இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் எல்லோருடைய நண்பனாகவும் மாறி விட்டது. கைத்தொலைபேசி ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் கூட குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து பேசும் நேரங்களை எல்லாம் இந்த கைத்தொலைபேசி களவாடி விட்டது. இந்த பதிவில் மொபைல் போனின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பார்ப்போம்.
Table of Contents
மொபைல் போன் நன்மைகள்
தொடர்பாடல்
கைத்தொலைபேசியானது ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருக்கும் நபருடன் நினைத்தவுடனேயே உடனடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வசதியை வழங்குகின்றது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் முகத்தைப் பார்த்து பேசக்கூடிய வசதியையும் வழங்குகின்றது.
சிறிய அளவில் கிடைத்தல்
மொபைல் போன் எங்கு சென்றாலும் சட்டைப்பையில் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு ஏற்ற வகையில் சிறிய அளவில் காணப்படுகின்றது. ஒவ்வொருவருடைய வாழ்க்கை வசதிக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு விலைகளிலும் சந்தையில் கிடைக்கின்றன.
புகைப்படம் மற்றும் வீடியோ
பல்வேறு நேரங்களில் அதாவது மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத நேரங்களை எல்லாம் அழகாக புகைப்படம், ஃவீடியோ மூலம் எடுத்து மீண்டும் மீண்டும் பார்க்கலாம். நமது தொலைபேசிகளில் எடுப்பவற்றை பிறருக்கு அனுப்பலாம். அத்துடன் அவற்றை சமூக வலைத்தளங்களிலும் பகிரலாம்.
குறுஞ்செய்தி
உடனக்குடன் பகிர வேண்டிய செய்திகளை குறுகிய எழுதப்பட்ட எழுத்துக்களுடன் தேவையான நபருக்கு அனுப்பலாம். எழுத்துக்கள் மட்டுமல்லாது தற்போது MMS வழியாக புகைப்படம், வீடியோ, மல்டிமீடியா அனுப்பக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.
பொழுதுபோக்கு
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பெரும்பாலானோரது பொழுதுபோக்குகள் கைத்தொலைபேசிகளிலேயே காணப்படுகின்றது. விளையாட்டுக்கள், வானொலி, சமூக வலைத்தளங்கள், இணைய வழி நூலகம் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் கைத்தொலைபேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்புக்கள் மற்றும் ஞாபகமூட்டல்கள்
மறக்க கூடியவை மற்றும் மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை டயறியில் எழுதி வைப்பதற்கு பதிலாக நமது கைதத்தொலைபேசியிலேயே குறிப்புக்களில் எழுதி வைக்கலாம்.
ஆன்லைன் வங்கி நிதி முறைமை
வங்கிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே கணக்கு நிலுவைகளை சரி பார்க்கலாம். அது மட்டுமல்லாது பில் கொடுப்பனவுகள், பணப்பரிமாற்றம் போன்ற பல்வேறுபட்ட நிதியியல் சார்ந்த செயற்பாடுகளை செய்ய உதவுகிறது.
மொபைல் போன் தீமைகள்
மூளை புற்று நோய்
கைத்தொலைபேசியில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் மூளைத் திசுக்களில் உறிஞ்சப்படுகின்றன. இதனால் மூளையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு விரைவாக மூளையில் புற்றுநோய் உருவாகும்.
மன அழுத்தம்
ஒருவர் தொடர்ச்சியாக கைத்தொலைபேசியை பயன்படுத்துவதனால் அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றார் என ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுதல்
கைத்தொலைபேசிகளின் திரையில் கிருமிகள் இலகுவில் சேர்ந்து விடுகின்றன. இவற்றை நாம் அடிக்கடி தொடுவதன் மூலம் அவற்றில் இருக்கும் கிருமிகள் உடலுக்குள் சென்று நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகின்றன.
உடல்வலி ஏற்படுதல்
தொடர்ச்சியாக ஒரே இருக்கையில் அமர்ந்து தொலைபேசியை பயன்படுத்துவதன் மூலம் விரல்கள், கழுத்து, முள்ளந்தண்டு போன்றவற்றில் கடுமையான வலி ஏற்படுகின்றது.
கண் பார்வை பிரச்சனை
ஐந்து நிமிடங்களுக்குள் 90% மக்கள் தொலைபேசிகளை அடிக்கடி பார்ப்பதாக சமீபத்திய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கண்களில் காணப்படும் நரம்பு மண்டலம் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றன. இதனால் கண்பார்வை பிரச்சனை, பார்வைக்கோளாறுகள் உருவாகின்றன.
தூக்கத்தை தடுக்கின்றது
குறிப்பாக தற்போதைய சூழலில் பதின்ம வயதினர் பெரும்பாலானோர் ஒன்லைன் சூதாட்டம், பப்ஜி போன்ற பல விளையாட்டுக்களுக்கு அடிமையாகி தூக்கமின்றி விளையாடுகின்றனர். இதனால் உடல் மற்றும் மூளை போதியளவு ஓய்வின்றி சோர்வடைகின்றது.
விபத்துக்கள்
பலர் பிரயாணத்தின் போது கைத்தொலைபேசியை பயன்படுத்துவதால் வீதியின் மீதான கவனம் இன்றி தொலைபேசி மீது மூழ்கி உயிர்ப்பலிக்கு ஆளாகின்றனர்.
சமூக சீர்கேடுகள்
பல இளைஞர்கள் ஒன்லைன் மூலம் தேவையில்லாத பலவற்றைப் பார்த்து கெடுவதோடு மட்டுமல்லாது ஏனையவர்களையும் அத்தகைய தீய செயல்களைச் செய்யத் தூண்டுவதோடு கலாசார சீரழிவையும் ஏற்படுத்துகின்றனர்.
Read More: வெள்ளை பூசணி ஜூஸ் பயன்கள்