ஒன்று போல் வருவது ஒரூஉ மோனை எனப்படும்.

உதாரணம்:

  • “அம்போன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி”

இதில் “அ” எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள்  ஒரூஉ மோனையாக வந்துள்ளது.

கூழை மோனை

ஒன்று, இரண்டு, மூன்று என தொடர்ந்து முதல் மூன்று சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றுபோல் வருவது கூழை மோனையாகும்.

உதாரணம்:

  • “பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே”

இதில் “ப” எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள்  கூழை மோனையாக வந்துள்ளது.

மேற்கதுவாய் மோனை

ஒன்று, இரண்டு, நான்கு அதாவது முதலாம் சீரின் முதல் எழுத்தும் இரண்டாம், நான்காம் சீர்களின் முதல் எழுத்தும் ஒன்று போல் வருவது மேற்கதுவாய் மோனையாகும்.

உதாரணம்:

  • “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்”

இதில் “இ” என ஆரம்பிப்பவை கீழ்க்கதுவாய் மோனையாக வந்துள்ளது.

கீழ்க்கதுவாய் மோனை

முதல் சீரின் முதல் எழுத்தும் இரண்டாம் நான்காம் சீர்களின் முதல் எழுத்துக்களோடு ஒத்து வருவது கீழ்க்கதுவாய் மோனை ஆகும்.

உதாரணம்:

  • ” பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ! பாரிலிலுள்ள
    நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ?”

இதில் “பா” எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் மேற்காதுவாய் மோனையாக அமைந்துள்ளது.

முற்று மோனை

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என முதல் அடியின் நான்கு சீர்களிலும் முதல் எழுத்து ஒன்று போல் வருவது முற்று மோனை எனப்படும்.

உதாரணம்:

  • “கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக”

இந்த குறளில் முதல் அடியின் நான்கு சீர்களிலும் முதல் எழுத்து “க” வந்துள்ளதால் இது முற்று மோனையாகும்.

Read more: எழுத்து என்றால் என்ன

உரிச்சொல் என்றால் என்ன