முதலுதவி பற்றிய கட்டுரை

muthal uthavi katturai in tamil

இந்த பதிவில் ஆபத்து காலங்களில் உதவும் “முதலுதவி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

முதலுதவி என்பது அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆபத்து என்பது எப்போது எங்கு ஏற்படும் என்று கூறிவிட முடியாது.

முதலுதவி பற்றிய கட்டுரை

முதலுதவி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. முதலுதவி என்பது
  3. முக்கியத்துவம்
  4. முதலுதவியின் வரலாறு
  5. முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியவை
  6. முடிவுரை

முன்னுரை

உலகளாவிய ரீதியில் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதன்பின் உயிரிழப்பவர்களே அதிகமாக உள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைத்திருந்தால் பெரும்பாலும் அவர்களை நிச்சயம் காப்பாற்றப்படக்கூடும்.

முதலுதவி விபத்து நேரத்தில் செய்யக்கூடிய தற்காலிகமான சிகிச்சை என்றாலும் கூட உயிரைக் காப்பாற்றக்கூடிய அளவு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

முதலுதவி என்பது

முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும். நோய் அல்லது காயத்திற்கு கொடுக்கும் முதற்கட்ட கவனிப்பு என்றும் கூறலாம்.

முக்கியத்துவம்

ஒவ்வொரு இடத்திலும், அதாவது வீடு, வேலை மற்றும் எந்த சமூகக் கூட்டமும் உள்ள இடங்களில் முதலுதவி பயிற்சி பெற்றவர்கள் இருப்பது மிக முக்கியம். முதலுதவி பல உயிர்களை காப்பாற்ற உதவுகின்றது.

நிலமை மேசமடைவதனை தவிர்ப்பதற்கு முதலுதவி முக்கியமானதாகும். மற்றும் குணமாகுதலை ஊக்குவிக்குவிப்பதற்கும் முதலுதவி இன்றியமையாததாகும்.

முதலுதவியின் வரலாறு

முதன்முதலில் 16ஆம் நூற்றாண்டிலேயே அறியப்பட்டது. ஆனால் இதன் பழக்கம் இடைக்காலங்களில் வெகுவாக கைவிடப்பட்டது. அதன் பின்பு 1859 இல் ஹென்றி டியூனாண்ட் என்பவர் சல்பிரினோ போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க முன்வந்தார்.

இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கழித்து நான்கு நாடுகள் ஜெனிவாவில் சந்தித்து போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவது என்ற நோக்கோடு ஒரு சங்கத்தை உருவாக்கினார். இதுவே பின்னாளில் செஞ்சிலுவைச் சங்கமாகியது.

புனித ஜான் அவசர ஊர்தி 1877 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது அவசர உதவியை செய்வதற்காக தொடங்கப்பட்டது. இதனுடன் பல சங்கங்கள் இணைந்தன. இதுபோன்ற செயல்களால் முதலுதவி என்ற சொல் 1878 ஆம் ஆண்டு முதன்முதலில் வழங்கப்பட்டது.

1878ல் அவசர சிகிச்சை நிபுணர் பீட்டர் ஷெபர்ட் பொதுமக்களுக்கு முதலுதவி திறன்களைக் கற்றுக் கொடுக்க விரும்பினார். அவர் டாக்டர் கோல்மன் உடன் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டத்தை கொண்டு பிரஸ்பைடிரியன் எனும் பள்ளியில் பாடமாக நடாத்தினார்.

காயப்பட்டோருக்கான முதலுதவி என்ற வார்த்தையை ஷெபர்ட் தான் முதன் முதலில் பயன்படுத்தினார். அதன்பின் உலகளாவிய ரீதியில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.

முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியவை

முதலுதவிப் பெட்டியென்பது காயப்பட்டவருக்கு உதவுவதற்காக அத்தியாவசியமான மருந்துகளை உள்ளடக்கிய பெட்டியாகும்.

காயத்தை தூய்மை செய்ய மென்மையான துணி, காயத்திற்குக் கட்டுப்போட துணிச்சுருள், கத்திரிக்கோல், பிசின் நாடாக்கள், உயிர்காக்கும் மருந்துகள் அதாவது ஆஸ்பிரின், ஐப்யூப்ரோஃபன், நேப்ரோக்ஸன் போன்றவையும் அவசியம் இருத்தல் வேண்டும்.

முடிவுரை

முதலுதவி என்பது அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆபத்து என்பது எப்போது எங்கு ஏற்படும் என்று கூறிவிட முடியாது. ஆகவே முதலுதவி மேற்கொள்ளப் பயிற்சி பெற்றிருப்பவர் ஒருவர் இருப்பின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதில், மற்றவர்களின் உடல்நிலைகளில் கவனம் செலுத்துவதில் பின் நிற்க கூடாது.

முதலுதவியானது விலை மதிப்பற்ற உயிரைக் காப்பாற்றும் என்பதனால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் முதலுதவி செய்ய இந்நாளில் சபதமேற்க வேண்டும்.

You May Also Like :
போதை இல்லா உலகம் கட்டுரை
வாசிப்பின் நன்மைகள்