மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை

minsaram semippu katturai in tamil

இந்த பதிவில் “மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதன் அவனது அன்றாட செயற்பாடுகள் பல மின்சக்தியிலே தங்கியிருக்க வேண்டியுள்ளது.

மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை

மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மின்சக்தி உருவாகும் முறைகள்
  • அன்றாட வாழ்வில் மின்சாரம்
  • மின்சக்தியின் பயன்கள்
  • மின்சாரத்தை சேமிக்கும் வழிகள்
  • முடிவுரை

முன்னுரை

இன்று இந்த உலகை முடங்கச் செய்யும் மிகப்பெரிய சக்தி உண்டென்றால் அது மின்சாரமே. ஓரிரு நிமிடங்கள் மின்வெட்டு ஏற்பட்டாலே இவ்வுலகம் இருளில் மூழ்கி மக்களின் இயக்கம் தடைப்பட்டுவிடும்.

அந்தளவிற்கு மின்சக்தியானது மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்ணிப்பிணைந்துள்ளது.

பொருளாதார நடவடிக்கைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு செயற்பாடுகள், கல்வி, மருத்துவம் அனைத்துமே மின்சாரத்திலே தங்கியுள்ளன.

அத்தகைய இன்றியமையாத தேவையாக விளங்கும் மின்வளத்தை சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துவது சிறந்ததாகும்.

மின்சக்தி உருவாகும் முறைகள்

மின்சாரம் எனப்படுவது மின்னணுக்களின் ஓட்டத்தினால் உருவாகும் ஒரு நிகழ்வாகும். மின்னைப் பயன்படுத்தி ஒளி, ஒலி வெப்பம் ஆகிய மூன்றையும் உருவாக்க முடியும்.

மின்சக்தியானது நீர் மின்நிலையங்கள், கடலலை, அனல் மின்நிலையம், சூரிய ஆற்றல், காற்றின் வேகம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது.

ஆனால் பொதுவாக ஒரு நாட்டிற்கு தேவைப்படுகின்ற மின்சாரத்தின் பெரும்பாலான பகுதி நீரின் ஆற்றலை வைத்தே உருவாக்கப்படுகின்றது.

பாய்ந்தோடுகின்ற ஆறுகளை மறித்து அதிலுள்ள நீரின் உதவியுடன் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது.

பாரிய காற்றாலைகளை அமைத்து அதிலிருந்து மின்சக்தியை உருவாக்கும் முறைகளும் தற்போது பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

மழைநீரிலிருந்து மின்சாரத்தை உருவாக்கும் முறைகள் காணப்படுவதோடு, தீயின் உதவியுடன் அனல்மின் நிலையங்களில் மின்சக்தி உருவாக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கங்கள் சூரியகலங்களைப் பயன்படுத்தி மின்னை பெற்றுக் கொள்ள மக்களை ஊக்குவிக்கின்றன.

அன்றாட வாழ்வில் மின்சாரம்

மனிதன் அவனது அன்றாட செயற்பாடுகள் பல மின்சக்தியிலே தங்கியிருக்க வேண்டியுள்ளது. வீதிகளால் செல்லும் போது சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் வீதி சமிஞ்ஞை விளக்குகள் ஒளிர்வதனைக் காணலாம்.

அவை மட்டுமின்றி புகையிரத சமிக்ஞை விளக்குகளும் தடுப்புக் கடவைகளும் மின்சாரத்தினாலே இயங்குகின்றன. கிராமத்தில் வாழ்கின்றவர்களை விட நகரத்தில் வாழ்கின்றவர்கள் அதிகளவில் மின்சாரத்தை நுகர்கின்றனர்.

வீடுகளில் உணவு சமைக்கும் உபகரணங்களிலிருந்து சலவை இயந்திரம், மின் விசிறிகள், குளிரூட்டி, தொலைக்காட்சி, வெப்பமாக்கி என அனைத்து மின்சார உபகரணங்களையும் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர்.

மின்சக்தியின் பயன்கள்

மின்சாரமானது அறிவியலின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகும். ஆனால் அதுவே ஏனைய அறிவியல் கண்டுபிடிப்புகளிற்கு அடிப்படையாக அமைந்தது. அன்றாட வாழ்வில் மட்டுமல்லாது அறிவியலிலும் மின்சாரத்தின் தாக்கம் காணப்படுகின்றது.

பாடசாலையில் பயன்படுத்தப்படும் கணனிகள் கற்றல் செயற்பாட்டு உபகரணங்கள் மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மின்சாரத்தாலே இயங்குகின்றன.

தொலைத்தொடர்பு கோபுரங்கள், செய்திகளை பரிமாற்ற பயன்படும் பாரிய ரேடர்கள் வரை அனைத்தும் மின்சாரத்தினால் இயங்குகின்றன.

மின்சாரத்தை சேமிக்கும் வழிகள்

மின்சாரமானது மீள உருவாக்கக்கூடிய வளமாகக் காணப்பட்ட போதிலும் உலகெங்கிலும் அதன் பயன்பாடும் தேவையும் அதிகரித்துள்ளமையினால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

வீடுகள், பாடசாலைகள், மற்றும் வேலை செய்யும் இடங்களில் தேவையின்றி மின்விசிறிகள் இயங்குவதும், மின்குமிழ்கள் ஒளிர்வதையும் அவதானிக்கலாம். இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் மின்சாரம் விரயமாகின்றது.

இத்தகைய செயற்பாடுகளை குறைப்பதோடு, அளவிற்கு மீறிய மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். குளிரூட்டிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளை எந்நேரமும் இயங்க வைப்பதனையும் தவிர்க்க வேண்டும்.

முடிவுரை

மின்சாரத்தை சேமிப்பதெனப்படுவது அதனை சிக்கனமாகப் பயன்படுத்துதலாகும். அபிவிருத்தியடைந்த பல நாடுகள் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்கு சூரியப்படலங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

மின்சக்தியை அதிமாக வீண் விரயம் செய்து பயன்படுத்தும் போது எமக்கும் நாட்டுக்கும் வீண் செலவுகள் அதிகமாகின்றன. மக்களாகிய நாமும் இயன்றளவு மின்சாரத்தை மிகுதப்படுத்தி வாழ்வோமாக.!

You May Also Like :
மின்சார சிக்கனம் கட்டுரை
அறிவியல் வளர்ச்சி கட்டுரை